I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
- சூரிய மையக் கொள்கையை முன்மொழிந்தவர் யார்?
அ) டைக்கோ பிராஹே
ஆ) ஆர்க்கிமிடிஸ்
இ) நிகோலஸ் கோபர் நிக்கஸ்
ஈ) டாலமி
விடை: இ) நிகோலஸ் கோபர் நிக்கஸ் - இவற்றுள் எது வெளிப்புற சூரிய மண்டலத்தில் உள்ள கோள் அல்ல?
அ) புதன்
ஆ) சனி
இ) யுரேனஸ்
ஈ) நெஃப்டியூன்
விடை:அ) புதன் - செரஸ் என்பது
அ) விண்க ல்
ஆ) விண்மீ ன்
இ) கோள்
ஈ) சிறுகோள்
விடை: ஈ) சிறுகோள் - A என்ற கோள் சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் சுழற்சி நேரம் B என்ற கோளை விட எட்டு மடங்கு அதிகம் எனில், கோள் A வின் தூரம் கோள் B யின் தூரத்தை விட எத்தனை மடங்கு அதிகம்?அ) 4
ஆ) 5
இ) 2
ஈ) 3
விடை : அ) 4 - ஆண்டுகளுக்கு முன்பு பெருவெடிப்பு ஏற்பட்டது.
அ) 13.7 பில்லியன்
ஆ) 15 மில்லியன்
இ) 15 மில்லியன்
ஈ) 20 மில்லியன்
விடை: அ) 13.7 பில்லியன்
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
- சூரியனின் திசைவேகம் கிமீ/வி.
விடை:250 - முனைகளில், சூரியனின் சுழற்சி வேகம்
விடை:குறையும் (36 நாள்கள்) - இந்தியாவின் முதல் செயற்கைக்கோள்
விடை:ஆர்யபட்டா - கெப்ளரின் மூன்றாம் விதியை என்றும் அழைப்பர்.
விடை:ஒத்திசைவுகளின் விதி - நம் சூரிய குடும்பத்திலுள்ள கோள்களின் எண்ணிக்கை – ஆகும். –
விடை :8
III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
- பன்னாட்டு விண்வெளி மையம் என்பது சர்வதேச ஒத்துழைப்பின் ஒரு ஆதாரமாகும்.
விடை:சரி - ஹேலிஸ் வால்மீன் 67 மணி நேரங்களுக்கு ஒருமுறை தோன்றும்.
விடை:தவறு ஹேலிஸ் வால்மீன் 76 ஆண்டுகளுக்கு பின் தோன்றும். - பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் குறைவாக இருக்கும்.
விடை:தவறு பூமிக்கு அருகே உள்ள கோள்களுக்கு சுழலும் திசைவேகம் அதிகமாக இருக்கும். - புதன் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது. செவ்வாய் கோள் சிவப்புக்கோள் என்றழைக்கப்படுகிறது.
விடை:தவறு
Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
- புவி மையம் கொள்கையைக் கூறியவர்
விடை: தாலமி - சூரிய மைய கொள்கையை வெளியிட்டவர்
விடை: நிகோலஸ் கோபர்நிகஸ் - விண்வெளியில் காணப்படும் அனைத்து பொருட்களையும் உள்ளடக்கியது
விடை: அண்டம் - அண்டத்தின் அடிப்படைக் கூறுகள்
விடை: விண்மீண் திரள்கள் - பார்க்கக்கூடிய அண்டத்தின் அளவு
விடை: 93 பில்லியன் ஒளி ஆண்டுகள் - அண்டத்தின் பெரும் பகுதி ——–மற்றும் ——ஆக உள்ளது.
