I. சரியான விடையைத் தேர்ந்தெடு
- நீரில் முழ்கியிருக்கும் காற்றுக்குமிழி மேலே எழும்பும் போது, அதன் அளவு
(அ) குறையும்
(ஆ) அதிகரிக்கும்
(இ) அதே அளவில் இருக்கும்
(ஈ) குறையும் அல்லது அதிகரிக்கும்.
விடை : (ஆ) அதிகரிக்கும் - வளிமண்டலத்தில் மேகங்கள் மிதப்பதற்கு அவற்றின் குறைந்த ……………………………….. காரணமாகும்.
(அ) அடர்த்தி
(ஆ) அழுத்தம்
(இ) திசைவேகம்
(ஈ) நிறை
விடை : (அ) அடர்த்தி - அழுத்த சமையற்கலனில் (Pressure cooker) உணவு விரைவாக சமைக்கப்படுவதற்குக் காரணம், அதனுடைய
(அ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையைக் குறைக்கிறது.
(ஆ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
(இ) குறைக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது.
(ஈ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் உருகு நிலையைக் குறைக்கிறது.
விடை : (ஆ) அதிகரிக்கப்பட்ட அழுத்தம் கொதி நிலையை உயர்த்துகிறது. - நீருள்ள வாளியில், காற்றுப் புகாத அடைப்பானால் மூடப்பட்ட காலி பிளாஸ்டிக் பாட்டில் ஒன்று கீழ்நோக்கி அழுத்தப்படுகிறது. பாட்டில் கீழ்நோக்கி தள்ளப்படும் போது, அதன் அடிப்பகுதியில் செயல்படும் விசையானது அதிகரிக்கிறது. இதற்கான காரணம் என்ன?

(அ) அதிக பருமனுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.
(ஆ) அதிக எடையுள்ள நீர் வெளியேற்றப்படுகிறது.
(இ) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கின்றது.
(ஈ) மேலே கூறிய யாவும்
விடை: (இ) ஆழம் அதிகரிக்கும் போது அழுத்தம் அதிகரிக்கிறது.
II. கோடிட்ட இடங்களை நிரப்பு.
- பொருளானது திரவத்தில் மூழ்கியிருக்கும் போது உணரப்படும் எடையானது அதன் உண்மையான எடையை விட ……………………………….. ஆகத் தோன்றும்.
விடை: குறைவாகத் - வளிமண்டல அழுத்தத்தை அளவிடப் பயன்படும் கருவி ……………………………….. ஆகும்.
விடை: காற்றழுத்தமானி - திரவத்தில் மூழ்கியுள்ள பொருளின் மீது செயல்படும் மிதப்பு விசையின் எண் மதிப்பு திரவத்தின்……………………………….. ஐப் பொறுத்தது.
விடை: அடர்த்தியை - பழரசம் அருந்தப் பயன்படும் உறிஞ்சு குழல் ……………………………….. மூலம் வேலை செய்கிறது.
விடை: அழுத்தம்
III . சரியா? தவறா? தவறெனில் திருத்துக
- இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட நீரின் எடை மிதப்பு விசையைத் தீர்மானிக்கிறது.
விடை: சரி - ஒருபொருளின் வடிவம் அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது. ஒரு பொருளின் அடர்த்தி அப்பொருள் மிதக்குமா இல்லையா என்பதைத் தீர்மானிக்கிறது.
விடை: தவறு - மிக உயரமான கட்டடங்களின் அடிப்பாகம் அகலமாக இருப்பதால், கட்டடம் அதிக அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது. மிக உயரமான கட்டடங்களின் அடிப்பாகம் அகலமாக இருப்பதால், கட்டடம் குறைந்த அழுத்தத்தை புவியின் மீது செலுத்துகிறது.
விடை: தவறு - ஆர்க்கிமிடிஸ் தத்துவம் வாயுக்களுக்கும் பொருந்தும்.
