பகுதி – I புத்தக வினாக்கள்
I. சரியான விடையைத் தேர்ந்தெடு
- கீழ்காண்பனவற்றில் எது உமிழ்நீர் சுரப்பி இல்லை ?
அ) நாவடிச் சுரப்பி
ஆ) லாக்ரிமால்
இ) கீழ்தாடைச் சுரப்பி
ஈ) மேலண்ண ச் சுரப்பி
விடை:
ஆ) லாக்ரிமால் - மனிதனின் இரைப்பையில் பெரும்பாலும் செரிப்பவை ____ ஆகும்.
அ) கார்போஹைட்ரேட்கள்
ஆ) புரதங்க ள்
இ) கொழுப்பு
ஈ) சுக்ரோஸ்
விடை:ஆ) புரதங்கள் - மூச்சுக்குழலின் துளைக்குள் உணவானது நுழைவதைத் தடுப்பது _____ ஆகும்.
அ) குரல்வளை மூடி
ஆ) குரல்வளை முனை
இ) கடின அண்ண ம்
ஈ) மிருதுவான அண்ண ம்
விடை:அ) குரல்வளை மூடிகள் - பித்த நீர் ____ செரிக்க உதவுகிறது.
அ) புரதங்கள்
ஆ) சர்க்கரை
இ) கொழுப்புகள்
ஈ) கார்போஹைட்ரேட்டுகள்
விடை:இ) கொழுப்புகள் - சிறுநீரகத்தின் அடிப்படைச் செயல் அலகு _____ ஆகும்.
அ) குடலுறுஞ்சிகள்
ஆ) கல்லீரல்
இ) நெஃப்ரான்
ஈ) சிறுநீரகக்குழாய்
விடை:இ) நெஃப்ரான் - கீழ்க்காண்பனவற்றில் எது வியர்வையின் உட்கூறு இல்லை?
அ) யூரியா
ஆ) புரதம்
இ) நீர்
ஈ) உப்பு
விடை:ஆ) புரதம் - ஆண்களில் சிறுநீரையும் விந்தையும் கடத்துவதற்கான பொதுவான பாதை ஆகும்.
அ) சிறுநீரகக்குழாய்
ஆ) சிறுநீர்ப்புறவழி
இ விந்துக்குழாய்
ஈ) விதைப்பை
விடை:ஆ) சிறுநீர்ப்புறவழி - கீழ்காண்பனவற்றில் எது பெண் இனப்பெருக்க மண்டலத்தில் காணப்படாத பகுதி?
அ) அண்டம்
ஆ) கருப்பை
இ) விந்தகம்
ஈ) அண்டக்குழாய்
விடை:இ) விந்தகம்
II. கோடிட்ட இடங்களை நிரப்பு
- சிறுகுடலோடு இரைப்பை இணையும் பகுதி ____ ஆகும்.
விடை:பைலோரஸ் - உமிழ்நீரோடு உணவினை கலக்குவதற்கு பயன்படும் தசையாலான, உணர்வு உறுப்பு ___ ஆகும்.
விடை:நாக்கு - கல்லீரலால் சுரக்கப்படும் பித்தநீர் தற்காலிகமாக ____ ல் சேமித்து வைக்கப்படுகிறது.
விடை:பித்தப்பை - உணவுப் பாதையில் மிகவும் நீளமான பகுதி ____ ஆகும்.
விடை:சிறுகுடல் - மனித உடலானது ____ வெப்பநிலையில் இயல்பாக செயல்படுகிறது.
விடை:37°C - பெண்களின் உடலிலுள்ள மிகப்பெரிய செல் ____ ஆகும்.
விடை:கருமுட்டை
III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக
- இரைப்பையில் காணப்படும் நைட்ரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது.
விடை: தவறு
இரைப்பையில் காணப்படும் ஹைட்ரோகுளோரிக் அமிலம் உணவிலுள்ள நுண்ணுயிரிகளைக் கொல்லுகிறது. - செரிமானத்தின் போது, புரதங்கள் அமினோ அமிலங்களாக உடைக்கப்படுகின்றன.
விடை:சரி - கிளாமருலார் வடிநீரில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், ஹார்மோன்கள். உப்புகள். குளுக்கோஸ் மற்றும் தேவையான பொருட்கள் காணப்படுகின்றன.
விடை:சரி
IV. பொருத்துக
விடை:
9th Science Guide விலங்குகளின் உறுப்பு மண்டலங்கள் Additional Important Questions and Answers
பகுதி – II. கூடுதல் வினாக்கள்
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
- அனைத்து உறுப்பு மண்டலங்களின் செயல்களையும் ஒருங்கிணைக்கும் மண்டலம் ______
விடை:நாளமில்லா சுரப்பிமண்டலம் - மனிதனில் உள்ள பின்கடைவாய்ப் பற்களின் எண்ணிக்கை _____
விடை:12 - தொண்டை வழியாக விழுங்கப்படும் உணவு _____ எனப்படும்.
