இயல் 4 எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

இயல் 4 எட்டுத்திக்கும் சென்றிடுவீர்

1959 ல் ஒளிப்படி இயந்திரம் ( Photo copier or xerox ) உலகிற்கு அறிமுகப்படுத்தியவர் செஸ்டர் கார்ல்சன்.

1846 ல் குறியீடுகளை மின்னாற்றல் உதவியுடன் அச்சிடுவதில் வெற்றி கண்டு காப்பரிமை பெற்றவர் அலெக்சாண்டர் பெயின்

பான்டெலிகிராப் என்ற தொலைநகல் கருவியை உருவாக்கியவர் ஜியோவான்னி காசில்லி.

1985 ல் கணினி மூலம் தொலை நகல் எடுக்கும் தொழில்நுட்பம் கண்டுபிடித்தவர் ஹாங்க் மாக்னஸ்கி.

தானியக்க பண இயந்திரம் (ATM) கண்டறிந்தவர் ஜான் ஷெப்பர்டு பாரன். 1967 june 27 ல் இலண்டனில் நிறுவப்பட்டது.

1962 ல் கடவுச்சொல்லுடன் கூடிய அட்டைக்கு காப்புரிமை பெற்றவர் ஆட்ரியன் ஆஷ்பீல்டு.

1979 ல் இணைய வணிகத்தை கண்டுபிடித்தவர் மைக்கேல் ஆல்ட்ரிச்.

1989 ல் அமெரிக்காவில் இணையவழி மளிகைக்கடை தொடங்கப்பட்டது.

1990 ல் டிம் பெர்னெர்ஸ் லீ வையக விரிவு வலை வழங்கியை உருவாக்கினார்.

1991ல் இணையம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வந்தது.

கள்ளிக்காட்டு இதிகாசம் புதினத்துக்காக 2003 ம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றவர் வைரமுத்து.
இவர் இந்தியாவின் தலைசிறந்த பாடலாசிரியருக்கான தேசிய விருதை ஏழு முறையும் மாநில அரசின் விருதை நான்கு முறையும் பெற்றவர்.

இஸ்ரோவின் 9வது தலைவர் சிவன். 2015 ம் ஆண்டில் விக்ரம் சாராபிய் விண்வெளி மையத்தின் இயக்குநராக இருந்து , ISRO வின் தலைவராகப் பெறுப்பேற்றுள்ளார்.

இந்திய விண்வெளி திட்டத்தின் தந்தை மற்றும் ஆரியப்பட்டா என்ற முதல் செயற்கைக்கோள் ஏவுதலுக்கு காரணமானவர் விக்ரம் சாராபாய்.

சித்தாரா – SITARA ( Software for Integrated Trajectory Analysis with Real time Application ) என்ற செயலியை உருவாக்கியவர் – தற்போதைய இஸ்ரோ தலைவர் சிவன்.
அனைத்து செயற்கை கோள்களும் சித்தாரா செயலியை பயன்படுத்தி தான் விண்ணில் ஏவப்படுகின்றன.

இந்திய ஏவுகணை நாயகன் அப்துல்கலாம்.

தமிழ்நாடு அரசின் அப்துல்கலாம் விருதைப் பெற்ற முதல் அறிவியல் அறிஞர் வளர்மதி . இவர் இஸ்ரோவின் செயற்கைகோள் திட்ட இயக்குநராக பணியாற்றிய இரண்டாவது பெண் அறிவியல் அறிஞர்.

இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் அறிவியலாளர் மற்றும் திட்ட இயக்குனர் அருணன் சுப்பையா. இவர் மங்கல்யான் செவ்வாய் சுற்றுக்கலன் திட்ட இயக்குநராகவும் உள்ளார்.

இளைய கலாம் என்று அன்புடன் அழைக்கப்படுபவர் மயில்சாமிஅண்ணாதுரை. சந்திராயன்-1 திட்ட இயக்குநராக பணியாற்றியவர்.
மயில்சாமி அண்ணாதுரை சர்.சி.வி ராமன் விருது உள்ளிட்ட பல விருதுகளைப் பெற்றவர். இவர் தன் அறிவியல் அனுபவங்களை ‘கையருகே நிலா ‘ என்ற நூலாக எழுதி உள்ளார்.

ஏன்? எதற்கு? எப்படி? என்ற நூலை எழுதியவர் சுஜாதா

Leave a Reply

Your email address will not be published.