விடை: சரி - நீரியல் அழுத்தி எண்ணெய் வித்துக்களிலிருந்து எண்ணெய் எடுக்க பயன்படுகிறது.
விடை: சரி
IV. பொருத்துக

VII. கணக்கீடுகள்
- 200 கிராம் எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரின் மேல் மிதக்கிறது. மரக்கட்டையின் பருமன் 300 செமீ எனில் நீரினால் ஏற்படும் உந்துவிசையைக் கண்டுபிடி.
விடை: 1கி.கி = 9.8N
மரக்கட்டையின் எடை = 200
= 0.2 கி.கி
= 0.2 x 9.8
= 1.96N
நீரினால் ஏற்படும் உந்துவிசை = 1.96N - பாதரசத்தின் அடர்த்தி 13600 கிகி மீ’ எனில் ஒப்படர்த்தியைக் கணக்கிடுக.
விடை:
நீரின் அடர்த்தி , pw = 103 kg/m3
பாதரசத்தின் அடர்த்தி, pm = 13600 kg/m3
பாதரசத்தின் ஒப்படர்த்தி, RDm = ? - நீரின் அடர்த்தி 1 கி செமீ எனில் அடர்த்தியை SI அலகில் கூறு.
விடை: - 100கி எடை கொண்ட மரக்கட்டை ஒன்று நீரில் மிதக்கிறது எனில் அதன் தோற்ற எடையைக் கண்டுபிடி
விடை: - 100கி எடை கொண்ட மரக்கட்டையானது நீரின் மேல் மிதக்கும் போது, அவை ஒரு மேல்நோக்கிய உந்து விசையினை உணருகிறது. இந்த உந்துவிசையானது நீரில் மூழ்கியுள்ள மரக்கட்டையினால் வெளியேற்றப்பட்ட நீரின் காரணமாக ஏற்படுகிறது.
மிதக்கும் பொருளின் உந்து விசையானது, அப்பொருளின் எடைக்கு சமமாகும்.
எனவே பொருளின் தோற்ற எடையின் மதிப்பு “0” ஆகும்.
Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
- ஒரு பாஸ்கல் = ……………………………….. ஆகும்
விடை: ஒரு நியூட்டன் / சதுர மீட்டர் - ஒரு பாய்மத்தினால் செலுத்தப்படும் அழுத்தமானது, ஒரு பொருளின் மீது ……………………………….. செயல்படுகிறது.
விடை: அனைத்துத்திசைகளிலும் - திரவத்தின் ஆழம் அதிகரிக்கும் போது ……………………………….. அதிகரிக்கும்.
விடை: அழுத்தமும் - 1atm = ……………………………….. பார் ஆகும்.
விடை: 1.013 - நெகிழும் தன்மைக் கொண்ட தோலினால் மூடப்பட்ட அமைப்பைக் கொண்ட காற்றழுத்தமானி. ………………………………..
விடை: ஃ போர்டின் காற்றழுத்தமானி - திரவங்களைப் பயன்படுத்தாமல் வளிமண்டல அழுத்தத்தைக் கணக்கிடும் காற்றழுத்தமானி …………………………………
விடை: அனிராய்டு பாரமானி - குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் காற்றழுத்த மாற்றத்தைக் கணக்கிடும் காற்றழுத்தமானி ………………………………..
விடை: பாரோகிராப் - ……………………………….. உபகரணத்தைக் கொண்டு ஒப்படர்த்தியை அளக்க முடியும்.
விடை: பிக்நோமீட்டர் - ஒப்பிடப்படும் பொருள் நீர் எனில் ஒப்படர்த்திக்குப் பதிலாக ……………………………….. என பயன்படுத்தலாம்.
விடை: தன்னடர்த்தி - பால்மானிக் குழாயின் மேல் பகுதியில் ……………………………….. முதல் ……………………………….. வரை அளவீடுகள் குறிக்கப்பட்டு இருக்கும்.
விடை: 15 முதல், 45 வரை - ……………………………….. வெப்பநிலையில் தான் பால்மானி மூலம் சரியான அளவீடுகளை அளக்க முடியும்.
