I. சரியான விடையைத் தேர்ந்தெடு.
- ஒரு நானோ மீட்டர் என்பது
அ) 10 மீட்டர்
ஆ) 10 மீட்டர்
இ) 10 மீட்டர்
ஈ) 10 மீட்டர்
விடை:ஈ) 10 மீட்டர் - பென்சிலின் எனப்படும் எதிர் நுண்ணுயிரி …………………………………. லிருந்து பெறப்படுகிறது.
அ) தாவரங்கள்
ஆ) நுண்ணுயிரிகள்
இ) விலங்குகள்
ஈ) சூரிய ஒளி
விடை:ஆ) நுண்ணுயிரிகள் - 1% அயோடோபார்ம் …………………………………. ஆக பயன்படுத்தப்படுகிறது
அ) எதிர் நுண்ணுயிரி
ஆ) மலேரியா
இ) புரைத்தடுப்பான்
ஈ) அமில நீக்கி
விடை:இ) புரைத்தடுப்பான் - ஒரு மின் வேதிக்கலத்தில் எதிர் மின்வாயில் …………………………………. நிகழும்.
அ) ஆக்ஸிஜனேற்றம்
ஆ) ஒடுக்கம்
இ) நடுநிலையாக்கல்
ஈ) சங்கிலி இணைப்பு
விடை:ஆ) ஒடுக்கம் - இறந்த விலங்குகளின் வயதைத் தீர்மானிக்க ஐசோடோப்பைப் பயன்படுத்தலாம்.
அ) கார்பன்
ஆ) அயோடின்
இ) பாஸ்பரஸ்
ஈ) ஆக்ஸிஜன்
விடை:அ) கார்பன் - பின்வருவனவற்றுள் எது இயற்கைச் சாயம் இல்லை?
அ) உருளைக்கிழங்கு
ஆ) பீட்ரூட்
இ) கேரட்
ஈ) மஞ்சள்
விடை:அ) உருளைக்கிழங்கு - ………………………………. வகை உணவுகள் குறைபாட்டு நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கின்றன.
அ) கார்போஹைட்ரேட்
ஆ) வைட்டமின்கள்
இ) புரதங்க ள்
ஈ) கொழுப்புகள்
விடை:ஆ) வைட்டமின்கள் - கதிரியக்கவியலுடன் தொடர்புள்ளது எது?
அ) ஆக்ஸிஜனேற்றம்
ஆ) மின்கலங்கள்
இ) ஐசோடோப்புகள்
ஈ) நானோதுகள்கள்
விடை:இ) ஐசோடோப்புகள் - ஒரு கரிமச் சேர்மத்தின் நிறத்திற்குக் காரணமான குழுக்கள் …………………………………. என அழைக்கப்படுகின்றன.
அ) ஐசோடோப்புகள்
ஆ) நிற உயர்த்தி
இ) நிற ஜனனிகள்
ஈ) நிறத் தாங்கி
விடை:ஈ) நிறத் தாங்கி - குளோரினேற்றப்பட்ட ஹைட்ரோகார்பன்கள் …………………………………. ஆக பயன்படுத்தப்படுகின்றன.
அ) உரங்கள்
ஆ) பூச்சிக்கொல்லிகள்
இ) உணவு நிறமிகள்
ஈ) உணவு பதப்படுத்திகள்
விடை:ஆ) பூச்சிக்கொல்லிகள்
II. கோடிட்ட இடங்களை நிரப்புக.
- மின் ஆற்றலை வேதி ஆற்றலாக மாற்றும் வேதிமின்கலம் …………………………………. ஆகும்.
விடை:மின்பகுப்புக்கலம் - வலிமருந்துகள் …………………………………. என்று அழைக்கப்படுகின்றன.
