I. சரியான விடையைத் தேர்ந்தெடு
- ஒரு பொருளில் நேர் மின்னூட்டம் தோன்றுவதன் காரணம்
அ) எலக்ட்ரான்களின் ஏற்பு
ஆ) புரோட்டான்களின் ஏற்பு
இ) எலக்ட்ரான்களின் இழப்பு
ஈ) புரோட்டான்களின் இழப்பு
விடை : இ) எலக்ட்ரான்களின் இழப்பு - சீப்பினால் தலைமுடியைக் கோதுவதனால்
அ) மின்னூட்டங்கள் உருவாக்கப்படுகின்றன
ஆ) மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன
இ) அ அல்ல து ஆ
ஈ) இரண்டும் அல்ல
விடை : ஆ) மின்னூட்டங்கள் இடம் பெயர்கின்றன - மின்விசைக் கோடுகள் நேர் மின்னூட்டத்தில் ……………………………. எதிர்மின்னூட்டத்தில் …………………………….
அ) தொடங்கி ; தொடங்கும்
ஆ) தொடங்கி ; முடிவடையும்
இ) முடிவடைந்து ; தொடங்கும்
ஈ) முடிவடைந்து ; முடியும்
விடை : ஆ) தொடங்கி ; முடிவடையும் - ஒரு மின்னூட்டத்திற்கு அருகில் மின்னழுத்தம் என்பது ஓரலகு நேர் மின்னூட்டம் ஒன்றை அதனருகில் கொண்டு வர செய்யப்படும் ……………………………. அளவாகும்.
அ) விசையின்
ஆ) திறமையின்
இ) போக்கின்
ஈ) வேலையின்
விடை : ஈ) வேலையின் - மின்பகு திரவத்தில் மின்னோட்டத்தின் பாய்விற்குக் காரணம் …………………………….
அ) எலக்ட்ரான்கள்
ஆ) நேர் அயனிகள்
இ) அ மற்றும் ஆ
ஈ) இரண்டும் அல்ல
விடை : இ) அ மற்றும் ஆ இரண்டுமே - மின்னோட்டத்தின் வெப்ப விளைவு ……………………………. என அழைக்கப்படும்.
அ) ஜூல் வெப்பமேறல்
ஆ) கூலூம் வெப்பமேறல்
இ) மின்னழுத்த வெப்பமேறல்
ஈ) ஆம்பியர் வெப்பமேறல்
விடை : அ) ஜூல் வெப்பமேறல் - மின்முலாம் பூசுதல் எதற்கு எடுத்துக்காட்டு?
அ) வெப்ப விளைவு
ஆ) வேதி விளைவு
இ) பாய்வு விளைவு
ஈ)காந்த விளைவு
விடை :ஆ) வேதி விளைவு - ஒரு கம்பியின் மின்தடை எதைப் பொறுத்து அமையும்?
அ) வெப்பநிலை
இ) கம்பியின் இயல்பு
ஈ) இவையனைத்தும்
விடை: ஈ) இவையனைத்தும்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக
- எலக்ட்ரான்கள் ……………………………….. மின்னழுத்தத்திலிருந்து ……………………….. மின்னழுத்தத்திற்கு நகரும்
விடை: அதிக, குறைந்த - எலக்ட்ரான்கள் நகரும் திசைக்கு எதிர்த்திசையில் நகர்வது மின்னோட்டம் எனப்படும்.
விடை: மரபு - ஒரு மின்கலத்தின் மின்னியக்கு விசை என்பது குழாயிணைப்புச் சூழலை ஒப்பிடுகையில் ………………………. க்கு ஒப்பானது; ………………………. (இறைப்பான்/குழாய்/ வால்வு)
விடை: இறைப்பான் - இந்தியாவில் வீடுகளுக்கு அளிக்கப்படும் மின்சாரம் ………………………… Hz அதிர்வெண் கொண்ட மாறு மின்னோட்டம் ஆகும்.
