1. சரியான விடையைத் தேர்ந்தெடு.
- டாப்ரீனீர் மும்மை விதியோடு தொடர்பு கொண்டிருந்தால் நியூலாந்தோடு தொடர்புடையது எது?
அ) நவீன தனிம அட்டவணை
ஆ) ஹுண்ட்ஸ் விதி
இ) எண்ம விதி
ஈ) பௌலீயின் விலக்கல் கோட்பாடு
விடை:இ) எண்ம விதி - நவீன தனிம அட்டவணை ஒரு தனிமத்தின் இயற்பியல் மற்றும் வேதியியல் பண்புகள் அவற்றின் இன் ஆவர்த்தன செயல்பாடாகும் எனக் கூறுகிறது?
அ) அணு எண்
ஆ) அணு நிறை
இ) ஒத்த தன்மை
ஈ) முரண்பாடு
விடை:அ) அணு எண் - நவீன தனிம அட்டவணையின் தனிமங்கள்_ தொகுதி வரிசைகளாக அடுக்கப்பட்டுள்ளன
அ) 7,18
ஆ) 18,7
இ) 17,8
ஈ) 8, 17
விடை :ஆ) 18,7
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
- டாபரினீர் மும்மை விதியில் நடு தனிமத்தின் அணு எடையானது முதல் மற்றும் மூன்றாம் அணு நிறையின் ________________ ஆகும்.
விடை:சராசரி - அரிய வாயுக்கள் / மந்த வாயுக்கள் தனிம அட்டவணையின் ________________ தொகுதியில் காணப்படும்.
விடை:18வது - தனிமங்களை அட்டவணைப்படுத்துவதில் டாபர்னீர், நியூலாந்து மற்றும் மாண்டெலீவ் இவர்களின் அடிப்படைக் கொள்கை ________________ ஆகும்.
விடை:அணு நிறை - திரவ உலோகத்திற்கு எடுத்துக்காட்டு ________________.
விடை:பாதரசம்
III. பொருத்துக
விடை:
IV. சரியா? தவறா? தவறெனில் திருத்துக
- நியூலாந்தின் தனிம அட்டவணை தனிமத்தின் நிறையையும் நவீன தனிம அட்டவணை தனிமத்தின் எண்ணையும் அடிப்படையாகக் கொண்டது.
விடை:சரி - உலோகங்கள் எலக்ட்ரான்களை ஏற்கும்.
விடை:தவறு உலோகங்கள் எலக்ட்ரான்களை இழக்கும். - உலோகப்போலிகள் உலோகம் மற்றும் அலோகப் பண்புகளைக் கொண்டவை.
விடை:சரி - லாந்தனைடுகள் மற்றும் ஆக்டினைடுகள் அட்டவணையின் அடியில் வைக்கப்பட்டதற்குக் காரணம் அவைகள் ஒன்றோடொன்று ஒத்திருக்கின்றன. ஆனால் தொகுதியில் உள்ள வேறு எந்த தனிமங்களுடனும் ஒத்துப் போவதில்லை .
விடை:சரி - தொகுதி 17 தனிமங்கள் ஹாலஜன்கள் (உப்பீனிகள்) என்று பெயரிடப்பட்டுள்ளன.
விடை:சரி
V. கீழ்கண்ட கூற்றைச் சரி பார்க்க.
- கூற்று: தொகுதியில் உள்ள தனிமங்கள் ஒரே பண்புகளையும், வரிசையில் உள்ள தனிமங்கள் வேறு வேறு பண்புகளையும் கொண்டுள்ளன.
காரணம்: அணு அமைப்பில் உள்ள வேறுபாடுதான் தனிமங்களின் வரிசையில் தனிமங்களின் வேற்றுமைக்குக் காரணம்.
அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.
ஆ) கூற்று தவறானது, ஆனால் காரணம் சரியானது.
விடை:அ) கூற்று சரியானது, காரணம் கூற்றை விளக்குகிறது.
Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
- 4d துணைக்கூட்டிலுள்ள அதிகபட்ச எலக்ட்ரான்கள் ________________
விடை:10 - நியானின் (Ne) எலக்ட்ரான் அமைப்பு
விடை:2, 8 - Ca மற்றும் Mg ஆகியன ________________ உலோகங்கள்
விடை:காரமண் - பிரதிநிதித்துவத் தனிமங்கள் எங்கு உள்ளன?
விடை:S மற்றும் p தொகுதிகளில் - 16 வது தொகுதித் தனிமங்கள்
விடை:சால்கோஜன்கள் - இரண்டாவது மற்றும் மூன்றாவது வரிசைகளிலுள்ள தனிமங்களின் எண்ணிக்கை முறையே
விடை:8 மற்றும் 18 - நான்காவது வரிசையிலுள்ள மந்த வாயுவின் அணு எண் ________________
விடை:36 - இரண்டாவது வரிசையில் ________________ முதல் ________________ வரை தனிமங்களின் அணு ஆரம் குறைகிறது.
விடை:Li முதல் F வரை - மிகவும் குறுகிய வரிசையிலுள்ள தனிமங்களின் எண்ணிக்கை
விடை:2 - நாணய உலோகங்கள் என்பவை ________________
விடை:Cu, Ag, Au - விமானங்களின் உடம்பு பாகங்கள் தயாரிக்கப் பயன்படும் உலோகக்கலவை
விடை:டியூராலுமின் - உலோகங்கள் மற்றும் அலோகங்களின் பண்புகளை ஒருங்கே பெற்றுள்ளதும் புவிப்பரப்பில் அதிகம் காணப்படுவதுமான ஒரு தனிமம் ________________
விடை:சிலிகன் - நிறமுள்ள அயனிகள், மாறுபடும் ஆக்ஸிஜனேற்ற நிலைகள், வினைவேகமாற்றப் பண்பு ஆகியன ________________ தனிமங்களின் பண்புகள்.
விடை:d தொகுதி - H- அயனிகளின் பெயர்
விடை:ஹைட்ரைடு அயனி - _______________ யை விட அதிக அணுநிறை கொண்ட தனிமங்களுக்கு எண்மவிதி ஏற்புடையதல்ல.
விடை:கால்சியம் - தற்பொழுது வரையிலும் அறியப்பட்டுள்ள தனிமங்களின் எண்ணிக்கை
விடை:118 - தொகுதி எண் 3 முதல் 12 வரையிலான தனிமங்கள் ________________
விடை:இடைநிலைத் தனிமங்கள் - நவீன தனிம வரிசை அட்டவணையின் முதல் தொகுதியிலுள்ள அலோகம் ________________
விடை:ஹைட்ரஜன் - 14 வது தொகுதியிலுள்ள C-ம் Si-ம் அலோகங்கள். Ge ஒரு ________________
விடை:உலோகப்போலி - கடின உலோகங்கள் மிகக் குறைந்த நிலைப்புத் தன்மையையும், அதிக யையும் கொண்டுள்ளன.
விடை:கதிரியக்கத் தன்மை - உயரிய வாயுக்கள் மிகவும் நிலைப்புத் தன்மையுடைய எலக்ட்ரான் அமைப்பைப் பெற்றுள்ளதால், ________________ குறைவு
விடை:வினைத்திறன் - மிக அதிக வினைபுரியும் திறன் கொண்ட அலோகம் ________________
விடை:ஃபுளூரின் - தனிமங்களின் ________________ பண்பே, அவற்றின் நேர்மின் தன்மைக்குக் காரணமாகிறது.
விடை:எலக்ட்ரான் இழக்கும் - (2, 8, 8, 3) என்ற எலக்ட்ரான் அமைப்பைக் கொண்ட ஸ்கேண்டியத்தின் தொகுதி எண்
விடை:3 - ஓரணு மூலக்கூறு வாயுக்கள் ________________
விடை:உயரிய வாயுக்கள் - கதிரியக்க தன்மை கொண்ட ஹெலஜன் எது?