விடை:உணவுக் கவளம் - “இரைப்பை சார் உடற் செயலியலின் தந்தை” என போற்றப்படுபவர் _____
விடை:வில்லியம் பியூமாண்ட் - உணவுக் கால்வாயில் உள்ள மிகவும் நீளமான பகுதி ______ நீளமுடையது.
விடை:5-7 மீட்டர் - கல்லீரல் செல்கள் _____ சுரக்கிறது.
விடை:பித்த நீரை - 1.5மீ நீளமுடைய தடித்த குழாயான உணவுப் பாதையின் பகுதி ______
விடை:பெருங்குடல் - மலவாயிலுள்ள வளையங்கள் போன்ற மூடிய நிலையில் இருக்கும் தசை _______ எனப்படும்.
விடை:மலச்சுருள் தசை - கார்போஹைட்ரேட்டு, கொழுப்பு, புரதம் செரித்தல் முழுமை அடையும் பகுதி ______
விடை:சிறுகுடல் - தோலின் மூலம் வளர்சிதை கழிவுகள் வெளியேற்றுதல் ____ எனப்படும்.
விடை:வியர்த்தல் - நெப்ரான்கள் _____ லிட்டர் ரத்தத்தை வடிகட்டுகின்றன.
விடை:1700-1800 - பெண்களில் விந்துக்களைப் பெறும் பகுதியாகவும், பிறப்புக் கால்வாயாகவும் செயல்படுவது
விடை:யோனிக்குழாய் - கிராஃபியன் பாலிக்கிள் சுரக்கும் ஹார்மோன் _____
விடை:ஈஸ்ட்ரோஜென் - புரத செரித்தல் தொடங்கும் பகுதி _____
விடை:இரைப்பை - உமிழ் நீரில் உள்ள நொதி _____
விடை:டையலின் - ஒரு நாளில் சுரக்கப்படும் உமிழ் நீரின் அளவு யாது?
விடை:1.5லிட்டர் - எந்த உறுப்பு மருந்தும் பொருட்கள் மற்றும் ஆல்கஹாலின் நச்சுத் தன்மைகளை நீக்குகிறது?
விடை:கல்லீரல் - சக்கஸ் என்ட்ரிக்ஸ் சுரப்பில் உள்ள நொதிகள் எந்த ஊடகத்தில் நன்றாக செயல்படுகின்றன?
விடை:காரத்தன்மையில் - சிறுகுடலின் ______ பகுதியில் செரிக்கப்பட்ட உணவு உறிஞ்சப்படுகிறது.
விடை:பின்சிறுகுடல் (அ)இலியம் - உடலினை சீர்ச்சமநிலையில் (ஹோமியோஸ்பேஸிஸ்) வைக்க உதவும் நிகழ்ச்சி _____
விடை:கழிவு நீக்கம் - மிகப்பெரிய, மிகச்சிறிய, உமிழ்நீர்ச் சுரப்பிகள் _____, ______
விடை:நாவடிச் சுரப்பி, மேலண்ண சுரப்பி - குடல் உறிஞ்சிகள் ஒவ்வொன்றும் _____ நீளமுடையது.
விடை:1 மி.மீட்டர் - விந்தணுவிற்கு ஆற்றலை அளிக்கும் ஆதாரமாக _____ இருக்கிறது.
விடை:பிரக்டோஸ் - வெட்டுப்பற்களின் எண்ணிக்கை _____
விடை:8 - உமிழ்நீர்ச்சுரப்பியின் நொதி ______
விடை:டையலின் - சிறு குடலின் நடுப்பகுதி _____ ஆகும்.
விடை:நடுசிறு குடல் (அ) ஜிஜீனம் - சிறுகுடல் நீரைச் சுரக்கும் சுரப்பிகள் அமைந்துள்ள பகுதி _____.
