9th Science Solutions Chapter 24 சூழ்நிலை அறிவியல்

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

 1. ஒரு உயிரினத்தின் வாழ்திறனையும், இனப்பெருக்கத்தினையும் பாதிக்கக் கூடிய உயிர்க் கோளத்தில் காணப்படும் அனைத்துக் காரணிகளும் ____ என அழைக்கப்படுகின்றன.
  (அ) உயிரியல் காரணங்கள்
  (ஆ) உயிரற்ற காரணிகள்
  (இ) உயிர்க் காரணிகள்
  (ஈ) இயற் காரணிகள்
  விடை: (ஆ) உயிரற்ற காரணிகள்
 2. வட, தென் துருவங்களில் காணப்படும் பனிப்பாறைகளிலுள்ள பனிக்கட்டிகள் நேரடியாக ஆவியாக மாறும் நிலை _____எனப்படும்
  (அ) ஆவியாதல்
  (ஆ) குளிர்வித்தல்
  (இ) பதங்கமாதல்
  (ஈ) உட்செலுத்துதல்
  விடை: (இ) பதங்கமாதல்
 3. வளிமண்டல கார்பன்டைஆக்ஸைடு (CO2) தாவரங்களுக்குள் உட்செல்லும் நிகழ்வு _____ எனப்படும்.
  (அ) ஒளிச்சேர்க்கை
  (ஆ) உட்கிரகித்தல்
  (இ) சுவாசித்தல்
  (ஈ) சிதைத்தல்
  விடை: (அ) ஒளிச்சேர்க்கை
 4. _____ ன் அளவு வளிமண்டலத்தில் உயர்வதன் விளைவாக பசுமை வீட்டு விளைவும் புவி வெப்பமயமாதலும் ஏற்படுகின்றன.
  (அ) கார்பன் மோனாக்சைடு
  (ஆ) கந்தக டைஆக்ஸைடு
  (இ) நைட்ரஜன் டை ஆக்ஸைடு
  (ஈ) கரியமில வாயு
  விடை: (ஈ) கரியமில வாயு

II. பொருத்துக

III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

 1. நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு இடைநிலைத்தாவரங்களில் காணப்படுகின்றது
  விடை: தவறு. நன்றாக வளர்ச்சியடையாத வேர்த் தகவமைப்பு நீர்த் தாவரங்களில் காணப்படுகின்றது.
 2. பாலுட்டிகளில் வௌவால்கள் மட்டுமே பறக்கும்.
  விடை: சரி.
 3. மண்புழுக்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.
  விடை: தவறு. வௌவால்கள் அதிக அதிர்வெண் கொண்ட எதிரொலித்தல் என அழைக்கப்படும் அமைப்பைப் பயன்படுத்துகின்றன.
 4. கோடைகால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.
  விடை: தவறு. குளிர்கால உறக்கம் என்ற தகவமைப்பானது குளிர் நிலையைச் சமாளிக்க பயன்படுவதாகும்.

