9th Science Guide Chapter 1 அளவீடு

1. அளவீடுகளும், அளவிடும் கருவிகளும்
1960 ம் ஆண்டு, எடைகள் மற்றும் அளவுகளுக்கான மாநாட்டில் SI அலகு 
முறையானது (பன்னாட்டு அலகுமுறை ) உலக நாடுகளின்
பயன்பாட்டிற்காக உருவாக்கப்பட்டு, பரிந்துரைக்கப்பட்டது.

SI அலகு முறை யில் ஏழு அடிப்படை அலகுகள் (fundamental units) உள்ளன. அவை அடிமான அலகுகள் (base units) என்றும் வழங்கப்படுகின்றன.

ஃபோர்ட்நைட் (Fort night) என்பது இரண்டு வாரங்கள் அல்லது 14 நாட்கள்.

ஒரு கண ம் (moment) என்பது 1/40 மணி நேரம் அல்லது 1.5 நிமிடம் ஆகும்.

ஆட்டோமஸ் (Atomus): நம்மால் கற்பனை செய்து பார்க்கக்கூடிய மிகக் குறைந்த கால அளவாகிய கண் இமைக்கும் நேரமாகும்.
இதன் மதிப்பு 1/6.25 வினாடி அல்லது 160 மில்லி வினாடி ஆகும்.

கழுதைத் திறன் என்பது குதிரைத்திறனில் 1/3 மடங்கு ஆகும். இதன் மதிப்பு
ஏறக்குறைய 250 வாட் ஆகும்.

ஒளியானது 1 / 29, 97, 92, 458 விநாடியில் வெற்றிடத்தில் கடக்கும் தூரமே ஒரு மீட்டர் எனப்படும்.

ஒளி ஆண்டு என்பது ஒளியானது வெற்றிடத்தில் ஓராண்டு காலம் பயணம்
செய்யும் தொலைவு ஆகும். ஒரு ஒளி ஆண்டு = 9.46 X 10^15 மீ

வானியல் அலகு என்பது புவி மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும்
இடையேயான சராசரித் தலைவு ஆகும்.
ஒரு வானியல் அலகு (1AU) = 1.496 X 10^11 மீ

விண்ணியல் ஆரம் என்பது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வானியல்
பொருட்களின் தூரத்தை அளவிடப்பயன்படுகிறது. 
ஒரு விண்ணியல் ஆரம் =  3.26 ஒளி ஆண்டு

நமக்கு மிக அருகில் உள்ள நட்சத்திரம் ஆல்ஃபா சென்டாரி (alpha centauri)
சூரியனிலிருந்து 1.34 விண்ணியல் ஆரத்தொலைவில் உள்ள து. இரவு
நேரங்களில் நமது வெறும் கண் ணிற்குத்தெரியும் நட்சத்திரங்கள் சூரியனிலிருந்து 500 விண்ணியல் ஆரத்தொலைவிற்குள் உள்ளன.

மனித உடம்பில் உள்ள அனைத்து இரத்தக்குழாய்களின் மொத்த நீளம்
96,000 கிமீஆகும். 

பிறக்கும் பொழுது, ஒரு ஒட்டகச்சிவிங்கிக்குட்டியின் உயரம் 1.8 மீ (6 அடி)

பச்சோந்தியின் நாக்கின் நீளம் அதன் உடம்பின் நீளத்தை விட இரு மடங்காகும்.

1 அடி = 30.4 செமீ
1 மீ = 3.2 அடி
1 அங்குலம் (இன்ச்) = 2.54 செமீ
ஒரு மீட்டர் என்பது ஏறக்குறை ய 40 அங்குலத்திற்குச் சமமானது.

1 குவிண்டால் = 100 கி.கி
1 மெட்ரிக் டன் = 1000 கி.கி= 10 குவிண்டா ல்
1 சூரிய நிறை = 2×10^30 கி.கி

அணுநிறை அலகு (1 amu) = C12 அணுவின் நிறையில் 1/12 மடங்கு நிறை ஆகும்.

