9th Science Guide Chapter 10 நம்மைச் சுற்றியுள்ள பொருட்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

  1. மிக அதிக வேகத்தில் சுழலச் செய்து, கனமான பொருட்களிலிருந்து லேசான பொருட்களைப் பிரித்தெடுக்கும் முறை _________________.
    அ) வடிகட்டல்
    ஆ) வண்டல்
    இ) சாய்த்து வடித்தல்
    ஈ) மைய விலக்கம்
    விடை:ஈ) மைய விலக்கம்
  2. பின்வருவனவற்றுள் _________________ ஒரு கலவை
    அ) சாதாரண உப்பு
    ஆ) தூய வெள்ளி
    இ) கார்பன் டை ஆக்ஸைடு
    ஈ) சாறு
    விடை:ஈ) சாறு
  3. ஒரு துளி மையினை நாம் நீரில் கலக்கும் போது நமக்குக் கிடைப்பது _________________.
    அ) பலபடித்தான கலவை
    ஆ) சேர்மம்
    இ) ஒருப்படித்தான கலவை
    ஈ) தொங்கல்
    விடை:இ) ஒருபடித்தான கலவை
  4. கரைப்பானைக் கொண்டு சாறு இறக்குதல் முறையில் _________________ அவசியம்
    அ) பிரிபுனல்
    ஆ) வடிதாள்
    இ) மைய விலக்கு இயந்திரம்
    ஈ) சல்லடை
    விடை:அ) பிரிபுனல்
  5. _________________ மாதிரி முழுவதும் ஒரே பண்புகளைக் கொண்டுள்ளது.
    அ) தூயபொருள்
    ஆ) கலவை
    இ) கூழ்மம்
    ஈ) தொங்கல்
    விடை:அ) தூயபொருள்

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

  1. _________________ விடைகள் கலவையின் இயைபுப் பொருள்களுக்கு வேறுபடுத்தக்கூடிய எல்லைக்கோடு இல்லை.
    விடை:ஒருபடித்தான
  2. பதங்கமாகும் பொருளுக்கு எடுத்துக்காட்டு _________________.
    விடை:உலர் பனிக்கட்டி
  3. நீரிலிருந்து ஆல்கஹால் _________________ மூலம் பிரித்தெடுக்கப்படுகிறது.
    விடை:பின்னக் காய்ச்சி வடித்தல்
  4. பெட்ரோலிய சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் பிரித்தெடுத்தல் முறை _________________.
    விடை:பின்னக் காய்ச்சி வடித்தல்
  5. வண்ணப்பிரிகை முறை _________________ தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
    விடை:ஒரே கரைப்பானில் வெவ்வேறாகக் கரையும் திறன்

III. சரியா? தவறா? எனக் தவறெனில் திருத்துக

  1. எண்ணெய் மற்றும் தண்ணீர் இரண்டும் ஒன்றில் ஒன்று கலவாதது
    விடை :சரி
  2. வேதிமுறையில் ஒரு சேர்மத்தை தனிமங்களாக பிரிக்க முடியாது.
    விடை :தவறு. வேதிமுறையில் ஒரு சேர்மத்தை எளிய பொருட்களாக உடைக்க முடியும்.
  3. திரவ-திரவ கூழ்மங்கள் களிம்பு எனப்படும்
    விடை :தவறு. திரவம் – திண்ம கூழ்மங்கள் களிம்பு எனப்படும்.
  4. மோர் ஒரு பலபடித்தான கலவைக்கு எடுத்துக்காட்டாகும்
    விடை :சரி
  5. ஆஸ்பிரின் தனது நிறையில் 60% கார்பன், 4.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு கலவை
    விடை :தவறு. ஆஸ்பிரின் நிறையில் 60% கார்பன், 4.5% ஹைட்ரஜன் மற்றும் 35.5% ஆக்ஸிஜனைக் கொண்டுள்ளது. ஆஸ்பிரின் ஒரு சேர்மம்.

