இயல் 1 அமுதென்று பேர்
இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300 க்கும் மேற்ப்பட்டது .
இவற்றை நான்கு மொழிக்குடும்பங்களாகப் பிரிக்கின்றனர். அவை ,
1. இந்தோ – ஆசிய மொழிகள்
2. திராவிட மொழிகள்
3. ஆஸ்திரோ ஆசிய மொழிகள்
4. சீன – திபெத்திய மொழிகள்
இந்தியநாடு மொழிகளின் காட்சிச்சாலையாகத் திகழ்கிறது என்று ச.அகத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.
திராவிடம் என்ற சொல்லை முதலில் குறிப்பிட்டவர் குமரிலப்பட்டர்.
தமிழ் என்ற சொல்லிலிருந்துதான் திராவிடா என்ற சொல் பிறந்தது என்று மொழி ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஹீராஸ் பாதிரியார் என்பார்
இம்மாற்றத்தைத் தமிழ் → தமிழா → தமிலா → டிரமிலா → ட்ரமிலா → த்ராவிடா → திராவிடா என்று விளக்குகின்றார்.
அறிஞர் வில்லிய ம் ஜோன்ஸ் என்பார் வடமொழியை ஆராய்ந்து மற்ற ஐரோப்பிய மொழிகளோடு தொடர்புடையது வடமொழி என முதன்முதலில் குறிப்பிட்டார்.
முதன்முதலில் பிரான்சிஸ் எல்லிஸ் என்பார் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,
மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆய்ந்து இம்மொழிகளை ஒரே இனமாகக் கருதித் தென்னிந்திய
மொழிகள் எனவும் பெயரிட்டர்.
ஹோக்கன் என்பார் இம்மொழிகள் அனைத்தையும் இணைத்துத் தமிழியன் என்று பெயரிட்டதோடு ஆரிய மொழிகளிலிருந்து இவை மாறுபட்டவை
என்றும் கருதினார். மாக்ஸ் முல்லரும் இதே கருத்தைக் கொண்டிருந்தார்.
திராவிட மொழிக்குடும்பம்,மொழிகள் பரவிய நில அடிப்படையில் தென்திராவிட மொழிகள் , நடுத்திராவிட மொழிகள் , வட திராவிட மொழிகள் என மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது .
திராவிட மொழிகள் மொத்தம் 28 எனக் கூறுவர்.
தமிழ் வட மொழியின் மகளன்று ; அது தனிக்குடும்பத்திற்கு உரியமொழி;
– கால்டுவெல்
“ காலம் பிறக்கும்முன் பிறந்தது தமிழே! எந்தக்
காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே! ” ஈரோடு தமிழன்பன்
இவரது ‘வணக்கம் வள்ளுவ’ என்னும் கவிதை நூலுககு 2004ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமி விருது வழங்கப்பட்டது.
உ்லகத் தாய்மொழி தினம் பிப்ரவரி 21
தமிழை ஆட்சி மொழியகாக்க கொண்ட நாடுகள் இ்லங்கை, சிங்கப்பூர்.
கண்ணி – இரண்டு கண்களைப் போல் இரண்டிரண்டு பூக்களை வைத்துத் தொடுக்கப்படும் மாலைக்குக் கண்ணி என்று பெயர். அதே போல் தமிழில் இரண்டிரண்டு அடிகள் கொண்ட எதுகையால் தொடுக்கப்படும் செய்யுள் வகை கண்ணி ஆகும்.
சொல்லும் பொருளும்
மூன்றினம் – துறை , தாழிசை , விருத்தம்
முக்குணம் – சத்துவம் , இராசசம் , தாமசம்.
ஊனரசம் – குறையுடைய சுவை
தமிழ்ச் சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்றான தூது , வாயில் இலக்கியம் , சந்து இலக்கியம் என்ற வேறு பெயர்களாலும் அழைக்கப்படுகிறது.
தமிழ் விடு தூது 268 கண்ணிகளைக் கொண்டது. இந்நூலின் ஆசிரியர் யார் என அறிய இயலவில்லை. இதை 1930 ல் உ.வே.சா முதன்முதலில் பதிப்பித்தார்.
பெயர் எண் அளவு
முந்திரி 1/320
அரைக்காணி 1/160
அரைக்காணி முந்திரி 3/320
காணி 1/80
கால் வீசம் 1/64
அரைமா 1/40
அரை வீசம் 1/32
முக்காணி 3/80
முக்கால் வீசம் 3/64
ஒருமா 1/20
மாகாணி (வீசம்) 1/16
இருமா 1/10
அரைக்கால் 1/8
மூன்றுமா 3/20
மூன்று வீசம் 3/16
நாலுமா 1/5
பாவின் சுவைகளில் ஒன்றாக இளிவரல் என்ற துன்பச் சுவையினைத்
தமிழிலக்கணங்கள் சுட்டுகின்றன.
கிரேக்கத்தில் துன்பச் சுவையுடைய பாடல்கள் இளிகியா (ελεγεία) என அழைக்கப்படுகின்றன.
ஒரு தொடரில் எழுவாயும், செயப்படுபொருளும் பெயர்ச்சொல்லாக இருக்கும். பயனிலை, அந்த தொடரின் பயன் நிலைத்து இருக்கும் இடமாகும்.