இயல் 3 உள்ளத்தின் சீர்

இயல் 3 உள்ளத்தின் சீர்

சங்க இலக்கியமான கலித்தொகையில் ஏறு தழுவுதல் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏறுதழுவுதல் முல்லைநிலத்திற்கு உரிய விளையாட்டு.

கலித்தொகை தவிர ஏறுதழுவுதல் பற்றி சிலப்பதிகாரம் , புறப்பொருள் வெண்பா மாலை, பள்ளு போன்ற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எருதுகட்டி என்னும் மாடு தழுவுதல் நிகழ்வைக் கண்ணுடையம்மன் பள்ளு பதிவு செய்துள்ளது.

சல்லிக்கட்டு பேச்சுவழக்கில் திரிபுற்று ஜல்லிக்கட்டு என அழைக்கப்படுகிறது.

தேசிய விளையாட்டாக காளைச் சண்டையைக் கொண்டுள்ள நாடு ஸ்பெயின்.

இந்திரவிழா பற்றி சிலப்பதிகாரம் & மணிமேகலையில் விவரிகாகப்பட்டுள்ளது. மணிமேகலையில் முதல் காதையான விழாலறைக் காதையில் விவரிக்கப்பட்டுள்ளது.
இந்திரவிழா நடைபெற்ற ஊர் புகார் நகரம். இந்திர விழா மொத்தம் 28 நாள்கள் நடைபெறும்.

மணிமேகலை பெண்மையை முதன்மைப்படுத்தும் புரட்சிக் காப்பியம், பண்பாட்டுக் கூறுகளைக் காட்டும் தமிழ்க்காப்பியம். இது சொற்சுவையும் பொருட்சுவையும் இயற்கை வருணனைகளும் நிறைந்தது. முப்பது காதைகளை உடையது. பௌத்த சமயச் சார்புடையது.

மதுரை அருகே கீழடி அகழாய்வுப் பொருள்கள் 2300 ஆண்டுகளுக்கு முற்பட்டவை எனக் கருதப்படுகின்றன.

ரோமனிய மட்பாண்டங்கள் அரிக்கமேடு அகழாய்வில் கிடைத்தன்.

1863 ல் இராபர்ட் புரூஸ்புட், சென்னை பல்லாவரம் பகுதியில் கற்கருவிகளைக் கணாடறிந்தார். இதுவே இந்தியாவில் கண்டெடுக்கப்பட்ட முதல் கல்லாயுதம் ஆகும்.

1914 ல் ஆதிச்சநல்லூரில் ஏராளமான முதுமக்கள் தாழிகள் கண்டறியப்பட்டன்.

டைனோசர் உலாவித் திரிந்த தமிழ் மண் என அரியலூர் , பெரம்பலூர் மாவட்டங்கள் அறியப்படுகின்றன். உலகின் மிகப்பெரிய கல்மரப் படிமமும் இங்கு தான் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் அடையாளச் சின்னமாகவும் தமிழக மாட்டினங்களின் தாய் இனம் என்று காங்கேயம் கருதப்படுகிறது. 
கரூர் அமராவதி ஆற்றுத்துறையில் காங்கேய மாடுகளின் உருவம் பொறித்த கி.மு. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த சேரர் கால நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

பட்டிமண்டபம் என்பது தான் இலக்கிய வழக்கு , ஆனால் பலரும் பட்டிமன்றம் என குறிப்பிடுகின்றனர்.

பழையன புகுதலும் பழையன கழிதலும் என்று கூறிய இலக்கணப் புலவர் பவணந்தி முனிவர்

தமிழில் எழுதப்பட்ட உலகப் பனுவல் திருக்குறள். இது முதலில் 1812 ல் தஞ்சை ஞானப்பிரகாசம் என்பவரால் அச்சிடப்பட்டுள்ளது.

திருக்குறளுக்கு முதன்முதலில் உரை எழுதியவர் மணக்குடவர்.
திருக்குறளில் இடம்பெற்ற இரண்டு மரங்கள் பனை , மூங்கில்
திருக்குறளில் கோடி என்ற சொல் ஏழு இடங்களில் இடம்பெற்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.