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

 1. உயிர்கள் காணப்படக் கூடிய பூமியின் ஒரு பகுதி _______
  விடை: உயிர்க்கோளம்
 2. நீராவிப்போக்கு என்பது ____ ஒரு வகையாகும்.
  விடை: ஆவியாதலின்
 3. நிலத்தடி நீரை அதிகரிக்கச் செய்வது ______
  விடை: ஊடுருவல்
 4. உயிர்வாழத் தேவையான முக்கியத்துவம் வாய்ந்த முதல் நிலை ஊட்டச்சத்து _____
  விடை: நைட்ரஜன்
 5. அதிக அளவு நைட்ரஜனைக் கொண்ட பெரிய மூலமாக திகழ்வது _____
  விடை:
 6. வளி மண்டலம்வளிமண்டலத்திலுள்ள நைட்ரஜனின் அளவு _____
  விடை: 78%
 7. லெகுமினஸ் தாவரங்கள் ரைசோபியம் பாக்டீரியாவுடன் கொண்டுள்ள தொடர்பு _______
  விடை: கூட்டுயிரி வாழ்க்கை
 8. தாவர உண்ணிகள் அவற்றிலுள்ள புரதங்களை ______ ஆக மாற்றிக் கொள்கின்றன.
  விடை: விலங்குப் புரதங்கள்
 9. உட்கொள்ளும் உணவிலிருந்து ______ புரதங்களை உற்பத்தி செய்து
  விடை: விலங்குண்ணிகள்
 10. கொள்கின்றன. கரி, வைரம், கிராபைட் போன்றவை கார்பனின் _____ ஆகும்.
  விடை: எளிய வடிவங்கள்
 11. கார்பன்-டை ஆக்ஸைடு ஒரு ____ ஆகும்.
  விடை: பசுமை இல்ல வாயு
 12. நீர்த்தாவரங்கள் _______ தன்மையை பராமரிக்கும் சவால்களை எதிர்கொள்ளுகின்றன.
  விடை: நீரில் மிதக்கும்
 13. உல் பியாவில் எது இல்லை ?
  விடை: வேர்கள்
 14. இந்த தாவரத்தின் உடலம் பெரிதும் குறைக்கப்பட்டிருக்கும்.
  விடை: லெம்னா
 15. தாவர உலகின் சின்ட்ரெல்லா என அழைக்கப்படுவது _____
  விடை: ஆகாயத் தாமரை
 16. மெழுகுப்பூச்சுடன்கூடிய சிறிய இலைகள் காணப்படும் தாவரம் ______
  விடை: கருவேலமரம்
 17. இடைப்பட்ட நீரளவைக் கொண்ட இடங்களில் வளரும் தாவரங்கள் ______
  விடை: இடைநிலை
 18. இடைநிலை தாவர வேர்களில் காணப்படும் அமைப்பு _____
  விடை: வேர் மூடி
 19. வௌவால் பகல் நேரங்களில் பறப்பதற்கு அதிக ______ தேவைப்படுகிறது
  விடை: ஆற்றல்
 20. மண்புழுக்கள் சுவாசம் செய்யும் பகுதி _____
  விடை: தோல்
 21. மண்புழுக்களுக்கு ஏற்ற சரியான வெப்பநிலை என்பது ______
  விடை: 60°-80°
 22. உலக நீர் தினம் 2018ன் முக்கிய கருத்து _____
  விடை:“இயற்கை நீருக்கே”
 23. மண் அரிப்பை தடுக்க அமைப்பது ______
  விடை: பண்ணைக் குட்டைகள்
 24. இரண்டாம் நிலை சுத்திகரிப்பில் நுண்ணுயிர்களை நீக்கம் செய்யும் முறை _______
  விடை: வீழ்ப்படி வாதல்
 25. கனமான திண்மங்கள். மிதக்கும் பொருள்கள் எந்த நிலையில் நீக்கப்படுகிறது?
  விடை: முதல்நிலை சுத்திகரிப்பு
 26. இந்தியா ஐ.யூ.சி என் இல் உறுப்பினராக சேர்ந்த ஆண்டு ______
  விடை: 1969
 27. ஒரு நிலையான இடைவினை _____, _____ காரணிகளுக்கும் இடையே நடைபெறுகிறது.
  விடை: உயிருள்ள, உயிரற்ற
 28. துருவங்களில் காணப்படும் பனிமலைகள், பனிப்பாறைகள் நேரடியாக _____ மாறுகின்றன.
  விடை: நீராவி
 29. தாவரங்களில் இலை, தண்டுகளில் காணப்படும் _____ வழியாக நீர், நீராவியாக மாறி வெளிப்படுகிறது
  விடை: சிறிய துளைகள்
 30. நீரானது பூமிக்குள் செல்லும் இரு வேறு முறைகள் ______, _____
  விடை: ஊடுருவல், உள் வழிந்தோடல்
 31. எவைகளில் நைட்ரஜன் அவசியமான பதிதப் பொருளாக உள்ளது-
  விடை: பச்சையம், மரபுப்பொருள் மற்றும் புரதம்
 32. செயல்படா வளிமண்டல நைட்ரஜனை உயிரினங்கள் பயன்படுத்தும் வகையில் _____ ஆக மாறுகிறது
  விடை: கூட்டுப்பொருள்கள் செயல்படும்
 33. புரதங்கள், நியூக்ளிக் அமிலங்களை உருவாக்குவதற்கு தாவரங்கள் மண்ணிலிருந்து உறிஞ்சுவது ______
  விடை: நைட்ரேட் அயனிகள்
 34. பூஞ்சைகள், பாக்டீரியாக்கள், விலங்குப்புரதங்கள் மற்றும் இறந்த தாவர விலங்குகளை _____ ஆக மாற்றுகின்றன.
  விடை: அம்மோனியச் சேர்மங்கள்
 35. சூடோமோனாஸ் சிற்றினங்கள் _____ ஐ ஒடுக்கமடையச் செய்து, ____ மாறி வளிமண்டலத்தை அடைகிறது
  விடை: நைட்ரேட் அயனிகள், வாயு நிலைக்கு
 36. இதை பயன்படுத்துவதன் மூலம் சூழ்நிலையில் உயிரிய நைட்ரஜனின் இருப்பு அடிப்படையாக கொண்ட உரங்கள் அதிகரிக்கின்றது.
  விடை: நைட்ரஜனை
 37. கார்பனின் கூட்டுப் பொருள்கள் _____, _____
  விடை: கார்பன் மோனாக்ஸைடு, கார்பன்டை ஆக்ஸைடு
 38. கார்பன்டை ஆக்ஸைடு வளிமண்டலத்தில் அதிகரிப்பதால் ____ ,_____ ஏற்படுகின்றன.
  விடை: பசுமை இல்ல விளைவும், புவி வெப்பமயமாதலும்
 39. _____ அல்லது _____ அருகில் வாழக்கூடிய தாவரங்கள் நீருக்குள், ஹைடிரோபைட்ஸ் எனப்படும்.
  விடை: நீருக்குள், நீர்நிலைகளின்
 40. ஆகாயத் தாமரை போன்ற தாவரங்களில் உறுதித்தன்மையையும், மிதப்புத் தன்மையையும் தருகிறது
  விடை: காற்றறைப் பைகள்
 41. மிதக்கும் இலைகள் ____ உடன் நீரின் அளவிற்கேற்ப மேலும் கீழும் இயங்கும் வகையில் உள்ளது.
  விடை: (தாமரையின்) நீளமான இலைக் காம்பு
 42. ஆகாயத்தாமரையில் இலைக் காம்பின் தன்மை ______
  விடை: காற்றறைப்பைகளுடன் பஞ்சு போன்று வீங்கிய
 43. கோடை காலங்களில் ஆகாயத் தாமரை உள்ள நீரானது ______ அதிகமாக வற்றிப் போகிறது
  விடை: ஒன்பது மடங்கு
 44. சோற்றுக் கற்றாழை நீரை சேமித்து வைக்கும் திசுக்கள்
  விடை: சதைப்பற்று மிக்க பாரன்கைமா
 45. இலையின்மேல் கியூட்டிகிள் மெழுகுப்பூச்சி இருப்பதால் _____ தடுத்து _____ குறைக்கின்றது.
  விடை: ஈரப்பதத்தை , நீர் இழப்பைக்
 46. ______ மண்ணிற்கு காற்றோட்டம் வழங்கியும், நீர்தேக்குத்திறனை, அதிகரித்தும், கரிமப்பொருள் வழங்கியும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
  விடை: மண்புழுக்கள்
 47. எங்கு உலர் குளிர்ச்சி அமைப்புகள் பயன்படுத்தப்படுகிறது?
  விடை: தொழிற்சாலைகளில்
 48. உலக நீர் தினமாகக் பின்பற்றப்படும் நாள் ______
  விடை: மார்ச் 22ம் தேதி
 49. இயற்கை வளங்களைப் பாதுகாத்து, வளங்குன்றாமல் பயன்படுத்த, பெரும் ங்காற்றிவரும் பன்னாட்டு அமைப்பு _____
  விடை: ஐ.யூ.சி.என்
 50. ஐ.யூ.சி. – ன் அக்டோபர் 5, 1948-ம் ஆம் ஆண்டு ____ நாட்டில் கிலான்ட் என்ற இடத்தில் தோற்றுவிக்கப்பட்டது
  விடை: சுவிட்சர்லாந்து

