9th Science Guide Chapter 18 திசுக்களின் அமைப்பு

பகுதி – I புத்தக வினாக்கள்

I. சரியான விடையைத் தேர்ந்தெடு

  1. உயிருள்ள மெல்லிய சுவருடைய பல கோண வடிவ செல்களைக் கொண்டுள்ள திசு.
    அ) பாரன்கைமா
    ஆ) கோலன்கைமா
    இ) ஸ்கிளிரன்கைமா
    ஈ) மேலே கூறிய எதுவும் இல்லை
    விடை:அ) பாரன்கைமா
  2. நார்கள் கொண்டுள்ளது
    அ) பாரன்கைமா
    ஆ) ஸ்கிளிரன்கைமா
    இ) கோலன்கைமா
    ஈ) ஏதும் இல்லை
    விடை:ஆ) ஸ்கிளிரன்கைமா
  3. துணை செல்கள் ____ வுடன் மிக நெருக்கமாக இணைந்துள்ளன.
    அ) சல்லடைக் கூறுகள்
    ஆ) பாத்திரக் கூறுகள்
    இ) ட்ரைக்கோம்கள்
    ஈ) துணை செல்கள்
    விடை:அ) சல்லடைக் கூறுகள்
  4. கீழ்கண்ட எது ஒரு கூட்டுத் திசுவாகும்?
    அ) பாரன்கைமா
    ஆ) கோலன்கைமா
    இ) சைலம்
    ஈ) ஸ்கீளிரன்கைமா
    விடை:இ) சைலம்
  5. ஏரேன்கைமா எதில் கண்டறியப்படுகிறது?
    அ) தொற்று தாவரம்
    ஆ) நீர்வாழ் தாவரம்
    இ) சதுப்பு நில தாவரம்
    ஈ) வறண்ட தாவரம்
    விடை:ஆ) நீர்வாழ் தாவரம்
  6. மிருதுவான தசை காணப்படுவது
    அ) கர்ப்பப்பை
    ஆ) தமனி
    இ) சிரை
    ஈ) அவை அனைத்திலும்
    விடை:ஈ) அவை அனைத்திலும்
  7. நரம்பு செல்கள் பெற்றிறாதது.
    அ) ஆக்சான்
    ஆ) நரம்பு நுனி
    இ) தசைநாண்கள்
    ஈ) டென்ட்ரைட்
    விடை:இ) தசை நாண்கள்

II. பொருத்துக

III. கோடிட்ட இடத்தை நிரப்புக

  1. உள்ளுறுப்புகளுக்கு _____ திசுக்கள் உறுதியை அளிக்கின்றன.
    விடை:கோலன்கைமா
  2. பாரன்கைமா, குளோரன்கைமா கோலன்கைமா, ஸ்கிளிரன்கைமா எளிய ஆகியவை _____ வகை திசுக்களாகும்.
  3. _____ மற்றும் ____ ஆகியவை கூட்டுத்திசுக்களாகும்.
    விடை:சைலம், புளோயம்
  4. குறுயிலை கொண்ட எபிதீலிய செல்கள் நமது உடலின் _____ பகுதியில் உள்ளன.
    விடை:சுவாச குழாய்
  5. சிறுகுடலின் புறணி ____ ஆல் ஆனது.
    விடை:தூண் எபிதீலியம்
  6. மியாஸிஸ் நிகழ்ச்சியில் குரோமோசோம்கள் ஜோடியுறும் உண்டு ஒத்திசைவான குரோமோசோம் போது, ____ குரோமோசோம்கள்
    விடை:ஒன்றின் பக்கம் ஒன்றாக அமைந்திருக்கும்.

IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக

  1. எபிதீலிய திசு விலங்கு உடலின் பாதுகாப்பு திசுவாகும்.
    விடை:சரி
  2. எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை சிற்றிடை இணைப்பு திசுவின் இருவகையாகும்.
    விடை:தவறு
  3. எலும்பு மற்றும் குருத்தெலும்பு ஆகியவை ஆதார இணைப்புத் திசுவின் இரு வகையாகும்.
  4. பாரன்கைமா ஒரு எளிய திசு
    விடை:சரி
  5. ஃபுளோயம் டிரக்கிடுகளால் ஆனது.
    ஃபுளோயம் சல்லடைக் குழாயினால் ஆனது.
    விடை:தவறு
  6. கோலன்கைமாவில் நாளங்கள் காணப்படுகின்றன.
    சைலத்தில் நாளங்கள் காணப்படுகின்றன
    விடை:தவறு