விடை: 50 Hz
III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக
- மின்னியல் நடுநிலை என்பது சுழி மின்னூட்டம் அல்லது சமமான அளவு நேர் மற்றும் எதிர் மின்னூட்டம் உள்ளதைக் குறிக்கும்
விடை: சரி - ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் பக்க இணைப்பில் இணைக்கப்படும் ஒரு மின்சுற்றில் அம்மீட்டர் தொடர் இணைப்பில் இணைக்கப்படும்
விடை: தவறு - மின்பகு திரவத்தினுள் ஆனோடு எதிர்மின் குறி உடையது மின்பகு திரவத்தினுள் ஆனோடு நேர்மின் குறி உடையது
விடை: தவறு - மின்னோட்டம் காந்த விளைவை ஏற்படுத்தும்
விடை: சரி
IV. பொருத்துக

2.5A அளவு மின்னோட்டம் மின்விளக்கு ஒன்றின் வழியே 2 மணி நேரம் பாய்ந்தால், அதன் வழியே செல்லும் மின்னூட்டத்தின் மதிப்பைக் கணக்கிடுக.
I=q/t
I=9/ நேரம் t = 2 மணி = 2 x 60 x 60 = 7200 வினாடி
மின்னோட்டம் I = 2.5A
மின்னூட்டம் q = I x t
= 2.5 x 7200
= 18000
q = 1.8 x 104C
Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
- மின்னூட்டத்தின் அலகு ……………………………… ஆகும்
விடை: கூலூம் - + 5 C மற்றும் – 3 C மின்னூட்டங்கள் கொண்ட அமைப்பின் மொத்த மின்னூட்டம் ………………………………
விடை: +2C - மின்னோட்டத்தின் SI அலகு ………………………………
விடை: ஆம்பியர் (A) - 1 கூலும் மின்னூட்டத்திலுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
விடை: 6.25 x 1018 - மின்னூட்டங்கள் பாயும் வீதம் ……………………………… எனப்படும்.
விடை: மின்னோட்டம் - ஒத்த மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று ……………………………… எதிர் மின்னூட்டங்கள் ஒன்றை ஒன்று ……………………………….
விடை: எதிர்க்கும், ஈர்க்கும் - மின்னூட்டத்திற்கான சமன்பாடு ……………………………..
விடை: q = ne - ஒரு மின்னூட்டத்தை சுற்றி ஒரு சோதனை மின்னூட்டம் மின்விசையை உணரக்கூடிய பகுதி ………………………….
விடை: மின்புலம் - மின்விசைக்கு எதிராக ஓரலகு நேர் மின்னூட்டத்தை ஒரு குறிப்பிட்ட புள்ளிக்கு கொண்டு வர செய்யும் வேலை …………………………..
விடை: மின்னழுத்தம் - நேர் மின்னூட்டங்களின் இயக்கம் …………………………. என அழைக்கப்படும்
விடை: மரபு மின்னோட்டம் - ஒன்றுக்கு மேற்பட்ட மின்கலன்களின் தொகுப்பு ………………………….
விடை: மின்கல அடுக்கு - மின்னோட்டத்தை அளக்கும் கருவி …………………………..
விடை: அம்மீட்டர் - அம்மீட்டரை மின்சுற்றில் ………………………. இணைப்பில் இணைக்க வேண்டும்
விடை: தொடர் - மின்னியக்குவிசையின் அலகு ……………………….
விடை: வோல்ட் - மின்னழுத்த வேறுபாட்டை அளக்க உதவும் கருவி ……………………….
விடை: வோல்ட் மீட்டர் - மின்தடையின் SI அலகு ……………………….
விடை: ஓம் (22) - மின்தடையை அளிக்கும் பொருட்கள் ………………………. ஆகும்
விடை: மின்தடையங்கள் - ஓம் விதி என்பது ……………………………
விடை: V = IR - நிலையான மின்தடைக்கு உதாரணம் ……………………….
விடை: கார்பன் மின்தடைகள், கம்பி சுற்றிய மின்தடைகள் - மின்னோட்டத்தின் பாய்வு எதிர்க்கப்படும் போது ………………………. உருவாகிறது.
விடை: வெப்பம் - மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் நிகழ்வு ……………………….
விடை: ஜீல் வெப்ப விளைவு - ஜீல் வெப்ப விளைவின்படி செயல்படுபவை ……………………….
விடை: மின்சலவைப் பெட்டி, நீர் சூடேற்றி - மின்னோட்டம் பாயும் கரைசல் ………………………. எனப்படும்.