விடை: 60°C - ஒரு பால்மானி பாலிலுள்ள அடர்த்தியான ……………………………….. அளவை அளவிடக்கூடியது.
விடை: வெண்ணெயின் - பால்மானி அளவிடும் சரியான பாலின் அளவீடு ……………………………….. ஆகும்.
விடை: 32 - மிதப்பு விசை செயல்படும் புள்ளியே ……………………………….. எனப்படுகிறது.
விடை: மிதப்பு விசை மையம் - 76 செமீ உயரம் கொண்ட பாதரசத் தம்பம் ஏற்படுத்தும் அழுத்தம் ……………………………….. ஆகும்.
விடை: 1 atm - ……………………………….. திரவத்தின் ஒப்படர்த்தியைக் கணக்கிட உதவுகிறது.
விடை: நீரியல்மானி - நீரியல்மானி ……………………………….. தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது.
விடை: ஆர்க்கிமிடிஸ் - 1 நியூட்டன் மீ2 = ……………………………….. ஆகும்
விடை: 10டைன் செமீ-2 - மலைகளின் மேல் செல்லும்போது வளிமண்டத்தின் அடர்த்தியினால் ……………………………….. குறைகிறது.
விடை: அழுத்தம் - 1Psi = ……………………………….. பாஸ்கல்
விடை: 6895 - அடர்த்தி = ………………………………..
விடை: நிறை / பருமன் - பிக்நோமீட்டர் என்பதற்கு ……………………………….. என்ற மற்றாரு பெயரும் உண்டு.
விடை: அடர்த்திக்குடுவை - மிதப்பு விசை நடைபெறும் நிகழ்வை ……………………………….. என்றும் அழைக்கலாம்
விடை: மிதப்புத் தன்மை - ……………………………….. என்பது நிலத்தடி நீரை பம்பின் உதவியின்றி மேலே வெளியேற்றும் கிணறு ஆகும்.
விடை: ஆர்ட்டீசீயன் நீர்த்தேக்கம். - அழுத்தமானது, அது செயல்படும் பரப்புக்கு ……………………………….. தொடர்புடையது.
விடை: எதிர்விகித - CGS அலகு முறையில் விசையை ……………………………….. எனும் அளவிலும் பரப்பளவை அளக்கின்றோம், சதுர ……………………………….. சென்டிமீட்டரிலும்
விடை: டைன், - பாய்ம அழுத்தம் ஆகும்
விடை: - திரவங்களின் அழுத்தத்தினால், ஒரு திரவத்தில் மூழ்கியிருக்கும் பொருளின் மீதும், கொள்கலனின் சுவற்றின் மீதும் செயல்படும் விசையானது அவற்றின் மேற்பரப்பிற்குச் ……………………………….. செயல்படும்.
விடை: செங்குத்தாகவே - காற்று நிரப்பப்பட்ட பலூன் ஒன்றினை நீரினுள் அழுத்தும்போது, அது உடனடியாக மேலெழும்பி, நீரின் மேல் மிதக்கும். இந்நிகழ்வு நீரில் ……………………………….. செயல்படுவதைக் குறிக்கிறது,
விடை: மேல்நோக்கிய அழுத்தம் - இரத்த அழுத்தம் மற்றும் வாகனங்களின் டயர் ட்யூப்களில் உள்ள அழுத்தம் ஆகியவை வளிமண்டல அழுத்தத்தைவிட ……………………………….. உள்ளன,
விடை: அதிகமாக - பெரும்பாலான மிதக்கும் பொருள்கள் ……………………………….. பருமனையும், அடர்த்தியையும் கொண்டிருக்கின்றன.
விடை: அதிக, குறைந்த - பெட்ரோலியப் பொருள்கள் நீரில் மிதப்பதற்கு அவற்றின் ……………………………….. குறைவாக உள்ளதே காரணமாகும்,
விடை: தன்னடர்த்தி - திரவத்தின் ஒப்படர்த்தி ………………………………..
