பகுதி – I. புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
- ஏறும் கொடிகள் தங்களுக்கு பொருத்தமான ஆதரவைக் கண்டறிய உதவும் இயக்க அசைவுகள் ________
அ) ஒளி சார்பசைவு
ஆ) புவி சார்பசைவு
இ) தொடு சார்பசைவு
ஈ) வேதி சார்பசைவு
விடை:இ) தொடு சார்பசைவு - ஒளிச்சேர்கையின் போது நடைபெறுவது
அ) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது.
ஆ) நீர் ஒடுக்கமடைதல் மற்றும் CO2 ஆக்ஸிகரணம் அடைதல்
இ) நீர் மற்றும் CO2 இரண்டுமே ஆக்ஸிகரணம் அடைதல்
ஈ) CO2 மற்றும் நீர் இரண்டுமே உற்பத்தி செய்யப்படுகின்றன.
விடை:அ) CO2 இழுக்கப்பட்டு O2 வெளியேற்றப்படுகிறது - நீர் தூண்டலுக்கு ஏற்ப தாவர வேர் வளைவது _____ எனப்படும்.
அ) நடுக்கமுறு வளைதல்
ஆ) ஒளிசார்பசைவு
இ) நீர்சார்பசைவு
ஈ) ஒளியுறு வளைதல்
விடை:இ) நீர்சார்பசைவு - இளம் நாற்றுகளை இருட்டறையில் வைக்க வேண்டும். பிறகு அதன் அருகில் எரியும் மெழுகுவர்த்தியினை சில நாட்களுக்கு வைக்க வேண்டும். இளம் நாற்றுகளின் மேல் முனைப்பகுதி எரியும் மெழுகுவர்த்தியை நோக்கி வளையும். இவ்வகை வளைதல் எதற்கு எடுத்துக்காட்டு?
அ) வேதி சார்பசைவு
ஆ) நடுக்கமுறு வளைதல்
இ) ஒளி சார்பசைவு
ஈ) புவிஈர்ப்பு சார்பசைவு
விடை:இ) ஒளி சார்பசைவு - தாவரத்தின் வேர் ____ ஆகும்?
I. நேர் ஒளிசார்பசைவு ஆனால் எதிர் புவி ஈர்ப்பு சார்பசைவு
II. நேர் புவிஈர்ப்பு சார்பசைவு ஆனால் எதிர் ஒளி சார்பசைவு
III. எதிர் ஒளி சார்பசைவு ஆனால் நேர் நீர்சார்பசைவு
IV. எதிர் நீர் சார்பசைவு ஆனால் நேர் ஒளி சார்பசைவு
அ) 1 மற்றும் II
ஆ) II மற்றும் III
இ) III மற்றும் IV
ஈ) 1 மற்றும் IV
விடை:ஆ) II மற்றும் III - வெப்பத் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு திசை சாரா தூண்டல் அசைவுகளை உருவாக்குவது _____ எனப்படும்.
அ) வெப்ப சார்பசைவு
ஆ) வெப்பமுறு வளைதல்
இ) வேதி சார்பசைவு
ஈ) நடுக்கமுறு வளைதல்
விடை:ஆ) வெப்பமுறு வளைதல் - இலையில் காணப்படும் பச்சையம் ____ க்கு தேவைப்படும்.
அ) ஒளிச்சேர்க்கை
ஆ) நீராவிப்போக்கு
இ) சார்பசைவு
ஈ) திசை சாரா தூண்டல் அசைவு
விடை:அ) ஒளிச்சேர்க்கை - நீராவிப் போக்கு ____ ல் நடைபெறும்.
அ) பழம்
ஆ) விதை
இ) மலர்
ஈ) இலைத்துளை
விடை:ஈ) இலைத்துளை
II. கோடிட்ட இடங்களை நிரப்பு
- ______ இன் துலங்கலால் தண்டுத் தொகுப்பு மேல்நோக்கி வளர்கிறது.
விடை:ஒளிச்சார்பசைவு - _____ நேர் நீர்சார்பசைவு மற்றும் நேர் புவிசார்பசைவு உடையது.
விடை:வேர் - தாவரத்தில் காணப்படும் பச்சைய நிறமி _____ எனப்படும்.