விடை:நடுசிறு குடல் (அ) ஜிஜீனம் - சிறுகுடல் நீரில் உள்ள நொதிகள் _____, _____, ______ மற்றும் ____
விடை:சுக்ரோஸ், மால்டோஸ், லாக்டோஸ், லிப்பேஸ் - குடலுறிஞ்சியில் காணப்படும் அமைப்புகள் _____ மற்றும் _____
விடை:மெல்லிய இரத்தக் குழாய்கள், குடற்பால் குழல்கள் - கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நீர் திவளைகளை வெளியேற்றும் நுரையீரலின் செயல் _____
விடை: மூச்சு வெளிவிடுதல் - ____ சிறுநீரகம் சற்று கீழே காணப்படுகிறது –
விடை:வலது புறமுள்ள - நம்முடைய புறச்சட்டக மண்டலம் செய்யும் பணி _____ மற்றும் _____
விடை:பாதுகாத்தல், கழிவுநீக்கம் - சிறுகுடல் மற்றும் பெருங்குடல் இணையும் இடத்திலுள்ள சிறிய முட்டுப்பை போன்ற அமைப்பு _____
விடை:சீக்கம் - முதலில் தோன்றும் தற்காலிக இணைப் பற்களின் எண்ணிக்கை ___ ஆகும்.
விடை:இருபது - நாக்கு அடியில் ____ என்ற சவ்வு மூலம் இணைக்கப்பட்டுள்ளது
விடை:ஃப்ருனுலம் - தோல் ஓர் முதிர்ச்சியடைந்த மனிதனின் உடல் எடையில் ____ சதவீ-தத்தைக் கொண்டுள்ளது
விடை:15% - மனிதனின் சிறுநீர் _____ தன்மையுடைய திரவமாக இருக்கிறது.
விடை:உயர் உப்படர்வு - முதல் சிறுநீரக மாற்றத்தை செய்தவர்
விடை:ஜோசப் இ. முர்ரே - பெண் இன ஹார்மோன்கள் ____ மற்றும் ____ ஆகும்.
விடை:ஈஸ்ட்ரோஜன், புரோஜெஸ்டிரான் - குழந்தை பிறப்பின்போது பிறப்புக் கால்வாயாக செயல் ஆற்றுபவை _____
விடை:யோனி - இரத்தம் உறிஞ்சும் பொருட்கள் _____, ____, ______
விடை:எளியபொருட்கள், நீர், தாது உப்புகள் - செரிமான மண்டலத்தின் இரண்டு தொகுப்பு உறுப்புகள் ____, _____
விடை:உணவுப்பாதை, செரிமானச் சுரப்பிகள் - புரதச் செரிமானம் _____ ல் ஆரம்பிக்கிறது
விடை:வாய்க்குழியில் - _____ ஒரு செரிமான ஊக்கியாகும்
விடை:ரென்னின் - _____ சிறுகுடலின் அதிக நீளமான பகுதியாகும்
விடை:இலியம் - உடலில் காணப்படும் மிகப்பெரிய செரிமானச் சுரப்பி _____ ஆகும்.
விடை:கல்லீரல் - ______ இரைப்பைக்கும் டியோடினத்திற்கும் இடையே அமைந்துள்ளது
விடை:கணையம் - இரத்தத்தில் அமில – காரச்சமநிலையை ஒழுங்குபடுத்துவது_ ____ ஆகும்.
விடை:சிறு நீரகம் - பித்த நாளமும் கணைய நாளமும் இணைந்து ____ திறக்கின்றது.
விடை:டியோடினத்தில் - _____ செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் ஆகிய இரண்டு செயல்களையும் செய்கிறது
விடை:சிறுகுடல்
II. பொருத்துக.


III. கூற்று மற்றும் காரண வகை
கீழ்காணும் ஒவ்வொரு வினாக்களிலும், ஒரு வழிகாட்டி கூற்றும் அதன் கீழே அதற்கான காரணமும் கொடுக்கப்பட்டுள்ளன. கீழே கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியங்களில் ஒன்றை சரியான பதிலாகக் குறிக்கவும்.
அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்றும் அதற்கான காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை.
இ) கூற்று சரி அதற்கான காரணம் தவறானது.
ஈ) கூற்றும் மற்றும் காரணம் இரண்டும் தவறு.
- கூற்று: பித்த உப்புகள் பால்மமாக்கல் என்ற செயலின் அடிப்படையில் கொழுப்பு செரித்தலுக்கு உதவுகின்றன.
காரணம்: கல்லீரல் வலது மற்றும் இடது என இரண்டு கதுப்புகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
விடை: ஆ) கூற்றும் காரணமும் சரி. ஆனால் இக்காரணமானது கொடுக்கப்பட்ட கூற்றிற்கான சரியான விளக்கமில்லை. - கூற்று: கார்பஸ் லூட்டியம் புரோஜெஸ்டிரானைச் சுரக்கிறது. காரணம்: இது கர்ப்பப்பையில் கருவுற்ற முட்டையைப் பதிய வைத்தல், நஞ்சுக் கொடி உருவாதல் மற்றும் கர்ப்பத்தினைப் பராமரித்தல் போன்ற வேலைகளைச் செய்கிறது.
விடை:அ) கூற்றும் அதற்கான காரணமும் சரி.