TMC (Thousand Million Cubic Feet) என்பது நூறு கோடி கனஅடி அளவாகும். 
TMC = 2.83×10^10 லிட்டர் தோராயமாக 1 TMC = 3000 கோடி லிட்டர் ஆகும்.

ஒரு வினாடி என்பது சராசரி சூரிய நாளின் 1 / 86400 பங்கு என்றும்
வழங்கப்படுகின்றது. காலத்தின் மிகப் பெரிய அலகு மில்லினியம் ஆகும். 
1 மில்லினியம் = 3.16×10^9s

ஒரு மணி = 2.5 நாழிகை
ஒரு நாள் = 60 நாழிகை (பகல் நேரம் 30 நாழிகை , இரவு நேரம் 30 நாழிகை ) 

வெப்பநிலை அலகு மாற்ற அட்டவணை

                                  ஃபாரன்ஹீட்         செல்சியஸ்            கெல்வின்
ஃபாரன்ஹீட்(F)              F                       (F-32)x 5/9           (F-32) x (5 / 9) + 273

செல்சியஸ்(C)        ( Cx (9/5))+32                  C                         C+273

கெல்வின்(K)          (K-273) x( 9 / 5)+32      K – 273                       K
கிரிக்கெட் பந்து, கோலிக்குண்டு போன்ற கோளக வடிவ பொருட்கள் மற்றும் தேநீர்க் குடுவை , பேனா மூடி போன்ற உள்ளீடற்ற பொருட்களின் விட்டங்களை அளக்க வெர்னியர் அளவியைப் பயன்படுத்தலாம்.
வெர்னியர் அளவுகோலில் மீச்சிற்றளவு = 0.1 mm = 0.01 cm

திருகு அளவி ஒரு மில்லி மீட்டரில் நூறில் ஒரு பங்கு (0.01மி.மீ) அளவிற்குத்
துல்லியமாக அளவிடும் கருவியாகும். இக்கருவி மெல்லிய கம்பியின்
விட்டம், மெல்லிய உலோகத் தகட்டின் தடிமன் போன்றவற்றை அளவிட பயன்படுகிறது.

திருகு அளவியின் மீச்சிற்றளவு = 0.01 mm = 0.001 cm

ஒரு முட்டையின் ஓடானது அந்த முட்டையின் எடையில் 12% ஆகும்.

ஒரு நீலத்திமிங்கலத்தின் எடை 30 யானைகளின் எடைக்குச் சமம். அதன்
நீளம் மூன்று பேருந்துகளின் நீளத்திற்குச் சமம்.

பொதுத் தராசினைக் கொண்டு துல்லியமாக அளவிடக்கூடிய நிறை 5 கி.கி.

இயற்பியல் தராசு, எண்ணிலக்கத் தராசு போன்றவற்றின் துல்லியத் தன்மை 
1 மி.கி.

 பொதுத் தராசுத் தராசு, இயற்பியல் தராசு, இரு தட்டுத் தராசு, எண்ணிலக்கத் தராசு போன்றவற்றை நிறையை அளவிடப் பயன்படுத்துகின்றனர்.

சுருள் வில் தராசு பொருளின் எடையைக் கணக்கிடப் பயன்படுகிறது.

ஒரு மனிதனின் நிறை = 5 0 கி.கி எனில்,

எடை (w) = 50 x 9.8 = 490 நியூட்டன்

நிலவில் புவியீர்ப்பு முடுக்கம் 1.63 மீ/வி^2 ஆகும்.

70 கி.கி நிறை யுள்ள மனிதனின் எடை புவியில் 686 நியூட்டனாகவும், நிலவில் 114 நியூட்டனாகவும் உள்ள து. ஆனால் அவரது நிறை 70 கிலோகிராமாகவே உள்ளது.