விடை: - விலங்குகள் அவற்றின் கூர்மையான பற்கள் மூலம் ஒரு சதுர அங்குலத்தில் ……………………………….. பௌண்ட்டுக்கும் அதிகமான அழுத்தத்தை ஏற்படுத்த முடியும்
விடை: 750 - கோடாரி மற்றும் கத்தியின் வெட்டும் பகுதி கூர்மையாக ………………………………..
விடை: பரப்பளவு குறையும்போது அழுத்தம் அதிகரிக்கிறது - வளிமண்டல அழுத்தத்தைவிட அதிகமான அழுத்தத்தை கணக்கிடும்போது, தனிச்சுழி அழுத்தம் ………………………………..
விடை: வளிமண்டல அழுத்தம் + அளவிடும் அழுத்தம் - வளிமண்டல அழுத்தத்தைவிட குறைவான அழுத்தத்தைக் கணக்கிடும்போது, தனிச்சுழி அழுத்தம் ………………………………..
விடை: வளிமண்டல அழுத்தம் ……………………………….. அளவி அழுத்தம் - பால்மானியிலுள்ளே ……………………………….. ம் உள்ளது. இவை அடிப்பகுதியில் உள்ள குமிழ் முதல், அளவீடுகள் குறிக்கப்பட்ட மேற்பகுதி வரை அமைந்திருக்கும்.
விடை: வெப்பநிலை மானி - உருளையான குமிழினுள் நிரப்பப்பட்ட ……………………………….. ஆனது பால்மானியை பாலின் உள்ளே சரியான அளவு மூழ்கவும், செங்குத்தான நிலையில் மிதக்கவும் உதவுகிறது.
விடை: பாதரசம் - கார்ட்டீசியன் மூழ்கி சோதனையானது ……………………………….. தன்மையின் தத்துவம் செயல்படும் விதத்தை விளக்குகிறது.
விடை: மிதப்புத் - ……………………………….. விதியின் படி பிஸ்டனில் கொடுக்கப்பட்ட விசையானது குடுவையிலுள்ள திரவத்தின் அனைத்துத் திசைகளிலும் சீராக கடத்தப்படுகிறது.
விடை: பாஸ்கல் - ……………………………….. குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏற்படும் காற்றழுத்த மாற்றத்தை கணக்கிடுகிறது.
விடை: பாரோ கிராப் - புவியின் மேற்பரப்பில் செயல்படும் சராசரி வளிமண்டல அழுத்தத்தின் மாற்றத்தை கணக்கிடுகிறது மதிப்பு ………………………………..
விடை: 984 hpa - ……………………………….. வெப்ப நிலையில் தான் பால்மானி மூலம் சரியான அளவீடுகளை அளக்க முடியும்.
விடை: 60°F - நன்னீரைவிட உப்புநீர் அதிகமான ……………………………….. ஏற்படுத்தும்.
விடை: மிதப்பு விசையை - மீன்கள் ……………………………….. நிரப்பப்பட்ட நீந்தும் பையைக் கொண்டுள்ளன.
விடை: காற்றினால் - ……………………………….. என்பது இடப்பெயர்ச்சி செய்யப்பட்ட பாய்மத்தின் எடை
விடை: மேல் நோக்கு விசை - ……………………………….. நீர்தேக்கம் என்பது நிலத்தடி நீரை பம்பின் உதவியின்றி மேலே வெளியேற்றும் கிணறு ஆகும்.
விடை: ஆர்ட்டீசியன் - எரிபொருள் நிரப்பும் இடங்களில் வாகனங்களின் டயர் அழுத்தம் ……………………………….. என்னும் அலகுகளில் குறிப்பிடப்படுகிறது.
விடை: ρsi - எவரஸ்ட் மலைச் சிகரத்தின் வளிமண்டல அழுத்தம் ………………………………..