விடை:வலி நிவாரணிகள் - இண்டிகோ ஒரு …………………………………. சாயம் மற்றும்
விடை:தொட்டி - ………………………………., …………………………………. ஆகியவை தாவர வளர்ச்சிக்குத் தேவையான பெரும நுண் ஊட்டத் தனிமங்கள் ஆகும்.
விடை:நைட்ரஜன், பாஸ்பரஸ், பொட்டாசியம் - கைரேகைப் பதிவைக் கண்டறியப் பயன்படும் வேதிப்பொருள் …………………………………. ஆகும்.
விடை:நின்ஹைட்ரின்
III. பொருத்துக

9th Science Guide பயன்பாட்டு வேதியியல் Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
- ஒரு மீட்டரில் பில்லியனில் ஒரு பகுதி என்பதை குறிக்கும் கிரேக்க வார்த்தை ………………………………….
விடை:நானோஸ் - ஒரு வினாடியில் நமது நகம் …………………………………. மீட்டர் வளர்கிறது.
விடை:ஒரு நானோ - நமக்கு சளி மற்றும் காய்ச்சலை உருவாக்கும் வைரஸ் சுமார் …………………………………. மீட்டர் விட்டம் கொண்டது.
விடை:30 சுமார் - நம்முடைய தலையில் இருக்கும் ஒரு தலை முடியின் விட்டம் ………………………………….
விடை:25,000 நானோ மீட்டர் - ஒரு ஹைட்ரஜன் அணுவின் விட்டம் ………………………………….
விடை:o.2 நானோமீட்டர் - நானோ பொருள்கள் …………………………………. அமைப்புப் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளைப் பெற்றிருக்கும்.
விடை:அணுக்கள் மற்றும் பெரிய பொருள்களின் - நானோ ரோபோட்களின் அளவு ………………………………….
விடை:0.1 – 10 மைக்ரோமீட்டர் - டிரக்யூ என்ற பிரெஞ்சு வார்த்தையின் பொருள் ………………………………….
விடை:காய்ந்த மூலிகை - மயக்க மருந்துகளுள் மிகவும் பாதுகாப்பானது ………………………………….
விடை:நைட்ரஸ் ஆக்சைடு - டை எத்தில் ஈதர் மயக்க மருந்தாக பயன்படும் போது அதில் …………………………………. நிலைப்படுத்தியாக பயன்படுகிறது.
விடை:0.002% புரோப்பைல் ஹாலைடு - வலிநிவாரணி மற்றும் காய்ச்சல் நிவாரணியாக பயன்படுவது ………………………………….
- வெளிக்காயங்களை சுத்தம் செய்வதற்கு பயன்படும் புரைத் தடுப்பான் ………………………………….
விடை:ஹைட்ரஜன் பெராக்சைடு - 1% ஃபீனால்கரைசல் …………………………………. ஆக பயன்படுகிறது.
விடை:கிருமி நாசினி - சின்கோனா மரப்பட்டையிலிருந்து இயற்கையாக பெறப்படும் மலேரியா நிவாரணி ………………………………….
விடை:குயினைன் - அலெக்சாண்டர் ஃபிளெமிங் கண்டறிந்த முதல் நுண்ணுயிர் எதிரி ………………………………….
விடை:பென்சிலின் - பென்சிலின் என்ற நுண்ணுயிர் …………………………………. எதிரி பூஞ்சையிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது.
விடை:பென்சிலியம் நொடேட்டம் - அதிசய மருந்து என்று பெயரிடப்பட்டது ………………………………….
விடை:பென்சிலின் - தேன், பூண்டு, இஞ்சி, லவங்கம், வேம்பு மற்றும் மஞ்சள் ஆகியன …………………………………. தன்மையைப் பெற்றுள்ளன.
விடை:நுண்ணுயிர் எதிர்ப்புத் - எரிபொருள் மின்கலன்கள் …………………………………. ஆற்றலை …………………………………. ஆற்றலாக மாற்ற பயன்படுகின்றன.