II. பொருத்துக

III. கூற்று மற்றும் காரண வகை

கீழ்க்கண்டவற்றுள் சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
1. கூற்று சரி. காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
2. கூற்று சரி. காரணம் சரி ஆனால் காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
3. கூற்று தவறு. காரணம் சரி
4. கூற்று சரி. காரணம் தவறு.

 1. கூற்று : பூமியின் மேற்பரப்பு, பெருங்கடல்கள், ஏரிகள் குளங்கள் ஆகியவற்றில் உள்ள நீர் நீராவியாக மாறுகிறது.
  காரணம் : நீர் சுழற்சி என்பது பூமியின் மீது நீரின் தொடர்ச்சியான இயக்கத்தை குறிக்கிறது.
  விடை: (1) கூற்று சரி. காரணம் சரி காரணம் கூற்றிற்கான சரியான விளக்கம்
 2. கூற்று : அம்மோனிய சேர்மங்கள் ஆக்ஸிஜனேற்ற செயல்முறை மூலம் நைட்ரேட் உப்புகளாக மாற்றப்படுகின்றன.
  காரணம் : நைட்ரேட் உப்புகள் உருவாகும் முறைக்கு நைட்ரேட் வெளியேற்றம் எனப்படும்.
  விடை: (4) கூற்று சரி. காரணம் தவறு
 3. கூற்று : மண்புழுக்கள் கோடை காலத்தில் வளைகளிலிருந்து வெளியேறுகின்றன.
  காரணம் : மண்புழுக்கள் ஒளிக்கு எதிராகச் செயல்படுகின்றன.
  விடை: (3) கூற்று தவறு. காரணம் சரி

Leave a Reply

Your email address will not be published.