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

 1. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
  அ) மி.மீ < செ.மீ மீ கி.மீ
  ஆ) மி.மீ > செ.மீ > மீ > கி.மீ
  இ) கி.மீ<e <செ.மீ < மி.மீ
  ஈ) மி.மீ > மீ > செ.மீ > கி.மீ
  விடை : அ) மி.மீ < செ.மீ.<l < கி.மீ
 2. 2.அளவுகோல், அளவிடும் நாடா மற்றும் மீட்டர் அளவுகோல் ஆகியவை கீழ்க்கண்ட எந்த அளவை அளவிடப் பயன்படுகின்றன?
  அ) நிறை
  ஆ) எடை
  இ) காலம்
  ஈ) நீளம்
  விடை: ஈ) நீளம்
 3. ஒரு மெட்ரிக் டன் என்பது
  அ) 100 குவின்டால்
  ஆ) 10 குவின்டால்
  இ) 1/10 குவின்டால்
  ஈ) 1/100 குவின்டால்
  விடை: ஆ) 10 குவின்டால்
 4. கீழ்க்கண்டவற்றுள் எது நிறையை அளவிடும் கருவியல்ல ?
  அ) சுருள் தராசு
  ஆ) பொதுத் தராசு
  இ) இயற்பியல் தராசு
  ஈ) எண்ணியல் தராசு
  விடை: அ) சுருள் தராசு

II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

 1. _____________ ன் அலகு மீட்டர் ஆகும்.
  விடை: நீளம்
 2. 1 கி.கி அரிசியினை அளவிட _____________ தராசு பயன்படுகிறது.
  விடை: பொதுத்
 3. கிரிக்கெட் பந்தின் தடிமனை அளவிடப் பயன்படுவது _____________ கருவியாகும்.
  விடை: வெர்னியர் அளவி
 4. மெல்லிய கம்பியின் ஆரத்தை அளவிட _____________ பயன்படுகிறது
  விடை: திருகு அளவி
 5. இயற்பியல் தராசைப் பயன்படுத்தி அளவிடக் கூடிய துல்லியமான நிறை _____________ ஆகும்.
  விடை: 10 மில்லி கிராம்

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

 1. மின்னோட்டத்தின் SI அலகு கிலோகிராம்
  விடை : தவறு – மின்னோட்டத்தின் SI அலகு ஆம்பியர்
 2. கிலோமீட்டர் என்பது ஒரு SI அலகு முறை
  விடை : தவறு – மீட்டர் என்பது ஒரு SI அலகு முறை
 3. அன்றாட வாழ்வில், நாம் நிறை என்ற பதத்திற்குப் பதிலாக எடை என்ற பதத்தைப் பயன்படுத்துகிறோம்.
  விடை: சரி
 4. இயற்பியல் தராசு, பொதுத் தராசை விடத் துல்லியமானது. அது மில்லிகிராம் அளவிற்கு நிறையைத் துல்லியமாக அளவிடப் பயன்படுகிறது.
  விடை: சரி
 5. ஒரு டிகிரி செல்சியஸ் என்பது 1K இடைவெளி ஆகும். பூஜ்ஜியம் டிகிரி செல்சியஸ் என்பது 273.15k
  விடை: சரி
 6. வெர்னியர் அளவியின் உதவியால் 0.1 மிமீ அளவிற்கும், திருகு அளவியின் உதவியால் 0.01 மி.மீ அளவிற்கும் துல்லியமாக அளவிட முடியும்.
  விடை: சரி