விடை: இருண்ட பொருள் மற்றும் இருண்ட ஆற்றல் - பெருவெடிப்பில் தோன்றிய அடிப்படை தனிமங்கள்
விடை:ஹைட்ரஜன், ஹீலியம் - அண்டம் கிட்டத்தட்ட _ % இருண்ட பொருளால் ஆனது
விடை: 27% - அண்டத்தில் உள்ள இருண்ட ஆற்றலின் சதவீதம்
விடை:63% - விண்மீன்களில் தனிமங்கள் இருக்கக் காரணம்
விடை:ஈர்ப்பு விசை - சூரியன் விண்மீன் திரளின் மையத்தை சுற்றி வர ஆகும் காலம்
விடை:250 மில்லியன் ஆண்டுகள் - அண்டத்தில் உள்ள விண்மீன் திரள்களின் எண்ணிக்கை
விடை:சுமார் நூறு மில்லியன் - அதிக சூடேற்றப்பட்ட பருப்பொருள் நிலை எனப்படும்
விடை:பிளாஸ்மா - அருகிலுள்ள விண்வெளித் திரள்
விடை:அண்டிரோமீடா - ஏற்றுக்கொள்ளக்கூடிய நட்சத்திரக் கூட்டங்களின் எண்ணிக்கை
விடை:88 - கோள்கள் சூரியனை சுற்றி வரக் காரணம்
விடை:ஈர்ப்பு விசை - சூரியனின் ஈர்ப்பு புவியைப் போல _ மடங்கு அதிகம்
விடை:28 மடங்கு - சூரியனின் புறப்பரப்பு வெப்பநிலை °C.
விடை:5500 – 6000°C - சூரியனை கோள்கள் ஒருமுறை சுற்றி வர ஆகும் காலம் எனப்படும்.
விடை:சுற்றுக்காலம் - ஒரு கோள் தன்னைத்தானே ஒருமுறை சுழல்வதற்கு எடுத்துக் கொள்ளும் காலம் ஆகும்.
விடை:சுழற்சிக்காலம் - பூமியின் அளவை ஒத்த சிறப்புக் கோள்
விடை:வெள்ளி - மற்ற கோள்களுக்கு எதிர்த்திசையில் சுழலும் கோள்
விடை:வெள்ளி - சூரிய மண்டலத்திலேயே பெரிய நிலவு
விடை:கானிமீடு - அடர்த்தி மிகவும் குறைவான கனமற்ற கோள்
விடை: - முழுவதும் எரியாமல் கற்களாக பூமியில் விழும் கற்கள்
விடை:விண் வீழ்கற்கள் - நிலவு (துணைக்கோள்) இல்லாத கோள்கள்
விடை:புதன், வெள்ளி - முதன் முறையாக செலுத்தப்பட்ட செயற்கைக் கோள்
விடை:ஸ்புட்னிக் - புவி நிலைத் துணைக் கோளின் சுற்றுக்காலம் மணி
விடை:24 - ஈர்ப்பியல் மாறிலியின் மதிப்பு
விடை:6.67 x 10-11 நி.மீ-கி.கி - புவியின் நிறை – kg.
விடை:5.972 x 1024 - சம பரப்புகளின் விதி என்பது கெப்ளரின் – விதி
விடை:இரண்டாம் - பொருள்கள் (அ) மனிதர்கள் எடையற்று இருப்பது போல் தோன்றும் நிலை ஆகும்
விடை:நுண் ஈர்ப்பு நிலை - ஒரு செயற்கைக் கோளின் உயரம் குறைவாக இருந்தால் – அதிகமாக இருக்கும்.
விடை:சுற்றியக்க திசைவேகம் - பன்னாட்டு விண்வெளி மையத்தில் அதிக நாள் இருந்தவர்
விடை:ஸக்கி வில்சன் - இயக்கக் குறைபாடு மற்றும் பேக்சில் குறைபாடு உள்ளவர்களுக்கு – தொழில்நுட்பம் பயன்படுகிறது.
விடை:கண்ணை தொடரும் தொழில்நுட்பம் - அறுவை சிகிச்சை மூலம் அகற்ற இயலாத கட்டிகளை நீக்க, துல்லியமாக உடல் ஆய்வு செய்ய பயன்படுகிறது.
விடை:தானியங்கி கைகள் - பன்னாட்டு விண்வெளி மையத்தை இயக்கவும், பராமரிக்கவும் நாடுகளின் ஒத்துழைப்பு தேவை.
