6 ஆம் வகுப்பு கணித பாடக் குறிப்புகள்

ஓர் எண்ணுடன் 1 ஐக் கூட்டினால் கிடைப்பது, அந்த எண்ணின் ‘தொடரி’ ஆகும்.

ஓர் எண்ணிலிருந்து 1 ஐக் கழித்தால் கிடைப்பது, அந்த எண்ணின் ‘முன்னி’ ஆகும்.

தமிழ்நாட்டில் ஏறத்தாழ 26,345 ச.கிமீ வனப்பகுதி உள்ளது.

பால்வெளித் திரளில் ஏறத்தாழ 20,000 கோடி விண்மீன்கள் உள்ளன

10^100googol என்று அழைக்கிறோம்.(இங்கு, பத்தால் 100 முறை பெருக்கப்படுகிறது)
10^googol  என்பது
googolplex என்று அழைக்கிறோம்.

மாநிலம்                 பரப்பளவு (சதுரக் கிமீ)

தமிழ்நாடு                         1,30,058
கேரளா                                  38,863
கர்நாடகா                          1,91,791
ஆந்திரப் பிரதேசம்        1,62,968


“ ” மற்றும் “ ” குறியீடுகளை முதலில் பயன்படுத்தியவர் புகழ்பெற்ற கணிதமேதை தாமஸ் ஹாரியாட் (1560 – 1621)

இந்திய மற்றும் பன்னாட்டு முறையில் காற்புள்ளியின் பயன்பாடு வேறுபடுகிறது.

கொடுக்கப்பட்ட எண்ணின் மதிப்பினை உவந்த துல்லியத்தோடு குறிப்பதை உத்தேச மதிப்பு என்கிறோம்.

முழு எண்களில் மிகச் சிறிய எண் ‘0’ ஆகும்.

0 மற்றும் 1 முறையே முழு எண்களின் கூட்டல் சமனி மற்றும் பெருக்கல் சமனி ஆகும்.

முழு எண்களை எவ்வரிசையிலும் கூட்டவும் அல்லது பெருக்கவும் முடியும். எனவே , இது பரிமாற்றுப் பண்புடையது.

முழு எண்களின் பெருக்கலானது பரிமாற்று மற்றும் சேர்ப்புப் பண்புகளை உடையது.

கூட்டலின் மீதான பெருக்கலின் பங்கீட்டுப் பண்பை முழு எண்கள் நிறைவு செய்யும்.
முழு எண்களைப் பூச்சியத்தால் வகுப்பது வரையறுக்கப்படவில்லை

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணுருவை எவ்வாறு படிப்பாய்?
731,687,303,715,884,105,727

இதனை 731 quintillion (குயின்டில்லியன்), 687 quadrillion (குவாட் டிரில்லியன்), 303 trillion (டிரில்லியன்), 715 billion (பில்லியன்), 884 million (மில்லியன்), 
105 thousand (ஆயிரம்), 727. எனப் படிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள  மக்கள் தொகையின் அடர்த்தி ஒரு சதுர கி.மீ இக்கு 555 நபர்கள்

‘Geo’ என்பது புவி மற்றும் ‘metron’ என்பது அளவீடு. இந்த இரு கிரேக்கச் சொற்களிலிருந்து Geometry என்ற சொல் பெறப்பட்டது. வடிவியல் என்பது புவியின் அளவீடு ஆகும். கி.மு. 600 இல்கி ரேக்க நகரம் மிலட்டஸ்-ஐச் சார்ந்த தேல்ஸ் முதலில் வடிவியல் கருத்துகளைப் பயன்படுத்தினார். கிரேக்கக் கணிதவியலறிஞர் பிதாகரஸ் வடிவியலின் முறையான வளர்ச்சிக்கு உதவியவர்.

180° இக்கும் அதிகமான கோண அமைவு பின்வளைக் கோணம்
எனப்படும்.  கொடுக்கப்பட்ட கோணத்தை, 360° கோணத்தில்
இருந்து கழிக்க பின்வளைக் கோணம் கிடைக்கி்றது.

கிரேக்கக் கணிதவியல் அறிஞர் யூக்ளிட்

இவர் தள வடிவியல் சார்ந்த கொள்கைகளை உள்ளடக்கிய 13 தொகுப்புகளை கொண்ட ‘ELEMENTS’ என்ற நூலை வழங்கியமைக்காக அடையாளம் காணப்பட்டார் . இந்நூல் உலகம் முழுவதும், தலைமுறைதோறும், வடிவியலுக்கான புரிதலில் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.

தரவு என்றால் தகவல்கள் மற்றும் எண்ணுருக்களைக் கொண்டு முடிவுகளைப் பெறுதல் ஆகும். தரவு என்பது தகவல்களைச் சேகரிப்பது, அளவிடுவது மற்றும் பகுப்பது, பிறகு அவற்றைப் படமாகவோ அல்லது வரைபடமாகவோ காட்சிபடுத்துவது ஆகும்.

தரவு” (Data) என்ற சொல் முதன்முதலில் 1640 களில் பயன்படுத்தப்பட்டது. 
1946 இல் “தரவு” என்ற சொல் “பரிமாற்றத்திற்கும், கணினியில் சேமித்து வைப்பதற்கும் உகந்த” என்று பொருள்பட்டது. 1954 இல் தகவல் செயலாக்கம் (Data Processing) என்ற சொல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இலத்தீன் மொழியில் “கொடுத்த” அல்லது “கொடுக்க” எனப் பொருள்படும்.

முற்காலத்தில் படவி்ளக்கப்ப்டங்களே எழுத்து வடிவமாக பயனபடுத்தப்பட்டன. கி.மு.3000 ஆண்டு்களுக்கு முன்பாகவே எகிப்து மெசபடோமியாவில் இம்முறையை பயனபடுத்தினர்.

பிரசாந்த சந்த்ர மஹலானோபிஸ் இவர் வங்காளத்திலுள்ள பிக்ராம்பூரில் பிறந்தார். இவர் இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தை நிறுவியவர் ஆவார். மேலும் இந்திய அரசாங்கத்திற்குப் புள்ளியியல் விவர ஆய்வில் பெரிதும் உதவி புரிந்தவர்.

சுடோகு என்ற சொல்லானது ஜப்பானிய மொழியிலிருந்து வந்தாகும். இதில் ‘சு’ என்பதற்கு ‘எண்’ என்றும் ‘டோகு’ என்பதற்கு ‘ஒற்றை ’ என்றும் பொருள்.
நவீன சுடோகுவை க் கண்டறிந்தவர் ஹாவர்டு கார்ன்ஸ். இவர் அமெரிக்காவைச்(இண்டியானா) சேர்ந்த 74 வயது கட்டடக் கலைஞர். இந்தச் சுடோகு 1979 இல் வெளியிடப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.