IV. பொருத்துக

1.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 1 அளவீடு 1

2.
Samacheer Kalvi 9th Science Guide Chapter 1 அளவீடு 2

V. கூற்று மற்றும் காரண வகை. பின்வருமாறு விடையளி :

 1. கூற்று (A) : ஒரு பையின் நிறை 10கி.கி என்பது அறிவியல் பூர்வமாக சரியான வெளிப்படுத்துதல் ஆகும்.
  காரணம்(R) : அன்றாட வாழ்வில் நாம் நிறை என்ற வார்த்தைக்குப் பதிலாக எடை என்ற வார்த்தையைப் பயன்படுத்துகிறோம்.
  அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
  இ) A சரி ஆனால் R தவறு
  ஈ) A தவறு ஆனால் R சரி
  விடை: ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்.
 2. கூற்று(A) : 0°c = 273.16 K நாம் அதை முழு எண்ணாக 273 K என எடுத்துக் கொள்கிறோம்.
  காரணம்(R) : செல்சியஸ் அளவை கெல்வின் அளவிற்கு மாற்றும் போது 273 ஐக் கூட்டினால் போதுமானது.
  அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
  இ) A சரி ஆனால் R தவறு
  ஈ) A தவறு ஆனால் சரி
  விடை: ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
 3. கூற்று (A) : இரண்டு வான் பொருட்களுக்கு இடையே உள்ள தொலைவு ஒளி ஆண்டு என்ற அலகினால் அளக்கப்படுகிறது.
  காரணம் (R) : ஒளியானது தொடர்ந்து ஒரு ஆண்டு செல்லக்கூடிய தொலைவு ஓர் ஒளி ஆண்டு எனப்படும்.
  அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
  இ) A சரி ஆனால் R தவறு
  ஈ) A தவறு ஆனால் R சரி
  விடை: ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