விடை: 33.7 K.Pa
II. பொருத்துக


III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
- அளவி அழுத்தம் என்பது முழுமையான வெற்றிடத்தை பூஜ்ஜியம் குறிப்பாகக் கொண்டு கணக்கிடப் படுவதாகும். அளவி அழுத்தம் என்பது வளிமண்டல அழுத்தத்தை பூஜ்ஜியம் குறிப்பாகக் கொண்டு கணக்கிடப் படுவதாகும்,
விடை: தவறு - உந்து விசையின் விளைவாகத் தோன்றும் அழுத்தமானது, அது செயல்படும் பொருளைச் சார்ந்தது. உந்து விசையின் விளைவாகத் தோன்றும் அழுத்தமானது, அது செயல்படும் பரப்பளவைச் சார்ந்தது.
விடை: தவறு - காற்றழுத்தமானியை வானிலை மையத்தில் பயன்படுத்தலாம்.
விடை: சரி - திரவங்கள் மற்றும் வாயுக்கள் பொதுவாக பாய்மங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
விடை:சரி - திரவத்தின் அழுத்தமானது கொள்கலனின் வடிவம் மற்றும் அளவைப் பொறுத்ததல்ல
விடை: சரி
IV. கூற்று மற்றும் காரண வகை.
அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
ஆ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம் இல்லை.
இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு.
ஈ) கூற்று தவறு. ஆனால் காரணம் சரி.
- கூற்று : சிலர் ஆணிப் படுக்கையில் படுத்தாலும், அவர்கள் உடலில் எவ்விதபாதிப்பும் ஏற்படாமல் இருக்கிறது.
காரணம் : அழுத்தமானது அதிக பரப்பளவில் செயல்படுகிறது.
விடை : அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும். - கூற்று : வளிமண்டலத்தின் அடர்த்தியானது, கடல் மட்டத்திலிருந்து உயரே செல்லும்போது குறைகிறது.
காரணம் : உயரமான மலைகளின் மேலே செல்லும்போது அழுத்தம் அதிகரிக்கிறது.
விடை : இ) கூற்று சரி. ஆனால் காரணம் தவறு. - கூற்று : புவியின் மேற்பரப்பில் செயல்படும் சராசரி வளிமண்டல அழுத்தத்தின் மதிப்பானது, கடல் மட்ட அளவில் சற்று குறைவாகவே உள்ளது.
- கூற்று : பொருளானது அதன் எடைக்குச் சமமான எடை கொண்ட திரவத்தை இடப்பெயர்ச்சி செய்வதன் மூலம் மிதக்கிறது.
காரணம் : இந்த நிகழ்வில் பொருளானது எந்தவொரு கீழ்நோக்கிய நிகரவிசையையும் பெற்றிருக்கவில்லை.
விடை :அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும். - கூற்று : நீரியல் தூக்கியானது பாஸ்கல் விதியின் தத்துவத்தில் செயல்படுகிறது.
காரணம் : அழுத்தம் என்பது ஓரலகு பரப்பில் செயல்படும் உந்து விசையாகும்.
விடை : அ) கூற்று மற்றும் காரணம் இரண்டும் சரி. மேலும், காரணம் கூற்றுக்கான சரியான விளக்கமாகும்.
V. தொடர்பின் அடிப்படையில் நிரப்புக.
- அதிகப் பரப்பு : குறைந்த அழுத்தம்
குறைந்த பரப்பு : ____________________
விடை : அதிக அழுத்தம் - கடல் மட்டத்திற்கு மேலே: அழுத்தம் குறைவு
கடல் மட்டத்திற்கு மேலே : ____________________
விடை : அழுத்தம் அதிகரிப்பு - நீராவி விட அடர்த்தி குறைவு: நீரில் மிதக்கும்
நீராவி விட அடர்த்தி அதிகம் : ____________________
விடை : நீரில் மூழ்கும் - பாலின் அடர்த்தி : பால்மானி
சர்க்கரையின் அடர்த்தி : ____________________
விடை : சர்க்கரைமானி