இயல் 2 உயிருக்கு வேர்
பாண்டிய மண்டலத்து நிலப்பகுதியில் ஏரியைக் கண்மாய் என்பர்.
இடத்தில் தோண்டி சுடுமண் வளையமிட்ட கிணற்றுக்கு உறை கிணறு என்றும் மக்கள் பருகுநீர் உளாள நீர்நிலைக்கு ஊரூணி என்றும் பெயர்.
கல்லணையின் நீளம் 1080 அடியாகவும் அகலம் 40 முதல் 60 அடியாகவும் உயரம் 15 முதல் 18 அடியாகவும் இருக்கிறது.
இந்திய நீர்பாசனத்தின் தந்தை சர் ஆர்தர் காட்டன்.
இவர் கல்லணைக்கு ‘ கிராண்ட் அணைக்கட் ‘ என்ற பெயரை சூட்டினார். மேலும் கல்லணையின் கட்டுமான உத்தியைக்க கொண்டு 1873ல் கோதாவரி ஆற்றின் குறுக்கே தௌலீஸ்வரம் அணையைக் கட்டினார்.
நீரும் நீராடலும் வாழ்வியலோடு பிணைக்கப்பட்டவையாக விளங்குகின்றன என்பார் பேராசிரியர் தொ.பரமசிவன்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடி என்கிறார் ஆண்டாள்.
தெய்வச்சிலைகளை குளிக்க வைப்பதை திருமஞ்சனம் ஆடல் என்பர்.
சனி நீராடு என்பது ஔவையின் வாக்கு.
திருமணமான பின் கடலாடுதல் என்ற வழக்கமும் தமிழகத்தில் நிலவுகிறது.
தமிழ்நாடு வெப்பமண்டலப் பகுதியில் உள்ளது.
தமிழகத்தின் நீர்நிலைப் பெயர்களும் விளக்கமும்
ஆழிக்கிணறு – கடலருகே தோண்டிக் கட்டிய கிணறு
இலஞ்சி – பலவகைக்கும் பயன்படும் நீர்த்தேக்கம்.
கூவல் – உவர் மண் நிலத்தில் தோண்டப்படும் நீர்நிலை
குண்டு – குளிப்பதற்கேற்ற சிறுகுளம்
குண்டம் – சிறயதாய் அமைந்த குளிக்கும் நீர்நிலை
சிறை – தேக்கப்பட்ட பெரிய நீர்நிலை
பாரதியாரின் வழித்தோன்றலாகவும் பாரதிதாசனின் மிணவராகவூம் விளங்கியவர் கவிஞர் தமிழ் ஒளி.
சுந்தரர் – திருத்தொண்டர் தொகை
நம்பியாண்டார் நம்பி – திருத்தொண்டர் திருவந்தாதி
சேக்கிழார் – திருத்தொண்டர் புராணம் (பெரிய புராணம்)
நம் முன்னோர்கள் நீரநிலைகளை உருவாக்குபவரை உயிரை உருவாக்குபவர் என்று போற்றினர்.