விடை:பச்சையம் - சூரியகாந்தி மலர் சூரியனின் பாதைக்கு ஏற்ப வளைவது ____ எனப்படும்.
விடை:ஒளியுறு வளைதல் - புவிஈர்ப்பு விசைக்கு ஏற்ப தாவரம் வளைவது ______ எனப்படும்.
விடை:புவிசார்பசைவு - ஒளிச்சேர்க்கையின் போது தாவரங்கள் CO2 வை உள்ளிழுத்துக் கொள்கின்றன ஆனால் அவைகளின் உயிர் வாழ்தலுக்கு ______ தேவைப்படும்.
விடை:ஆக்ஸிஜன்
III. பொருத்துக

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
- வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் ஒளிச்சார்பசைவு எனப்படும்.
விடை:தவறு
வேதிப்பொருள்களின் தூண்டுதலுக்கு ஏற்றாற்போல் தாவர உறுப்பு வளைதல் வேதிசார்பசைவு எனப்படும். - தண்டுப் பகுதி நேர் ஒளிசார்பசைவு மற்றும் எதிர்புவி சார்பசைவு உடையது.
விடை:சரி - வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளை திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் குறைந்துவிடும்.
விடை:தவறு. வளிமண்டலத்தில் வெப்பம் அதிகரிக்கும் போது இலைத்துளைகள் திறந்து கொள்வதால் நீர் ஆவியாதல் அதிகரிக்கும். - ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் CO2 உற்பத்தியாகும்.
விடை:தவறு. ஒளிச்சேர்க்கையின் போது குளுக்கோஸ் மற்றும் O2, உற்பத்தியாகும். - வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் சமநிலையை ஏற்படுத்த ஒளிச்சேர்க்கை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
விடை:சரி - தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும்போது நீர் இழப்பு ஏற்படும்.
விடை:தவறு. தாவர இலைகளில் காணப்படும் இலைத்துளைகள் திறந்திருக்கும்போது நீர் இழப்பு ஏற்படும்.
Additional Important Questions and Answers
பகுதி – II. கூடுதல் வினாக்கள்
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
- ஹீலியோடிராபிசம் ஒரு வகை _____ ஆகும்.
விடை:ஒளி சார்பசைவு - முதல் நிலை தண்டு என்பது _____ ஆகும்.
விடை:முளைக்குருத்து - தாவரங்கள் மண்ணிலிருந்து பிற பொருட்களை உறிஞ்சி எவ்வளவு ஜான் பாப்டிஸ்ட் வான் எடையானது அதிகரித்தது என்பதைக் கண்டறியும் சோதனையைச் செய்தவர் _____
விடை:ஹெல்மான்ட் - தாவரம் CO2 ஐ மீண்டும் O2,ஆக மாற்றுவதாகக் கண்டறிந்த அறிஞர்
விடை:பிரிஸ்டிலி - உலகில் முதன் முதலாக உருவாகிய தாவரங்கள் _______
விடை:மாஸ்கள் மற்றும் லிவர் வோர்ட்ஸ் - பூமியில் காணப்படும் மிக உயரமான புல் வகை _____
விடை:மூங்கில் - 25 – 200cm மழையளவு பொதுவாகக் காணப்படுவது ______
விடை:காடுகள் வாழிடம் - ஆகாய தாமரையின் பருத்த இலைக் காம்பு எதில் உதவுகிறது?
விடை:மிதத்தல் - பட்டாணி தாவரத்தின் இரு சொல் பெயர் என்ன?
விடை:பைசம் சாட்டைவம் - எந்த தாவரத்தில் விலங்கு போல் இயக்கம் காணப்படுகிறது?
விடை:கிளாமைடோமோனாஸ் - டாராக்சம் அஃபிசினேல் தாவரத்தின் வட்டாரப் பெயர் ______
விடை:சாதாரண டான்டிலியான் - ஒரு தாவரம் 1 லிட்டர் தண்ணீ ரை உறிஞ்சினால், அதில் எவ்வளவு நீராவிப் போக்கினால் வெளியேற்றப்படுகிறது?