விடை:வேதி, மின் - ஒரு மின் வேதிக்கலனில் …………………………………. மின் முனையில் ஆக்சிஜனேற்றம் நிகழ்கிறது.
விடை:நேர் - ஆக்சிஜனேற்றம் என்பது …………………………………. நிகழ்வு.
விடை:எலக்ட்ரானை இழக்கும் - ஒரு மின்வேதிக் கலனில் …………………………………. மின் முனையில் ஒடுக்கம் நிகழ்கிறது.
விடை:எதிர் - ஒடுக்கம் என்பது – நிகழ்வு.
விடை:எலக்ட்ரானை ஏற்கும் - ஒரு கால்வனிக் மின்கலத்தில் …………………………………. மூலம் இரண்டு அணு மின்கலன்களும் இணைக்கப்பட்டுள்ளன.
விடை:உப்புப்பாலம் - டேனியல் மின்கலத்தில் …………………………………. உப்பு பாலமாக செயல்படுகிறது.
விடை:தெவிட்டிய பொட்டாசியம் குளோரைடு கரைசல் - டேனியல் மின்கலம் ஒருவகை …………………………………. மின்கலம் ஆகும்.
விடை:கால்வனிக் - துருப்பிடித்தலிலிருந்து இரும்பு போன்ற உலோகங்களை பாதுகாக்க …………………………………. கொண்டு மின் முலாம் பூசப்படுகிறது.
விடை:தகரம், நிக்கல் அல்லது குரோமியம் - நிறம் தாங்கி மற்றும் நிறம் பெருக்கி கொள்கையை வழங்கியவர் ………………………………….
விடை:ஓட்டோவிட் - தொட்டிச் சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:இண்டிகோ - மறைமுக சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:அலிசரின் - அமிலச் சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:பிக்ரிக் அமிலம் - நேரடிச் சாயத்திற்கு எடுத்துக்காட்டு ………………………………….
விடை:காங்கோ சிவப்பு - சாக்கரீன் மற்றும் சைக்லமேட் ஆகியன …………………………………. ஆக பயன்படுகின்றன.
விடை:செயற்கை இனிப்பூட்டிகள் - ஊறுகாயில் பயன்படும் உணவு பதப்படுத்தி ………………………………….
விடை:வினிகர் அல்லது சோடியம் குளோரைடு - …………………………………. நம்மை இதய நோய்களிலிருந்து பாதுகாக்கின்றன.
விடை:எதிர் ஆக்சிஜனேற்றிகள் - வைட்டமின் C, வைட்டமின் E ஆகியன …………………………………. ஆக செயல்படுகின்றன.
விடை:எதிர் ஆக்சிஜனேற்றிகள் - எதிர் ஆக்சிஜனேற்றிகள் …………………………………. தடுத்து உணவின் தன்மையைக் கெடாமல் பாதுகாக்கின்றன.
விடை:ஆக்சிஜனேற்றத்தைத் - மறைக்கப்பட்ட கைரேகைகளை சிலநேரங்களில் …………………………………. காண முடிகிறது.
விடை:நின் ஹைட்ரின் - எந்த இரு மனிதர்களின் கைரேகை, கருவிழி அச்சு மற்றும் நாக்கு அச்சு ஆகியன ………………………………….
விடை:தனித்துவமானவை - ………………………………., …………………………………. ஆகியவை விளையாட்டுப் பொருட்கள், மிதிவண்டி ஊர்திப் போன்றவைகளை உருவாக்கப் பயன்படுகின்றன.
விடை:நானோ மேற்பூச்சு, நானோ கலப்பு பருப்பொருள் - சூரிய கதிர்வீச்சின் தாக்கத்தை குறைக்கும் களிம்புகளில் பயன்படும் நானோ சூரியக்கதிர் தடுப்புப் பொருள் …………………………………. மற்றும் ………………………………….