 1. இயற்பியல் அளவுகோளின் இரு வகைகள் ……………….. , ………………..
  விடை: அடிப்படை. அளவுகள், வழி அளவுகள்
 2. வேறு எந்த ஒரு அளவினாலும் குறிப்பிட முடியாத அளவுகள் ……………………………….. எனப்படும்.
  விடை: அடிப்படை அளவுகள்
 3. வேறு அளவுகளினால் குறிப்பிடக்கூடிய அளவுகள் ………………………………..
  விடை: வழி அளவுகள்
 4. அடிப்படை அளவுகளுக்கு உதாரணம் ………………………………….
  விடை: நீளம், நிறை, காலம்
 5. வழி அளவுகளுக்கு உதாரணம் …………………………….., …………………………….., ……………………………..
  விடை:பரப்பளவு, கன அளவு, அடர்த்தி
 6. பன்னாட்டு அலகுமுறை ………………………… எனவும் அழைக்கப்படுகிறது.
  விடை: அலகுமுறை
 7. தெரியாத அளவு ஒன்றுடன் ஒப்பிடக்கூடிய படித்தரமான அளவு ……………………………… ஆகும்.
  விடை: அலகு
 8. ஒளிச்செறிவின் SI அலகு …………………………..
  விடை: கேண்டிலா
 9. அடிப்படை அலகுகளின் எண்ணிக்கை …………………………………
  விடை: 7
 10. ஃபோர்ட் நைட் என்பது ……………………………. நாட்கள்
  விடை: 14
 11. ஒரு ஆட்டோமஸ் = ……………………………. வினாடி
  விடை: 16.25 வினாடி அல்லது 160 மில்லி வினாடி
 12. கழுதைத்திறன் என்பது குதிரைத்திறனில் ……………………….. மடங்கு
  விடை: 1/3
 13. ஒரு கழுதைத் திறன் = ……………………………….. வாட்
  விடை: 250
 14. விசையின் SI அலகு …………………………….
  விடை: கி.கி/M2 அல்லது நியூட்டன் (n)
 15. ஒளி வெற்றிடத்தில் ஓராண்டு பயணம் செய்யும் தொலைவு. …………………………… ஆகும்
  விடை: ஒளியாண்டு
 16. ஒரு ஒளியாண்டு ………………………. மீ
  விடை: 946 x 1015 மீ
 17. ஆற்றலின் SI அலகு ……………………………..
  விடை: நீயூட்டன் மீட்டர் (அல்லது) ஜீல் (J)
 18. புவியின் மையத்திற்கும் சூரியனின் மையத்திற்கும் உள்ள சராசரித் தொலைவு …………..
  விடை:வானியல் அலகு
 19. ஒரு வானியல் அலகு 1 AU = ………… மீ
  விடை: 1.496 x 1011 மீ
 20. ஒரு விண்ணியல் ஆரம் = ………………………………
  விடை:3.26 ஒளி ஆண்டு
 21. நமக்கு சூரியனுக்கு அடுத்து மிக அருகில் உள்ள நட்சத்திரம் ……………………………..
  விடை:ஆல்ஃபா கென்டாரி
 22. ஒரு மைக்ரான் = ……………………………… மீ
  விடை: 10-6
 23. ஒரு ஆங்ஸ்ட்ர ம் (1 A°) ……………………………… மீ
  விடை: 10-10
 24. மனித உடலில் இரத்தக் குழாய்களின் மொத்த நீளம் ………………………….
  விடை: 96000 கி.மீ
 25. பச்சோந்தியின் நாக்கின் நீளம் அதன் உடம்பின் நீளத்தை விட …………………………. மடங்கு அதிகம்
  விடை: இரு மடங்கு
 26. புரோட்டான், நியூட்ரான்களின் நிறை ………. என்ற அலகால் அளவிடப்படுகிறது.
  விடை: அணு நிறை அலகு
 27. 1 TMC = ……….
  விடை:2.83 x 1010 லிட்டர்
 28. 1 மெட்ரிக் டன் = …………. கிகி
  விடை: 1000
 29. 1 சூரிய நிறை …………. கிகி
  விடை: 2 x 1030
 30. வெர்னியர் அளவியின் மீச்சிற்றளவு = ………..
  விடை: 0.01 செ.மீ
 31. ஒரு நாணயத்தின் தடிமனை கண்டறிய …………. பயன்படுகிறது.
  விடை: திருகு அளவி
 32. திருகு அளவியின் மீச்சிற்றளவு
  விடை: 0.01 மிமீ
 33. வெர்னியர் அளவியை வடிவமைத்தவர்
  விடை: பியரி வெர்னியர்
 34. தலைக்கோலில் பிரிவுகளின் எண்ணிக்கை ………..
  விடை: 100
 35. வெர்னியர் அளவுகோலின் சுழிப்பிரிவு முதன்மை அளவு கோலின் சுழிப்பிரிவிற்கு இடப்புறம் அமைந்தால் அது ……… எனப்படும்
  விடை: எதிர் சுழிப்பிழை
 36. திருகு அளவியில் தலைக்கோலின் சுழிப்பிரிவு புரிக்கோலின் வரைகோட்டுக்கு கீழ் அமைந்தால் அது ……….. ஆகும்.
  விடை: நேர்பிழை
 37. திருகு அளவியில் தலைக்கோலின் சுழிப்பிரிவு புரிக்கோலின் வரைக்கோட்டுக்கு மேல் அமைந்தால் அது ……… பிழை எனப்படும்
  விடை: எதிர்பிழை
 38. படித்தர நிறைகளோடு பொருட்களை ஒப்பிட்டு அளவீடு செய்யப்பயன்படும் கருவி ………… ஆகும்.
  விடை: பொதுத்தராசு
 39. சுருள்வில்தராசு பொருளின் …… ஐ கணக்கிடப் பயன்படுகிறது.
  விடை: எடை
 40. சுருள்வில் தராசு……….. விதிப்படி செயல்படுகிறது.
  விடை: ஹீக்விதி
 41. தற்காலத்தில் பொருளின் நிறையை மிகத் துல்லியமாக கணக்கிடப் பயன்படும் தராசு.
  விடை: எண்ணியல் தராசு
 42. ஆய்வகங்களில் பயன்படுவது ………
  விடை: இயற்பியல் தராசு
 43. பொதுத்தராசைக் கொண்டு துல்லியமாக அளவிடக்கூடிய நிறை ……..
  விடை: 5 கி.கி.
 44. ஒரு பொருளின் உள்ள பருப்பொருளின் அளவு ………. எனப்படும்
  விடை: நிறை
 45. ஒரு பொருளின் மீது செயல்படும் புவி ஈர்ப்பு விசை…….. ஆகும்.
  விடை:எடை
 46. நீரின் முப்புள்ளியில் வெப்ப இயக்கவியலின் வெப்பநிலையில் 1/273.16 பங்கு ………… ஆகும்.
  விடை:கெல்வின் (K)
 47. மின்னோட்டத்தின் அடிப்படை அலகு ……..
  விடை: ஆம்பியர் (A)
 48. சீசியம் 133 அணுவில் ஏற்படும் 9192631770 அதிர்வுகளுக்கு எடுத்துக் கொள்ளும் காலம் ……… எனப்படும்.
  விடை: ஒரு வினாடி
 49. மின் தடையின் அலகு ……………
  விடை: ஓம் (Ω)
 50. வேலை செய்யும் வீதம் ………… எனப்படும் இதன் அலகு ………..
  விடை: திறன், வாட் (W)