9th Science Guide திசுக்களின் அமைப்பு Additional Important Questions and Answers

பகுதி – II. கூடுதல் வினாக்கள்

I. ஒரு மதிப்பெண்வினாக்கள்.

  1. லிக்னின் காணப்படும் எளிய வலிமை தரும் திசு _______
    விடை:கோலன்கைமா
  2. ஒரு தாவரத்தில் பொதுவாகக் காணப்படும் எளியத்திசு ______
    விடை:பாரன்கைமா
  3. திசுக்களைப் பற்றி அறிகிற அறிவியல் பிரிவு _____
    விடை:ஹிஸ்டாலஜி (Histology)
  4. தென்னையின் மட்டையில் காணப்படும் திசு _____
    விடை:ஸ்கிளிரன்கைமா
  5. எந்தத்திசு தாவரத்தின் நீள் வளர்ச்சிக்காக காரணமாக உள்ளது?
    விடை:நுனி ஆக்குத்திசு
  6. ____ முதிர்ந்த பின்பும் தன் உட்கருவை இழக்காமலுள்ளது?
    விடை:துணை செல்கள்
  7. புளோயம் திசுவில் காணப்படும் உயிரற்ற கூறு ______
    விடை:புளோயம் நார்கள்
  8. வயலிலுள்ள ஒரு கரும்பு, தாவரத்தின் நுனிப்பகுதி நீக்கப்பட்டாலும் அது தொடர்ந்து நீளமாக வளர்வதற்குக் காரணம் ______
    விடை:இடை ஆக்கு திசு
  9. லிக்னினை தனது இரண்டாம் செல்சுவரில் கொண்டுள்ள திசு _______
    விடை:ஸ்கிளிரன்கைமா
  10. ஜீட் என்பது ______
    விடை:இரண்டாம் பாஸ்ட் நார்கள்
  11. இரத்தம் உறைதலுக்கு காரணமான வைட்டமின் _______
    விடை:வைட்டமின் K
  12. தசை நாரின் சைட்டோபிளாசம் _____ என்று அழைக்கப்படுகிறது.
    விடை:சார்கோஃபிளாசம்
  13. எந்த விலங்கில் கொழுப்புத்திசு அதிக அளவில் காணப்படுகிறது?
    விடை:திமிங்கலம்
  14. இரத்தம் மற்றும் எலும்பு _____ திசுவிலிருந்து தோன்றுகிறது?
    விடை:மீசோடெர்ம்
  15. நமது உடலில் 60% கரிம பொருட்கள் காணப்படும் உறுப்பு ______
    விடை:எலும்பு
  16. இரத்தக் குழாய்களின் உள் அடுக்கு ______ திசுவினால் ஆனது?
    விடை:எபிதீலிய திசு
  17. இரத்தத்திற்கும் உடல் திரவங்களுக்கு மிடையே இணைப்பாக செயல்படுவது _______
    விடை:நிணநீர்
  18. சுருங்கும் புரதம் காணப்படுவது _______
    விடை:எலும்பின் மஜ்ஜை
  19. சுருங்கும் புரதம் காணப்படுவது ______
    விடை:தசை
  20. எலும்பு மேட்ரிக்ஸில் அதிகம் காணப்படுவது ______
    விடை:கால்சியம் மற்றும் பாஸ்பரஸ்
  21. இரு நியூரான்களை இணைப்பது ______
    விடை:சினாப்ஸ்
  22. தண்டின் குறுக்களவு அதிகரிக்கக் காரணம் ______
    விடை:பக்க ஆக்குத் திசு
  23. இரத்தக் குழாய்களின் உள்பூச்சாகக் காணப்படுவது ____ ஆகும்
    விடை:தட்டு எபிதீலியம்
  24. சிறுகுடலில் உள் பூச்சாகக் காணப்படும் திசு _____ ஆகும்.
    விடை:எளிய தூண் எபிதீலியத்திசு
  25. சிறுநீரக நுண்குழலின் உள்பூச்சாகக் காணப்படுவது _____ ஆகும்
    விடை:கனசதுர எபிதீலியத்திசு
  26. பெலோபியன் நுண்குழலின் உள்பூச்சாகக் காணப்படுவது ______
    விடை:குறுயிழை எபிதீலியத்திசு
  27. மனித உடலில் அதிகபட்சமாகக் காணப்படும் திசு _____ ஆகும்.
    விடை:இணைப்புத் திசு
  28. குரோமோசோம்கள் பூங்கொத்து போன்ற அமைப்பு நிலையைப் பெற்று லெப்டோடீன் காணப்படும் நிலை _____ ஆகும்.
    விடை:லொயோலா
  29. கயாஸ்மா உருவாக்கம் மற்றம் குறுக்கெதிர் மாற்றம் நடைபெறும் புரோநிலையின் துணை நிலை _____ ஆகும்.
    விடை:பேக்கிடீன்
  30. வெள்ளை நாரால் ஆன தசையையும் எலும்பையும் இணைக்கும் திசுவிற்கு _____ என்று பெயர்.
    விடை:தசை நாண்
  31. சல்லடை செல்களில் _____ காணப்படுவதில்லை.
    விடை:துணை செல்கள்
  32. உடலின் வெப்பநிலையை சீராக வைப்பது _____ திசுவாகும்
    விடை:கொழுப்புத்திசு
  33. மைட்டாசிஸை முதன் முதலில் கண்டறிந்தவர் _______
    விடை:ஃப்ளம்மிங்
  34. ஆளி தாவரவியல் பெயர் ______ ஆகும்
    விடை:லின்னம் யுசிட்டாஸ்ஸிமம்(ஆளி)
  35. தோலை தசையுடன் இணைக்கும் திசு ______
    விடை:சிற்றடைவிழையம்
  36. சிறுநீரகம் மற்றும் கருவிழிகளை அதிர்ச்சியிலிருந்து பாதுகாக்கும் அதிர்ச்சி உறிஞ்சியாக செயல்படுவது _____
    விடை:கொழுப்புத்திசு
  37. செல்பிரிதலின் உட்கரு பிரிதலுக்கு _____ என்று பெயர்
    விடை:கேரியோகைனசிஸ்
  38. வெள்ளையணுக்களில் சைட்டோபிளாசத்தில் துகள்கள் அற்றவை _____ எனப்படும்
    விடை:ஏகிராணுலோசைட்ஸ்
  39. இலை உருவாக்கத்திற்குக் காரணமான ஆக்குதிசு ____ எனப்படும்
    விடை:தட்டு ஆக்குத்திசு
  40. உருளைக் கிழங்கின் பாரன்கைமாவின் வெற்றிடத்தில் காணப்படும் பொருள் _____ எனப்படும்.
    விடை:ஸ்டார்ச்
  41. சைலம் குழாய்கள் காணப்படும் இம்னோஸ்பெர்ம் ____ ஆகும்
    விடை:நீட்டம்
  42. டெரிடோபைட்டாவிலும் ஜிம்னோஸ்பெர்ம்களிலும் மட்டும் காணப்படும் புளோயம் கூறு ____ ஆகும்
    விடை:சல்லடை செல்
  43. கொலாஜன் நார்கள், மீள்நார்கள் மற்றும் ஃபைரோப்ளாஸ்ட் செல்களாலான முறையான இணைப்புத்திசு ____ ஆகும்
    விடை:சிற்றிடைவிழையம்
  44. மனித உடலின் மிகவும் நீளமான செல் _____ ஆகும்.
    விடை:நியூரான்
  45. _____ செல் சுவரில் துளைகள் காணப்படுவதில்லை
    விடை:துணை செல்கள்
  46. ஆப்பிளில் பாரன்கைமா ______ சேமித்து வைத்துள்ளது
    விடை:சர்க்கரையை
  47. _____ தாவர உறுப்புகளுக்கு வலிமை அளிக்கிறது
    விடை:கோலன்கைமா
  48. _____ ஒரு கடத்தும் திசுவாகும்
    விடை:சைலம்
  49. ஃபுளோயத்தின் கடத்தும் கூறுகள் ______ கூறுகள் என அழைக்கப்படுகின்றன.
    விடை:சல்லடைக்குழாய்
  50. _____ கழிவுப் பொருள்களை நீக்கும் பணியில் ஈடுபடுகின்றன
    விடை:எபிதீலியத் திசுக்கள்