IV. பொருத்துக

Additional Important Questions and Answers

I. ஒரு மதிப்பெண் வினாக்கள்

  1. பருப்பொருள்களின் நிலைமாற்றத்தின் போது, வெப்ப ஆற்றலானது துகள்களின் _________________ மாற்றப்படுகிறது.
    விடை:இயக்க ஆற்றலாக
  2. தனிமங்கள் இயற்பியல் மற்றும் வேதிக் கூடுகை முறையில் _________________ மற்றும் உருவாக்குகின்றன.
    விடை:கலவை, சேர்மங்களை
  3. டிண்டால் விளைவிற்கு _________________ உட்படாது
    விடை:உண்மைக் கரைசல்
  4. இரத்தத்திலிருந்து பிளாஸ்மாவைப் பிரித்தெடுக்கப் பயன்படும் முறை _________________.
    விடை:மைய விலக்கு முறை
  5. _________________ பின்னக்காய்ச்சி வடித்தல் முறையில் சுத்திகரிக்கப்படுகின்றன.
    விடை:பெட்ரோலியப் பொருட்கள்
  6. ________________ இராபர்ட் பிரௌன் என்ற தாவரவியல் வல்லுனரால் பெயரிடப்பட்டது.
    விடை:பிரௌனியன் இயக்கம்
  7. _________________ மூலம் சிலிக்கான் அணுக்கள் மேற்பரப்பில் பார்க்கப்படுகிறது.
    விடை:அலகீட்டு மின்னணு நுண்னோக்கி
  8. இயக்கம் என்பது _________________.
    விடை:நகர்வாகும்
  9. திண்மப் பருப்பொருள்களின் துகள்கள் _________________, _________________ அடுக்கப்பட்டுள்ளன.
    விடை:நெருக்கமாகவும், வரிசையாகவும்
  10. _________________, _________________, _________________ துகளின் வரிசை அமைவு, இயக்கம் பற்றி கூறுவது.
    விடை:திட, திரவ, வாயு
  11. திண்மங்களில் துகள்களுக்கு இடையேயுள்ள இடைவெளியானது குறைவாக இருப்பதால் திண்மங்களை _________________ முடியாது.
    விடை:அழுத்த
  12. வாயுக்களை எளிதில் _________________.
    விடை:அழுத்த முடியும்
  13. ஒளி, ஒலி, வெப்பம் ஆகியவைகள் _________________.
    விடை:பருப்பொருள்கள் அல்ல
  14. பருப்பொருளை வெப்பப்படுத்தும் போதோ அல்லது குளிர்விக்கும் போதோ வெப்ப ஆற்றலானது _________________.
    விடை:உறிஞ்சப்படுகிறது
  15. திட உலோகமான _________________ திரவமாக மாறுவதற்கு நமது கரத்தில் உள்ள வெப்பமே போதுமானது
    விடை:காலியம்
  16. ஒரு பொருள் குறிப்பிட்ட வெப்பநிலையில் உருகுவது _________________ எனப்படும்.
    விடை:உருகுநிலை
  17. ஆக்ஸிஜனின் உருகுநிலை _________________.
    விடை:-219
  18. வைரத்தின் உருகுநிலை _________________.
    விடை:3550
  19. ஒரு பொருள் அதன் கொதிநிலையில் திரவ நிலையிலிருந்து வாயு நிலைக்கு மாறும் செயல் _________________.
    விடை:கொதித்தல்
  20. சோடியத்தின் கொதிநிலை
    விடை:890
  21. இரும்பின் கொதிநிலை
    விடை:2900
  22. ஆவியாதல் நிகழ்வில் திரவத்தின் சராசரி இயக்க ஆற்றல் _________________ அதன் வெப்பநிலை _________________.
    விடை:குறைந்து, குறைகிறது
  23. ________________ என்பது ஓர் இயற்கையான முறையாகும்
    விடை:ஆவியாதல்
  24. உலர் பனிக்கட்டியானது சில சமயங்களில் _________________ என குறிப்பிடப்படுகிறது.
    விடை:கார்ட் ஐஸ்
  25. ஒரு தனிமம் என்பது _________________ வகையான அணுக்களை கொண்டது
    விடை:ஒரே
  26. _________________ தூய்மையற்ற பொருட்கள் என கருதப்படுகிறது.
    விடை:கலவைகள்
  27. சேர்மம் என்பது _________________ அல்லது _________________ மேற்பட்ட தனிமங்கள் ஒரு குறிப்பிட்ட நிறை விகிதத்தில் கூடியிருப்பது.
    விடை:இரண்டு அல்லது இரண்டிற்கு
  28. ஒரு தூய பொருளில் கலந்துள்ள பகுதிப் பொருட்களின் விகிதம் _________________.
    விடை:மாறாதது
  29. கலவையின் பகுதிப்பொருட்களை _________________ முறையில் பிரித்தெடுக்க முடியும்.
    விடை:இயற்பு
  30. ________________ குறிப்பிட்ட கொதிநிலை மற்றும் உருகுநிலையைப் பெற்றுள்ளன.
    விடை:சேர்மம்
  31. கலவைகள் _________________ வகைப்படும்.
    விடை:ஒரு படித்தானவை, பல படித்தானவை
  32. ஒரு படித்தான கலவைகள் _________________ உள்ளது
    விடை:ஒரே நிலைமையில்
  33. பல படித்தான கலவைகள் _________________ தனித்த நிலைமைகளை கொண்டுள்ளது.
    விடை:ஒன்றுக்கு மேற்பட்ட
  34. ________________ என்பது பரவிய நிலைமை மற்றும் பரவல் ஊடகம் கொண்ட கூழ்மக் கரைசல்
    விடை:பலபடித்தான அமைப்பாகும்.
  35. ________________ திரவம் திண்மத்தில் பரவியுள்ள கூழ்மக் கரைசல் ஆகும்.
    விடை:கூழ் களிமங்கள்

II. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.

  1. ஆவியாதல் என்பது முழுவதும் நிகழும் நிகழ்வு ஆகும்.
    விடை:தவறு. ஆவியாதல் திரவத்தின் மேற்பரப்பில் நிகழும் நிகழ்வு
  2. வாயுக்கள் என்பவை அழுத்த இயலாத் தன்மை கொண்ட பாய்மம்
    விடை:தவறு. வாயுக்கள் எளிதில் அழுத்தத்திற்கு உட்படுபவை.
  3. நீரின் மூன்று நிலைமைகளும் காணப்படும் 0°C முப்புள்ளி எனப்படுகிறது.
    விடை:சரி
  4. நீர்மங்களை ஆவியாக மாற்றும் செயல்முறையின் பெயர் குளிர்தல் ஆகும்.
    விடை:தவறு. வாயுக்களை நீர்மங்களாக மாற்றும் செயல்முறையின் பெயர் குளிர்தல் ஆகும்.
  5. மகரந்தத் துகள்களின் நகர்வு டிண்டால் விளைவு.
    விடை:தவறு. மகரந்தத்துகள்களின் நகர்வு பிரௌனியன் நகர்வு.

III. பொருத்துக

IV. கூற்று மற்றும் காரண வகை

கூற்று மற்றும் காரணம் என இரு வரிகள் கொடுக்கப்பட்டுள்ளன. இரண்டாவது கூற்று (காரணம்), முதல் கூற்றிற்கான விளக்கம் ஆகும். கூற்றுகளை நன்கு படித்து உனது விடைகளைக், கொடுக்கப்பட்ட குறியீடுகளைக் கொண்டு குறிப்பிடுக.

  1. கூற்று (A) : திண்மங்களை அழுத்த இயலாது
    காரணம் (R) : திண்மத்துகள்களுக்கு இடையேயான இடைவெளி மிகக் குறைவு.
    a) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R), (A) க்கு சரியான விளக்கமாகும்
    b) (A) மற்றும் (R) இரண்டும் சரி. ஆனால் (R), (A) ன் சரியான விளக்கம் அல்ல.
    c) (A) சரி ஆனால் (R) தவறு
    d) (A) தவறு ஆனால் ( R) தவறு
    விடை : a) (A) மற்றும் (R) இரண்டும் சரி. மேலும் (R), (A) க்கு சரியான விளக்கமாகும்
  2. கூற்று (A) : மலை உச்சியில் நீரின் கொதிநிலை 120°c ம், பிரஷர் குக்கரில் 90°C ம் ஆகும்.
    காரணம் (R) : ஒரு திரவத்திலிருந்து வெளியேறும் வாயுவின் ஆவி அழுத்தமும், அத்திரவத்தின் மீது சூழ்நிலை அழுத்தமும் சமமாகும் போது ஒரு திரவம் கொதிக்க ஆரம்பிக்கிறது.
    a) (A) மற்றும் (R) இரண்டும் சரி . மேலும் (R), (A) க்கு சரியான விளக்கமாகும்
    b) (A) மற்றும் (R) இரண்டும் சரி. ஆனால் (R), (A)ன் சரியான விளக்கம் அல்ல.
    c) (A) சரி ஆனால் (R) தவறு
    d) (A) தவறு ஆனால் ( R) தவறு
    விடை:d). (A) தவறு ஆனால் (R) சரி

Leave a Reply

Your email address will not be published.