விடை:சிங்க் ஆக்ஸைடு டைட்டானியம் ஆக்ஸைடு - நானோ துகள்கள் …………………………………. உடன் தொடர்பு கொள்ளும் போது உறுதியற்ற தன்மையை அடைகின்றன.
விடை:ஆக்சிஜன் - ஆக்சிஜனுடன் வினைபுரியும் போது நச்சுத் தன்மையுள்ள …………………………………. உருவாவதால் தற்போது குளோரோஃபார்ம் பயன்படுத்தப்படுவதில்லை
விடை:கார்போனைல் குளோரைடு - உடலின் அதிக வெப்பநிலையை சாதாரண வெப்பநிலைக்கு கொண்டு வந்து காய்ச்சலை குறைக்க பயன்படும் மருந்துகள் …………………………………. எனப்படும்.
விடை:காய்ச்சல் நிவாரணிகள் - வயிற்றினுள் போதுமான அளவுக்கு மேல் அமிலம் சுரப்பதை சரி செய்யும் மருந்துப் பொருள்கள் …………………………………. எனப்படும்.
விடை:அமில நீக்கிகள் - டேனியல் மின்கலத்தில் – நேர்மின் முனையாகவும், …………………………………. எதிர்மின் முனையாகவும் செயல்படுகின்றன.
விடை:துத்தநாக உலோகம், தாமிர உலோகம் - நிலையற்ற ஐசோடோப்புகள் …………………………………. வடிவில் தங்கள் ஆற்றலை இழப்பதன் மூலம் சிதைவுகளுக்கு உட்படுகின்றன.
விடை:கதிரியக்க - நம் அன்றாட உணவில் பயன்படும் புரைத்தடுப்பான் பண்புடைய இயற்கை நிறமி.
விடை:மஞ்சள் - ஆல்கஹால் சோதனையில், ஆல்கஹால் ஆக்சிஜனேற்றம் அடைந்து டைகுரோமேட்டை …………………………………. ஆக ஒடுக்குகிறது.
விடை:குரோமிக் அயனி - ஆல்கஹால் சோதனையில் ஏற்படும் நிறமாற்றம் ………………………………….
விடை:ஆரஞ்சு நிறத்திலிருந்து பச்சை |நிறம்
II. பொருத்துக.

III. கூற்று மற்றும் காரண வகை
கூற்று (A) மற்றும் காரணங்களை (R) படித்து பின்வரும் சரியான விடையைத் தேர்ந்தெடுக்க.
அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்
ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி.
- கூற்று (A) : நானோ பரிமாணத்தில் இருக்கும் பொருள் ஒன்றின் பண்பானது, அது அணு அல்லது பெரிய பொருளாக இருக்கும் போது உள்ள பண்பிலிருந்து மாறுபட்டிருக்கும்.
காரணம் (R) : நானோ பொருள்கள், அணுக்கள் மற்றும் பெரிய பொருள்களின் அமைப்புப் பண்புகளுக்கு இடைப்பட்ட பண்புகளைப் பெற்றிருக்கும்.
விடை :அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம் - கூற்று (A) : அனைத்து வேதிப்பொருட்களையும் நாம் மருந்துகளாக பயன்படுத்தலாம்.
காரணம் (R) : மருந்துப் பொருள்கள் நச்சுத்தன்மை உள்ளதாக இருக்கக்கூடாது.
விடை :ஆ) கூற்று (A) தவறு, ஆனால் காரணம் (R) சரி. - கூற்று (A) : மறைக்கப்பட்ட கைரேகைகளை சில நேரங்களில் நின்ஹைட்ரின் பயன்பாட்டினால் காணமுடிகிறது.
காரணம் (R) : நின் ஹைட்ரின் வியர்வையில் உள்ள அமினோ அமிலங்களுடன் வினையாற்றுவதன் மூலம் ஊதா நிறமாக மாறும்.
விடை :அ) கூற்று (A) சரி மற்றும் காரணம் (R) சரியான விளக்கம்