I. சரியான விடையைத் தேர்ந்தெடு
- ஒளி ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும் போது எந்த படுகோணத்தில் ஒளிவிலகல் அடையாது?
அ) O
ஆ) 45°
இ) 90°
விடை : இ) 90° - டார்ச் விளக்கில் எதிரொளிப்பானாகப் பயன்படுவது
அ) குழியாடி
ஆ) குவியாடி
இ) சமதள ஆடி
விடை: அ) குழியாடி - பெரிதான, மாய பிம்பங்களை உருவாக்குவது.
அ) குழியாடி
ஆ) குவியாடி
இ) சமதள ஆடி
விடை: அ) குழியாடி - எதிரொளிக்கும் பகுதி வெளிப்புறமாக வளைந்திருப்பின், அது
அ) குழியாடி
ஆ) குவியாடி
இ) சமதள ஆடி
விடை: ஆ) குவியாடி - முப்பட்டகம் ஒன்றின் வழியே ஒளிக்கற்றை பாயும் போது அது,
அ) எதிரொளிக்கப்படுகிறது
ஆ) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது.
இ) விலகல் மட்டும் அடைகிறது
விடை: ஆ) விலகலடைகிறது மற்றும் நிறப்பிரிகை அடைகிறது - ஒளியின் திசைவேகம் ல் பெருமமாக உள்ளது
அ) வெற்றிடத்தில்
ஆ) கண்ணாடியில்
இ) வைரத்தில்
விடை: அ) வெற்றிடத்தில்
II. கோடிட்ட இடத்தை நிரப்புக.
- அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்திற்கு ஒளிக்கதிர் செல்லும்போது அது — செல்கிறது.
விடை: குத்துக்கோட்டை - நோக்கி விலகிச் தெரு விளக்குகளில் (street light) பயன்படும் ஆடி
விடை: குழியாடி - முப்பட்டகம் ஒன்றில் ஏற்படும் விலகு கோணம் – கோணத்தைப் பொறுத்தது.
விடை: படு - 5 செ.மீ. குவியத் தொலைவு கொண்ட குழியாடியின் வளைவு ஆரம் =
விடை: 10 செ.மீ - சூரிய அடுப்புகளில் சூரிய ஒளியைக் குவித்து வெப்பம் உண்டாக்கப் பயன்படும் பெரிய ஆடிகள்.
விடை: குழி
III. சரியா? தவறா? தவறெனில் திருத்துக
- ஒளிவிலகல் கோணம் ஒளிவிலகல் எண்ணைப் பொருத்தது.
விடை: தவறு, ஒளி விலகல் கோணம் ஒளி விலகல் திசைவேகத்தைப் பொருத்தது - ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது, விலகல் அடைவதில்லை .
விடை: தவறு. ஓர் ஒளிக்கதிர் ஒரு ஊடகத்திலிருந்து மற்றொரு ஊடகத்திற்குச் செல்லும்போது விலகல் அடையும். - குவியாடி எப்போதும் சிறிதாக்கப்பட்ட, நேரான, மாய பிம்பத்தை உருவாக்கும்.
விடை: சரி - குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும் போது நேரான மாய பிம்பம் உருவாகும்.
விடை: தவறு – குழியாடி ஒன்றின் வளைவு மையத்தில் பொருள் வைக்கப்படும்போது தலைகீழான மெய்பிம்பம் உருவாகும். - வைரங்கள் மின்னுவதற்குக் காரணம் ஒளியின் முழு அக எதிரொளிப்பே.
விடை: சரி
IV. பொருத்துக

V. கூற்று மற்றும் காரண வகை வினாக்கள். சரியானதைத் தேர்ந்தெடுக்கவும்.
- கூற்று : மலைப்பாதைகளில் உள்ள கொண்டை ஊசி வளைவில் போக்குவரத்து நெரிசலைக் கண்காணிக்க குவி ஆடி மற்றும் குழி ஆடியை விட சமதள ஆடியே பயன்படுத்தப்படுகிறது.
காரணம் : ஒரு குவி ஆடியானது சமதள ஆடி அல்லது குழி ஆடியை விட மிக அதிகமான பார்வைப்புலம் உடையது.
அ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
இ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை: (இ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி - கூற்று: படுகதிர் கோளக ஆடியின் வளைவு மையத்தில் பட்டு எதிரொளித்த பின் மீண்டும் அதே பாதையில் திரும்புகிறது.