விடை:ஆஸ்டடைன் - ஆபரணங்கள் தயாரிக்க தங்கத்துடன் சேர்க்கப்படும் உலோகம் ________________
விடை:காப்பர் - ஒரு அலோகத்தின் புறவேற்றுமை வடிவமான ________________ வெப்பத்தைக் கடத்துவதில்லை
விடை:டைமண்ட் - மருத்துவ உபகரணங்கள் தயாரிப்பில் பயன்படும் உலோகக்கலவை ________________
விடை:துரு ஏறா எஃகு - ஜோஹன் வுல்ஃபாங் டாபர்னீட் என்பவர் ஒரு ________________ வேதியிலாளர்
விடை:ஜெர்மனிய - _______________ என்பது ஒரு தனிமத்தின் அணுக்கள் வேறுபட்ட நிறையைக் கொண்டதாகும்.
விடை:ஐசோடோப்புகள் - தனிம அட்டவணையில் மொத்தம் ________________
விடை:ஏழு - தனிம அட்டவணையில் உள்ள தனிமங்கள் ________________ துணை தொகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன.
விடை:நான்கு - Liன் அணு எண் ________________
விடை:3 (2,1) - தீப்பற்றக்கூடிய வாயு ________________
விடை:ஹைட்ரஜன் - கார உலோகங்கள் ________________
விடை:சோடியம், பொட்டாசியம் - கார மண் உலோகங்கள் ________________
கால்சியம், மெக்னீசியம் - இடைநிலை உலோகங்கள் ________________
விடை:இரும்பு, நிக்கல் - மற்ற உலோகங்கள்
விடை:அலுமினியம், தகரம் - உலோகங்களின் தோற்றம் ________________
விடை:பளபளப்பானது - உலோகம் மற்றும் அலோகப் பண்புகளைக் கொண்டவை ________________
விடை:உலோகப்போலி - ஒரு உலோகம் பாரதரசத்தோடு சேர்க்கப்படும்போது அது ________________ எனப்படும்.
விடை:அமால்கம் - இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட உலோகங்களின் கலவை ________________
விடை:உலோகக்கலவை - எட்டு நீண்ட செங்குத்துக்கோடுகள் ________________ எனப்படும்.
விடை:தொகுதிகள் - ஒரு படுக்கை (அ) கிடைமட்டக் கோடுகள் ________________ எனப்படும்
விடை:வரிசை - ரேடான் ஒரு ________________ வாயு
விடை:கதிரியக்க வாயு - _______________ ஒரு சிறந்த வெப்பக்கடத்தியாகும்.
விடை:உலோகங்கள் - நவீன தனிம வரிசை அட்டவணையின் தந்தை
விடை:மெண்டெலீவ் - உலோகப்பண்புகள் எதுவும் இல்லாதவை ________________ ஆகும்
விடை:அலோகங்கள்
II. பொருத்துக.

.
III. கூற்று மற்றும் காரண வகை.
- கூற்று : Pt, Au மற்றும் Ag ஆகியன உலோகப் பளபளப்பும் பிரகாசமும் கொண்டவை
காரணம் : உலோகங்கள், பிரகாசமான பளபளப்புத்தன்மை கொண்டவை
a) கூற்று சரியானது, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
b) கூற்று தவறானது, ஆனால் காரணமானது சரி.
விடை :(a) கூற்று சரியானது, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது. - கூற்று : டாபர்னீர் தனிமங்களை, மூன்று தனிமங்கள் கொண்ட குழுக்களாக வகைப்படுத்தினர்.
காரணம் : தனிமங்களின் குழுக்கள் மும்மை ‘ எனப்படுகின்றன.
a) கூற்று சரியானது, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
b) கூற்று தவறானது, ஆனால் காரணமானது சரி.
விடை :(a) கூற்று சரியானது, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது. - கூற்று : P தொகுதி பெரிய அளவில் வேறுபட்ட தனிமங்களின் சங்கமமாகும்.
காரணம் : தொகுதியில் உலோகங்கள், அலோகங்கள் மற்றும் உலோகப்போலிகள் ஆகியன உள்ளன.
a) கூற்று சரியானது, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.
b) கூற்று தவறானது, ஆனால் காரணமானது சரி.
விடை :(a) கூற்று சரியானது, காரணம் கூற்றை சரியாக விளக்குகிறது.