விடை:999 மில்லி லிட்டர்கள் - தாவரத்தில் ஒரு நாளில் சுவாசித்தல், ஒளிச்சேர்க்கை, நீராவிப் போக்கு நடைபெறும் நேரங்கள் மணி சராசரியாக முறையே ______
விடை:24, 12, 10 - ______ தாவரத்தின் இலைகளை நாம் தொட்டவுடன் அவ்விலைகள் தொட்டால்
விடை:சிணுங்கி (அ) மூடிக்கொள்கின்றன.மைமோசா பியூடிகா - _______ தாவரத்தின் தண்டின் முனையானது சூரியன் திசையை நோக்கி நகர்கின்றன. இரவு நேரங்களில் எதிர்திசையில் நகர்கின்றன
விடை:ஹீலியாந்தல் - _____ இலைகள் காற்றினால் நடனம் ஆடுவது போன்ற அழகியத் தோற்றத்தை உருவாக்குகின்றன
விடை:இந்திய தந்தித் தாவரத்தின் - ____ தமிழில் தொட்டால் சிணுங்கி என்று அழைக்கப்படுகிறது
விடை:மைமோசா புடிகா - ஒளியின் தூண்டலுக்கு ஏற்ப ஒருதிசை சார்ந்த தாவர பாகத்தில் ஏற்படும் அசைவு ____ எனப்படும்.
விடை:ஒளி சார்பசைவு - புவி ஈர்ப்புத் திசைக்கு ஏற்ப தாவரத்தின் உறுப்புகளில் ஏற்படும் அசைவு _____ எனப்படும்.
விடை:புவி சார்பசைவு - தொடுதல் தூண்டலுக்கு ஏற்ப தாவர உறுப்புகளில் ஏற்படும் அசைவு _____ எனப்படும்
விடை:தொடு உணர்வு சார்பசைவு - வேதிப்பொருளின் தூண்டுதலுக்கு ஏற்ப தாவர உறுப்பு அசைதல் _____ எனப்படும்.
விடை:வேதி சார்பசைவு - ______ தாவரத்தின் மலர்கள் காலையில் திறந்த நிலையிலும் மாலை மூடிய நிலையிலும் காணப்படும்.
விடை:டாராக்சம் அஃபிசினே - ஒளிச்சேர்க்கையின் முடிவில் ______ ஸ்டார்ச்சாக மாற்றப்பட்டு சேகரிக்கப்படுகிறது.
விடை:குளுக்கோஸ் - ஒளிச்சேர்க்கையின்போது தாவரங்கள் _____ வாயுவை உள்ளெடுத்து செல்கிறது.
விடை:கார்பன்டை ஆக்ஸைடு - தாவரத்தின் சிறுகிளை கார்பன்-டை-ஆக்ஸைடு வாயுவினை எடுத்துக்கொண்டு ஆக்ஸிஜனை வெளியேற்றுகிறது என்று கூறியவர் யார்?
விடை:ப்ரீஸ்ட்லீ - பச்சையம் _____ மூலக்கூறு அமைப்பில் ஒத்திருக்கும் ஆனால் மைய மூலக்கூறு மட்டும் வேறுபட்டிருக்கும்.
விடை:ஹீமோகுளோபின் - தாவரங்கள் தங்களின் வேர்களின் மூலம் நீரையும், இலைகளில் _____ வழியாக காற்றில் உள்ள கார்பன்டை ஆக்ஸைடு எடுத்துக்கொள்கிறது,
விடை:இலைத்துளைகள் - _____ என்ற மரகத பச்சை நிறமுடைய கடல் அட்டை ஒன்றை கண்டுபிடித்தனர்
விடை:எலிசா குளோரோட்டிகா - இலைகளில் காணப்படும் சிறிய துளைகள் _____ எனப்படும்.
விடை:இலைத்துளைகள் - தாவரப்பகுதிகளான இலைகள் மற்றும் பசுமையானத் தண்டுகளின் நீராவிப்போக்கு மூலமாக நீரானது ஆவியாக வெளியேற்றப்படுவது ____ எனப்படும்.
விடை:நீராவிப்போக்கு - ____ நீராவிப்போக்கின் போது பெருமளவு நீர், இலைத்துளை வழியாக நடைபெறுகிறது.