காரணம் : படுகோணம் i = எதிரொளிப்புக் கோணம் (r) = 0°
அ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
இ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி
விடை: (அ) கூற்றும் காரணமும் சரி; மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
IX. கணக்குகள்
- குழியாடியின் முன் 7 செ.மீ தொலைவில் பொருள் வைக்கப்படும்போது அதன் ஒன்றின் மும்மடங்கு உருப்பெருக்கப்பட்ட பிம்பம் கிடைக்கிறது எனில், பிம்பம் எவ்விடத்தில் கிடைக்கும்?
விடை :
21 செ.மீ. தொலைவில் பொருளின் தொலைவு u = 7 செ.மீ
உருப்பெருக்கம் m=−Vu
தொலைவில் பிம்பத்தின் தொலைவு (v) = ?
– 3 = −Vu
3u = v
v = 3u = 3 x 7 = 21. - காற்றிலிருந்து 1.5 ஒளிவிலகல் எண் கொண்ட கண்ணாடிப் பாளத்திற்கு ஒளி செல்கிறது. கண்ணாடியில் ஒளியின் வேகம் என்ன? (வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3 x 108 மீ/வி (விடை : 2 x 108 மீ/வி)
விடை : வெற்றிடத்தில் ஒளியின் வேகம் c = 3 x 108 மீ/வி
ஒளிவிலகல் எண் μ = 1.5
கண்ணாடியில் ஒளியின் திசை வேகம் v = ?
u=cv=1.5=3×108v=3×108v
கண்ணாடியில் ஒளியின் திசைவேகம் v = 2 x 108 மீ/வி - நீரில் ஒளியின் வேகம் 2.25X100 மீ/வி, வெற்றிடத்தில் ஒளியின் வேகம் 3×108 மீ/வி எனில், நீரின் ஒளிவிலகல் எண்ணைக் கணக்கிடுக. (விடை : 1.33)
விடை : நீரில் ஒளியின் வேகம் v = 2.25 x 108
வெற்றிடத்தில் ஒளியின் வேகம் c = 3 108
நீரின் ஒளிவிலகல் எண் u= ?
u=cv=3×1082.25×108=32.25
μ = 1.33(அலகு இல்லை) - வைரத்தின் ஒளிவிலகல் எண்ணின் மதிப்பு 2.41 எனில், அந்த வைரத்தின் வழியாக ஒளி செல்லும் போது அதன் வேகம் என்னவாக இருக்கும்?
விடை : வைரத்தின் ஒளிவிலகல் எண் μ = 2.41
காற்றில் ஒளியின் திசைவேகம் c = 3 x 108 மீ/வி
வைரத்தில் ஒளியின் வேகம் V = ?
μ=CVV=Cμ=3×1082.41
V = 1.245 x 108 மீட்டர்/விநாடி.
9th Science Guide ஒளி Additional Important Questions and Answers
I. ஒரு மதிப்பெண் வினாக்கள்
- ஒளி என்பது …………………………….. ன் ஒரு வடிவம்
விடை : ஆற்றல் - ஒளி …………………………….. வடிவில் செல்கிறது.
விடை : மின்காந்த அலை - ஒளியைக் கதிர்வடிவில் கருதுவது …………………………….. என அழைக்கப்படும்.
விடை : கதிர் ஒளியியல் - ஒளியை அலை வடிவில் தருதுவது ……………………………..
விடை : அலை ஒளியியல் - ஒளிக்கதிரிகளின் கட்டு …………………………….. ஆகும்
விடை : ஒளிக்கற்றை - குத்துக் கோட்டுடன் படுகதிர் ஏற்படுத்தும் கோணம் ……………………………..
விடை : படுகோணம் - படுகோணமும், எதிரொளிப்பு கோணமும் ……………………………..
விடை : சமம் - படுகதிர், எதிரொலிப்புக்கதிர் மற்றும் குத்துக்கோடு ஆகியவை …………………………….. அமையும்
விடை : ஒரே தளத்தில் - ஒருவரின் முழு உருவமும் தெரிய ஆடியின் உயரம் நபரின் உயரத்தில் …………………………….. இருக்க வேண்டும்.
விடை : பாதி - சமதள ஆடியில் தோன்றுவது ……………………………..
விடை : இடவல மாற்றம் - கோளத்தின் மையத்தை நோக்கியபடி பளபளப்பு உள்ள ஆடி …………………………….. எனப்படும்.
விடை :குழி ஆடி - எதிரொளிக்கும் பரப்பு வெளிப்புறமாக வளைந்துள்ள ஆடி ……………………………..
விடை :குவி ஆடி - கோளக ஆடியின் வடிவியல் மையம் …………………………….. ஆகும்.
விடை :ஆடி மையம் (P) - ஆடி மையத்தையும் வளைவு மையத்தையும் இணைக்கும் செங்குத்துக் கோடு …………………………….. ஆகும்.