விடை: மின்பகு திரவம் - வீடுகளில் கொடுக்கப்படும் மின்னழுத்தம் …………………………………
விடை: 220 v - மிகக் குறைந்த மின்தடை கொண்ட பொருள்கள் ………………………………… எனப்படும்.
விடை: கடத்திகள் - மனித உடலில் தோன்றும் வலிமை குன்றிய மின்னோட்டத்தின் பெயர் …………………………………
விடை: நரம்பிணைப்பு சைகை - மின்னணுச் சுற்றுகளினால் பயன்படுத்தப்படும் மின்னோட்டம் …………………………………
விடை: நேர்த்திசை மின்னோட்டம் - மாறுதிசை மின்னோட்டத்தை நேர்த்திசை மின்னோட்டமாக மாற்றும் கருவி ……………………………..
விடை: திருத்தி - ………………………………… வடிவில் மட்டுமே மின்சாரத்தை சேமிக்க இயலும்
விடை: நேர் மின்னூட்ட - இந்தியாவில் பயன்படுத்தப்படும் மாறு மின்னோட்டத்தின் அதிர்வெண் …………………………………
விடை: 50Hz - உலர்ந்த நிலையில் மனித உடலில் உள்ள மின்தடை
விடை: 1,00,000 ஓம் - முறிசாவி செயல்படும் தத்துவம் …………………………………
விடை: தொடர்பியலி - மின் உருகு இழையின் தத்துவம் …………………………………
விடை: ஜீல் வெப்பநிளைவு - மின் உருகு இழை ………………………………… ஆல் ஆனது.
விடை: நிக்கல் குரோமியம் - தொடர்பிணைப்பில் மின்னோட்டம் பாய் ………………………………… பாதை உண்டு
விடை: ஒரே ஒரு - 2Ω, 3Ω, 4Ω மின்தடைகள் தொடர்பினைப்பில் இணைக்கப்பட்டால் தொகுபயன் மின்தடை ……………………………….
விடை: 9Ω - 5Ω, 20Ω மின்தடைகள் பக்க இணைப்பில் இருந்தால் தொகுபயன் மின்தடை மதிப்பு …………………………………
விடை: 5Ω - ………………………………… என்பது நேர் மின்னூட்டங்கள் இயங்கும் திசையில் இயங்கும்
விடை: மரபு மின்னோட்டம் - மின்னியக்கு விசையின் சமன்பாடு …………………………………
விடை: Σ=Wq - கரைசல்களில் மின்னோட்டம் கடத்தப்படும் நிகழ்வு ………………………………… எனப்படும்.
விடை: மின்னாற்பகுப்பு - அணுக்கள் ……………….., ……………….., ………………. ஆகிய துகள்களைக் கொண்டுள்ளது.
விடை: எலக்ட்ரான், புரோட்டான், நியூட்ரான் - மின்புலத்தைக் குறிக்கும் கோடுகள் ………………………………… எனப்படுகின்றன.
விடை: மின்விசைக் கோடுகள் - மின்னழுத்த வேறுபாட்டை ஏற்படுத்துவது …………………………………
விடை:மின்கலம் - மின்சுற்றின் ஒரு புள்ளியை ஒரு வினாடியில் கடந்து செல்லும் மின்னூட்டங்களின் மதிப்பே ………………………………… எனப்படும்.
விடை: மின்னோட்டம் - மின்னோட்டத்தின் SI அலகு ………………………………… மற்றும் அதன் குறியீடு
விடை: ஆம்பியர், A - பருப்பொருள்கள் அனைத்தும் ………………………………… ஆனவை
விடை: அணுக்களாலும், மூலக்கூறுகளாலும் - மின்தடையின் SI அலகு ………………………………… மற்றும் அதன் குறியீடு. ………………………………… ஆகும்
விடை: ஓம், Ω - ………………………………… மூலங்களில் ஒன்று மின்கல அடுக்கு ஆகும்
விடை: நேர்திசை மின்னோட்டத்தின் - மின்னோட்டம் பாய்வதை எதிர்க்கும் இப்பண்பு ………………………………… எனப்படும்
விடை: மின்தடை - இரு புள்ளி மின்னூட்டங்களுக்கிடையில் ஏற்படும் நிலைமின்னியல் விசை ………………………………… விதியின் அடிப்படையில் இயங்குகிறது.