II. பொருத்துக

III. கூற்று மற்றும் காரண வகை

உறுதிபடுத்துதல் : A காரணம் : R
விவரிப்பு :
பின்வரும் கேள்விகளில் ஒரு கூற்று (A) தரப்பட்டுள்ளது. அதற்குரிய காரணம் (R) அதன் கீழ் தரப்பட்டுள்ளது. இவற்றிற்குக் கீழாகத் தரப்பட்டுள்ளவற்றிலிருந்து கேள்விக்கான சரியான விடையைத் தெரிவு செய்க.
a) A மற்றும் R சரி. R – A ஐச் சரியாக விளக்குகிறது.
b) A மற்றும் R சரி. R – A ஐச் சரியாக விளக்கவில்லை.
c) A சரி R தவறானது
d) A மற்றும் R இரண்டும் தவறானது

  1. உறுதிபடுத்துதல் (A) : காது மடல்கள் மென்மையான வளையும் தன்மையுடையவை
    காரணம் (R) : காது மடல்களில் ஹையலின் எனப்படும் குருத்தெலும்புத்திசு காணப்படுகிறது.
    விடை:c) A சரி R தவறானது
  2. உறுதிபடுத்துதல் (A): ஆதார இணைப்புத் திசுவில் அதிக அளவு உயிரற்ற செல்லிடைவெளி செல்லிற்கு புறம்பான மேட்ரிக்ஸ் காணப்படுகிறது.
    காரணம் (R) : செல்லிடை வெளிகளில் புரத நார்கள் காணப்படுகிறது.
    விடை:b) A மற்றும் R சரி. R-A ஐச் சரியாக விளக்கவில்லை.
  3. உறுதிபடுத்துதல் (A) : இரத்த வெள்ளையணுக்கள் தெளிவான உட்கரு கொண்டவை. அமீபா போன்று நகரும் தன்மை கொண்டவை.
    காரணம் (R) : இதில் கிராணுலோசைட்ஸ் ஏகிராணுலோசைட்ஸ் எனும் இருவகைகள் உள்ளன.
    விடை:b) A மற்றும் R சரி. R-A ஐச் சரியாக விளக்கவில்லை.

 

Leave a Reply

Your email address will not be published.