விடை : முதன்மை அச்சு - ஆடி மையத்திற்கும் வளைவு மையத்திற்கும் இடையே உள்ள தொலைவு ……………………………..
விடை : வளைவு ஆரம் (R) - ஆடி மையத்திற்கும் முதன்மை குவியத்திற்கும் இடையே உள்ள தொலைவு …………………………….. ஆகும்.
விடை : குவியத் தொலைவு (f) - வளைவு ஆரத்திற்கும், குவியத் தொலைவிற்கும் இடையே உள்ள தொடர்பு ……………………………..
விடை : R = 2f - ஆடியின் வளைவு மையம் வழியே செல்லும் ஒளிக்கதிர் எதிராளிக்கப்பட்ட பின் …………………………….. பாதையில் செல்லும்
விடை : அதே - முதன்மை அச்சுக்கு இணையாக செல்லும் ஒளிக்கதிர் எதிரொளிக்கப்பட்ட பிறகு …………………………….. வழியாகச் செல்லும்.
விடை : முக்கியக் குவியம் - எப்போதும் நேரான பிம்பமாக இருப்பது ……………………………..
விடை : மாயபிம்பம் - எதிராளிப்பிற்குப்பின் பொருளிலிருந்து செல்லும் கதிர்கள் சந்தித்தால் உருவாகும் பிம்பம் …………………………….. ஆகும்.
விடை : மெய்பிம்பம் - …………………………….. பிம்பத்தை தரையில் வீழ்த்த முடியாது
விடை : மாய பிம்பம் - வளைவு மையம் Cல் பொருள் வைக்கப்பட்டால் பிம்பம் …………………………….. ல் கிடைக்கும்.
விடை : ல் - F க்கும் Pக்கும் இடையில் பொருள் வைக்கப்பட்டால் கிடைக்கும் பிம்பம் ……………………………..
விடை : தலைகீழான மெய்பிம்பம் - ஆடியில் அனைத்து தொலைவுகளும் …………………………….. இருந்து அளவிடப்படுகின்றது.
விடை : ஆடிமையம் (P) - ஆடிச் சமன்பாடு ……………………………..
விடை : 1f=1u+1v - பிம்பத்தின் அளவிற்கும், பொருளின் அளவிற்கும் இடையேயான தகவு …………………………….. ஆகும்.
விடை : உருப்பெருக்கம். - கை மின் விளக்கு, வாகன முகப்பு விளக்கு மற்றும் தேடு விளக்குகளில் பயன்படுத்தப்படும் ஆடி ……………………………..
விடை : குழியாடி - குவியாடியின் ஆடி மையத்தில் படும் கதிர், முதன்மை அச்சுக்கு …………………………….. கோணத்தில் எதிரொளிக்கப்படும்.
விடை : அதே கோணத்தில். - வாகனங்களின் பின்னோக்குக் கண்ணாடியாக பயன்படுபவை ……………………………..
விடை : குவி ஆடிகள் - வெற்றிடத்தில் ஒளியின் வேகம் ……………………………..
விடை : 3,00,000 கி.மீ - ஒளி விலகலுக்கு காரணம் …………………………….. ல் ஏற்படும் மாறுபாடு ஆகும்.
விடை : ஒளியின் திசை வேகத்தில் - ஒளி அடர் குறை ஊடகத்திலிருந்து அடர்மிகு ஊடகத்தினால் செல்லும்போது …………………………….. விலகலடையும்
விடை : குத்துக்கோட்டை நோக்கி - அடர்மிகு ஊடகத்திலிருந்து அடர்குறை ஊடகத்திற்கு ஒளி செல்லும்போது …………………………….. விலகி செல்லும்.
விடை : குத்துக்கோட்டை விட்டு - ஸ்நெல் விதி ……………………………..
விடை : sinisinr= மாறிலி - கண்ணாடியின் ஒளி விலகல் எண் ……………………………..
விடை : 1.5 - 90° விலகுகோணத்தை ஏற்படுத்தும் படுகோணம் …………………………….. எனப்படும்.
விடை : மாறுநிலைக் கோணம். - முழு அக எதிரொளிப்பு ஏற்பட ஒளி …………………………….. ஊடகத்திலிருந்து …………………………….. அடர்மிகு, ஊடகத்திற்கு செல்ல
விடை : அடர்குறை வேண்டும். - வைரங்கள் மின்னுவதற்குக் காரணம்
விடை : முழு அக் எதிரொளிப்பு - வைரம் காற்று இடைமுகத்தின் மாறுநிலைக் கோணம்
விடை : 24.4° - ஒளி இழைகள் …………………………….. அடிப்படையில் செயல்படுகின்றன
விடை : முழு அக எதிரொளிப்பு - நீண்ட தொலைவிற்கு ஒலி, ஒளிச் சைகைகளை அனுப்ப …………………………….. பயன்படுகின்றன.