விடை: நியூட்டனின் மூன்றாவது
II. பொருத்துக


III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக
- மின்னூட்டங்களுக்கிடையில் உருவாகும் விசை மின்புலம் எனப்படும். மின்னூட்டங்களுக்கிடையில் உருவாகும் விசை மின்விசை எனப்படும்.
விடை: தவறு - மாறுதிசை மின்னோட்டத்தின் மூலங்களில் ஒன்று மின்கல அடுக்கு ஆகும். நேர்திசை மின்னோட்டத்தின் மூலங்களில் ஒன்று மின்கல அடுக்கு ஆகும்.
விடை: தவறு - வெவ்வேறு மின் பொருள்களின் மின்தடை ஒன்றாக இருக்கும். வெவ்வேறு மின் பொருள்களின் மின்தடை வெவ்வேறாக இருக்கும்.
விடை: தவறு - மின்னூட்டம் பெற்ற பொருள் ஒன்றிற்கு கடத்தும் பாதை அளிக்கப்பட்டால், எலக்ட்ரான்கள் அதிக மின்னழுத்தத்திலிருந்து குறைவான மின்னழுத்தத்திற்கு அப்பாதை வழியே பாய்கின்றன.
விடை: சரி - மின்னாற்றல் வெப்ப ஆற்றலாக மாற்றப்படும் இந்நிகழ்வு ஜூல் வெப்பமேறல் அல்லது ஜுல் வெப்பவிளைவு எனப்படும்.
விடை: சரி - மாறு திசை மின்னோட்டத்தை நேர்திசை மின்னோட்டமாக மாற்றும் கருவிக்கு திருத்தி என்று பெயர்.
விடை : சரி
IV. கூற்று மற்றும் காரண வகை. சரியான ஒன்றைத் தேர்ந்தெடு.
a) கூற்றும் காரணமும் சரி, கூற்றுக்கான காரணம் சரியானது.
b) கூற்றும் காரணமும் சரி, ஆனால் கருத்துக்கான காரணம் தவறு.
c) கூற்று சரி, காரணம் தவறு.
d) கூற்று தவறு, காரணம் சரி.
- கூற்று (A) : மின்னூட்டங்களின் இயக்கமே மின்னோட்டமாகும்.
காரணம் (R) : உயர் மின்னழுத்தத்திலிருந்து தாழ் மின்னழுத்தத்திற்கு மின்னோட்டம் பாயும்.
விடை: (a) கூற்றும், காரணமும் சரி, கூற்றுக்கான காரணம் சரியானது. - கூற்று (A) : இரு மின்னூட்டங்களுக்கிடையேயான நிலைமின்னியல் விசை நியூட்டன் மூன்றாம் விதி அடிப்படையில் இயங்குகிறது.
காரணம் (R) : ஒரு மின்னூட்டத்தின் மீது ஏற்படும் விசை வினையாகவும் இன்னொரு மின்னோட்டத்தின் மீது ஏற்படும் விசை திர்வினையாகவும் செயல்படுகின்றன.
விடை:(a) கூற்றும், காரணமும் சரி, கூற்றுக்கான காரணம் சரியானது. - கூற்று (A) : மாறும் மின்தடையங்களில் சுற்றில் பாயும் மின்னோட்டத்தை மாற்ற முடியும்.
காரணம் (R) : கரிம படல மின்தடையங்கள் மாறும் மின்தடையம் ஆகும்.
விடை: (c) கூற்று சரி, காரணம் தவறு
V. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக
- மின்னூட்டம் : q = It
மின்னோட்டம் : I= __________
விடை: = 1 = q/t - தரையிணைப்பு : பச்சை நிறம்
முதன்மை கம்பி : ___________________
விடை: = சிவப்பு நிறம் - தொடரிணைப்பு : Rs = R1 + R2
பக்க இணைப்பு : __________________
விடை: 1/RP=1/R1+1/R2+1/R3 - நேர்த்திசை மின்னோட்டம் : நேர்கோடு
மாறுதிசை மின்னோட்டம் : _____________________
விடை: = அலைவடிவம் - அம்மீட்டர் : தொடரிணைப்பு
வோல்ட் மீட்டர் : _______________________
விடை: = பக்க இணைப்பு