விடை:இலைத்துளை - புறத்தோலின் மேற்புறம் உள்ள கியூட்டிக்கிள் அடுக்கின் வழியாக நடைபெறும் நீராவிப்போக்கு ____ எனப்படும்.
விடை:கியூட்டிக்கிள் நீராவி - _____ நீர் இழப்பு பட்டைத்துளை வழியாக நடைபெறும்
விடை:பட்டைத்துளை - இலைத்துளைகளில் உள்ள _____ செல்களில் பச்சையம் உள்ளது
விடை:காப்பு - உலகின் சராசரி வெப்பநிலை அதிகரிப்பிற்கு _____ காரணமாகும்.
விடை:உலக வெப்பமயமாதல் - _____ தாவரம் தனது வாழ்நாளில் 54 கேலன் நீரினை நீராவியாக வெளியேற்றுகிறது
விடை:மக்காச்சோள - _____ முதல் நிலை உற்பத்தியாளர்கள் என அழைக்கப்படுகின்றன.
விடை:தாவரங்கள் - உயிரினங்கள் உணவிற்காக ஒன்றையொன்று சார்ந்திருப்பது ____ என அழைக்கப்படுகிறது.
விடை:உணவுச் சங்கிலி - _____ தாவரங்கள் பிரமிடு வடிவங்களில் காணப்படுகிறது
விடை:ஊசியிலைத் - ____ பகுதியானது அதிகளவு பல்லுயிர்த் தன்மையுடைய நில அமேசான் அமைப்பை பெற்ற இடமாகும்.
விடை:சாந்தோப்டெரின் - வெஸ்பா ஓரியன்டாலிஸ் மேல்தோல் பகுதியில் _____ என்ற மஞ்சள் நுண் ஒளி உணர் நிறமி காணப்படுகிறது.
விடை:சாந்தோப்டெரின் - நீரின் தூண்டுதலுக்கு எற்ப தாவரப் பாகத்தில் ஏற்படும் அசைவு நீர் சார்பசைவு ____ எனப்படும்
விடை:நீர் சார்பசைவு - ஒளியின் தூண்டலால் ஏற்படும் தாவரத்தின் திசை சாரா வளைதல் நிகழ்ச்சி ______ எனப்படும்
விடை:ஒளியுறு வளைதல் - _____ தமிழில் ‘தொழு கன்னி’ என்றழைக்கப்படுகிறது
விடை:டெஸ்மோடியம் கைரன்ஸ்
II. பொருத்துக.

III. கூற்று மற்றும் காரண வகை
பின்வருவனவற்றில் கூற்று A காரணம் R – என்னவென்று கண்டறி.
- கூற்று A- ஒளிச்சேர்க்கை பசிபிக் பெருங்கடலின் ஆழமான பகுதிகளில் நடைபெறவில்லை
R- மெக்ஸிகோ நாட்டின் பசிபிக் பெருங்கடலில் 2400 மீட்டர் ஆழமுள்ள பகுதியில் வெப்ப நீராற்றல் ஏற்படும் சிறு துளையின் அருகில் பசுங்கந்தக பாக்டீரியங்கள் வாழ்கின்றன
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:b – A தவறானது ஆனால் R சரியானது. - கூற்று A- ஒளிச்சேர்க்கையினால் உருவாக்கப்படும் ஓசோன் பூமியைப் பாதுகாக்கிறது.
விளக்கம் R- பிற பல வாயுக்களோடு சேர்ந்து CFC ஓசோன் இழப்பிற்குக் காரணமாகிறது.
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:C. A சரியானது R தவறானது - கூற்று A- நீராவிப் போக்கு ஒரு அவசியமான கேடு.
விளக்கம் R- நீராவிப் போக்கினால் அதிக நீர் உறிஞ்சப்பட்டு தொடர்ந்து கனிமங்களை அளிக்க இவை உதவுகிறது.
a. A மற்றும் R – தவறானது;
b. A தவறானது R சரியானது
c. A சரி R தவறானது
d. A மற்றும் R சரியானது
விடை:d. A சரியானது R சரியானது
One thought on “9th Science Guide Chapter 19 தாவர உலகம் – தாவர செயலியல்”