விடை : ஒளி இழைகள் - ஒளி இழையின் தந்தை ……………………………..
விடை : நரிந்தர் கபானி - லேசர், உயிரி மருத்துவக் கருவிகள், சூரிய ஆற்றல், மாசு நெறிசெய் தொழில் நுட்பம் ஆகியவற்றில் …………………………….. பயன்படுகின்றன.
விடை : ஒளி இழைகள் - கண்ணாடி மற்றம் நீரின் ஒளிவிலகல் எண் முறையே 32 மற்றும் 43 எனில் கண்ணாடி மற்றும் நீரில் ஒளியின் திசைவேகத்தின் தகவு ……………………………..
விடை : 8:9 - குழியாடி ஒன்றின் Pக்கும் Cக்கும் இடைவெளி 10 செ.மீ எனில் அதன் குவியத்தொலைவு ……………………………..
விடை : 5 செ.மீ - ஒளி விலகல் எண்ணின் அலகு ……………………………..
விடை : அலகு இல்லை - படுகோண மதிப்பு 45° எனில் எதிரொளிப்புக் கோண மதிப்பு ……………………………..
விடை : 45° - சமதள ஆடியில் தோன்றும் பிம்பம் ……………………………..
விடை : மாய பிம்பம் - குழி ஆடியில் பொருளை விடப் பெரிய, தலைகீழான மாய பிம்பம் கிடைக்க வேண்டும் எனில் பொருளின் நிலை ……………………………..
விடை : சிக்கும் முக்கும் இடையில் - காற்றின் ஒளிவிலகல் எண் ……………………………..
விடை : 1.00
II. சரியா? தவறா? தவறெனில் திருத்துக.
- காட்சியை ஏற்படுத்தக் கூடிய ஒரு வகை மின்காந்த ஆற்றலே ஒளி எனப்படும்
விடை: சரி - சமதள ஆடி, குழி ஆடி மற்றும் குவி ஆடி எப்போதும் மெய் பிம்பத்தை உருவாக்கும். விடை: தவறு — சமதள ஆடி, குழி ஆடி மற்றும் குவி ஆடி எப்போதும் மெய்பிம்பத்தை உருவாக்காது.
விடை: தவறு - நாம் காணும் இடவல மாற்றம் உண்மையில் ஆடியால் ஏற்பட்டது அல்ல. அது நம் புலனுணர்வினால் ஏற்படும் ஒரு நிகழ்வு தான்.
விடை: சரி - கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி வெளிப்பக்கமாக வளைந்திருந்தால் அது குழியாடிகள் எனப்படும்.
விடை: தவறு — கோளக ஆடிகளில் எதிரொளிக்கும் பகுதி வெளிப்பக்கமாக வளைந்திருந்தால் அது குவியாடி எனப்படும்.
III. பொருத்துக.

IV. கூற்று மற்றும் காரண வகை. கீழே கொடுக்கப்பட்டுள்ள (அ) முதல் (இ) வரையுள்ள தெரிவுகளில் எது மிகச் சரியானதோ அதைத் தேர்ந்தேடுக்கவும்
- கூற்று: எதிரொளிக்கும் பகுதியானது கோளக வடிவில் உள்ள ஆடிகள் கோளக ஆடிகள் எனப்படும்.
காரணம்: கோளக ஆடி எதிரொளிப்பின் அடிப்படையில் செயல்படுகிறது.
அ) கூற்றும் காரணமும் சரி, மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
இ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
விடை: அ. கூற்றும் காரணமும் சரி. மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம். - கூற்று: முதன்மை அச்சுக்கு இணையாகச் செல்லும் ஒளிக்கதிர், எதிரொளிக்கப்பட்டு பின்பு முக்கியக் குவியம் வழியாகச் செல்லும்.
காரணம்: முதன்மை அச்சுக்கு இணையாகச் செல்லும் ஒளிக்கதிர் 45° படுக்கோணத்தில் வளை பரப்பில் படுகிறது.
அ) கூற்றும் காரணமும் சரி, மேலும் கொடுக்கப்பட்ட காரணம் கூற்றுக்கான சரியான விளக்கம்
ஆ) கூற்று சரி, ஆனால் காரணம் தவறு
இ) கூற்று தவறு, ஆனால் காரணம் சரி.
விடை: ஆ. கூற்று சரி, ஆனால் காரணம் தவறு.