விடை:16 - இஸ்ரோவின் தலைவர்
விடை:கே.சிவன் - அதி நீள்வட்டப் பாதையில் சூரியனை சுற்றி வரும் தூசு மற்றும் பனி நிறைந்த பொருள் எனப்படும்.
விடை:வால் விண்மீன் - வாயு, தூசு , விண்மீன்கள் மற்றும் சூரிய மண்டலங்களை உள்ளடக்கியது ஆகும்.
விடை:விண்மீன் திரள் - சூரியன் மற்றும் சூரிய மண்டலத்திலுள்ள கோள்கள் விண்மீன் திரளில் உள்ளது
விடை:பால்வெளி வீதி - இரவில் நம் கண்களால் காணக்கூடிய விண்மீன்களின் எண்ணிக்கை
விடை:3000 - சூரியன் மற்றும் அதைச் சுற்றிவரும் பொருட்கள் சேர்ந்தது ஆகும்.
விடை:சூரிய மண்டலம் - வட துருவத்தில்_நாள்களுக்கு சூரியனை நம்மால் காண இயலாது.
விடை:186 - ஹாலி விண்மீன்கள் ஆண்டுகளுக்கு ஒரு முறை மீண்டும் தெரியும்.
விடை:76 - ஈர்ப்பின் விளைவு இல்லாத நிலையில் எரியும் நெருப்பின் சுடர் வட்டம் இருக்கும்.
விடை:வடிவில் - விண்ணிலுள்ள பொருட்களில் வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய மனிதனால் உருவாக்கப்பட்ட பெரிய பொருள்
விடை:பன்னாட்டு விண்வெளி மையம் - பன்னாட்டு விண்வெளி மையத்தின் முதல் பகுதியை எடுத்துச் சென்ற கலம்.
விடை:ரஷ்யாவின் ஸார்யா - கோள்கள் உருவானபோது வெளிப்பட்ட லட்சக்கணக்கான பாறைத் துகள்கள் சூரியனை சுற்றி வருகின்றன. இவை எனப்படும்.
விடை:சிறுகோள்கள்
II. பொருத்துக.

III. கூற்று மற்றும் காரண வகை
சரியான தேர்வை கீழ்வருவது போல் குறி.
a) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கமாகும்.
b) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல.
c) கூற்று சரி. காரணம் தவறு.
d) கூற்று தவறு. காரணம் சரி.
- கூற்று (A) : அண்டத்திலுள்ள விண்மீன் திரள்கள் பல வடிவங்களில் உள்ளன.
காரணம் (R) : வடிவத்தைப் பொருத்து சுருள் திரள், நீள்வட்டத்திரள், வடிவமற்ற திரள் என வகைப்படுத்தப் படுகின்றன.
விடை : a) கூற்று காரணம் இரண்டும் சரி. காரணம் கூற்றின் சரியான விளக்கமாகும். - கூற்று (A) : வெப்பநிலையை பொருத்து விண்மீன்கள் பல வண்ணங்களில் தோன்றுகின்றன.
காரணம் (R) : செவ்வாய் சிவப்புக் கோள் எனப்படும்.
விடை : b) கூற்று காரணம் இரண்டும் சரி. ஆனால் காரணம் கூற்றின் சரியான விளக்கமல்ல. - கூற்று (A) : சூரியனில் அணுக்கரு இணைவு கடக்கிறது.
காரணம் (R) : சூரியனில் ஆக்ஸிஜன் உள்ளது.
விடை : C) கூற்று சரி. காரணம் தவறு.
IV. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.
- வெப்ப விண்மீன்கள் : நீலநிறம் :: குளிர்வான விண்மீன்கள் : _________________
விடை: சிவப்பு நிறம் - புவியின் சுற்றுகாலம் :: _________________ :: சுழற்சிக்காலம் : 24 மணி
விடை: 365.25 நாள்கள் - NASA: அமெரிக்கா :: ISRO : _________________
விடை: இந்தியா