II. சரியா? துவறா? தவறெனில் திருத்துக.

 1. காலத்திற்கான அலகு ஒளி ஆண்டு ஆகும். (வினாடி
  காலத்திற்கான அலகு வினாடி (S) ஆகும்.
  விடை: தவறு
 2. புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களின் நிறையை அணு நிறை அலகால் அளவிடலாம்.
  விடை: சரி
 3. 27°C வெப்பநிலைக்கு சமமான கெல்வின் வெப்பநிலை 300 ஆகும்.
  விடை: சரி
 4. குறிப்பிட்டபெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை பெரிய எழுத்தால் (Capital தவறு letter) எழுத வேண்டும்
  குறிப்பிட்ட பெயரால் வழங்கப்படாத அலகுகளின் குறியீடுகளை சிறிய எழுத்தால் எழுத வேண்டும்
  விடை: தவறு
 5. இயற்பியல் தராசு பொருளின் எடையைக் கணக்கிடப் பயன்படுகிறது. இயற்பியல் தராசு ஆய்வகங்களில் பயன்படுகிறது.
  விடை: தவறு

III. பொருத்துக

Samacheer Kalvi 9th Science Guide Chapter 1 அளவீடு 8
Samacheer Kalvi 9th Science Guide Chapter 1 அளவீடு 9

IV. கூற்று மற்றும் காரணம் வகை

 1. கூற்று (A) : வேறு எந்தவொரு அளவினாலும் குறிப்பிட முடியாத அளவுகளை அடிப்படை அளவுகள் என்கிறோம்.
  காரணம் (R) : பரப்பளவு, கன அளவு மற்றும் அடர்த்தி போன்றவை அடிப்படை அளவு ஆகும்.
  அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
  இ) A சரி ஆனால் R தவறு
  ஈ) A தவறு ஆனால் R சரி
  விடை: இ) A சரி ஆனால் R தவறு
 2. கூற்று (A) : பழங்கால அளவீட்டு முறைகளில் பெரும்பாலானவை மனித உடல் பரிமானங்களின் அடிப்படையிலேயே அமைந்திருந்தன.
  காரணம் (R) : இதன் விளைவாக, அளவீடுகளின் மதிப்பு நபருக்கு நபர் மாறுபட்டன.
  அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.
  ஆ) A மற்றும் R இரண்டும் சரி. மேலும் R என்பது சரியான விளக்கம்
  இ) A சரி ஆனால் R தவறு
  ஈ) A தவறு ஆனால் R சரி
  விடை: அ) A மற்றும் R இரண்டும் சரி. ஆனால் R என்பது சரியான விளக்கம் அல்ல.

V. கோடிட்ட இடங்களை நிரப்புக

 1. அடர்த்தி : நிறை முடுக்கம் ; விசை : __________________
  விடை: நிறை X முடுக்கம்
 2. அழுத்தம்: பாஸ்கல்; ஆற்றல் : __________________
  விடை: ஜீல்
 3. புரோட்டான் : அணு நிறை அலகு, வானியல் பொருட்கள் : __________________
  விடை: சூரிய நிறை
 4. 300 கெல்வின் : 27° செல்சியஸ் 104 பாரன்ஹீட்’ செல்சியஸ் __________________
  விடை: 40
 5. வெர்னியர் அளவி : 0.01 செ.மீ திருகு அளவி : __________________
  விடை: 0.01 மி.மீ

Leave a Reply

Your email address will not be published.